தீவிரவாதம்:
- தீவிரவாதம் என்பது சட்டவிரோதச் செயலில் ஈடுபடுவது அல்லது தனிநபர் பொது சொத்துகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவது அல்லது பொது மக்களை, அரசை அச்சுறுத்துவது என்பதாகும்.
- அரசியல் மற்றும் சமூக நோக்கங்களை அடைவதற்கு இதனை உபயோகிக்கின்றனர்.
- ஒரு அரசு சாரா இராணுவம் அல்லது குழுவால் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் வன்முறையின் வடிவமே தீவிரவாதமாகும்.
- நம் நாட்டில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.
- மும்பையில் 26 நவம்பர் 2008-ல் நடந்த தீவிரவாதத் தாக்குதல் மோசமான நிகழ்வுகளில் ஒன்றாக திகழ்கிறது.
- இது 26/11 தாக்குதல் என்று பரவலாக அறியப்படுகிறது.
தீவிரவாதத்திற்கான காரணங்கள்:
- சமூகத்தின் தற்போதைய அமைப்பைப் போலல்லாமல் அதனை மாற்ற முயற்சிக்கின்றனர்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட விளக்கங்களும், மத கருத்துகள் மற்றும் மதகோட்பாடு ஆகியவை தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றன.
சமூகப் பொருளாதாரக் காரணங்கள்
- பல்வேறு வகையான இழப்புகள் மக்களைத் தீவிரவாதம் நோக்கி உந்தித் தள்ளுகிறது.
புவியியல்
- தீவிரவாதக் குழுக்களை ஒழுங்கமைத்தலை புவியியல் காரணிகளும் தீர்மானிக்கின்றன.
- வறுமை, கல்வியறிவின்மை, அரசியல் சுதந்திரமின்மை வேலைவாய்ப்பின்மை: போதிய கல்வியறிவு இல்லாததால் அதிக இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருத்தல்.
வகுப்புவாதம்:
- மத அடிப்படையில் சண்டையிட்டுக் கொள்வது