தீவிரவாதம் வரையறு. அதற்கான காரணங்களை ஆராய்க

தீவிரவாதம்:

  • தீவிரவாதம் என்பது சட்டவிரோதச் செயலில் ஈடுபடுவது அல்லது தனிநபர் பொது சொத்துகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவது அல்லது பொது மக்களை, அரசை அச்சுறுத்துவது என்பதாகும்.
  • அரசியல் மற்றும் சமூக நோக்கங்களை அடைவதற்கு இதனை உபயோகிக்கின்றனர்.
  • ஒரு அரசு சாரா இராணுவம் அல்லது குழுவால் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் வன்முறையின் வடிவமே தீவிரவாதமாகும்.
  • நம் நாட்டில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.
  • மும்பையில் 26 நவம்பர் 2008-ல் நடந்த தீவிரவாதத் தாக்குதல் மோசமான நிகழ்வுகளில் ஒன்றாக திகழ்கிறது.
  • இது 26/11 தாக்குதல் என்று பரவலாக அறியப்படுகிறது.

தீவிரவாதத்திற்கான காரணங்கள்:

  • சமூகத்தின் தற்போதைய அமைப்பைப் போலல்லாமல் அதனை மாற்ற முயற்சிக்கின்றனர்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட விளக்கங்களும், மத கருத்துகள் மற்றும் மதகோட்பாடு ஆகியவை தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றன.

சமூகப் பொருளாதாரக் காரணங்கள்

  • பல்வேறு வகையான இழப்புகள் மக்களைத் தீவிரவாதம் நோக்கி உந்தித் தள்ளுகிறது.

புவியியல்

  • தீவிரவாதக் குழுக்களை ஒழுங்கமைத்தலை புவியியல் காரணிகளும் தீர்மானிக்கின்றன.
  • வறுமை, கல்வியறிவின்மை, அரசியல் சுதந்திரமின்மை வேலைவாய்ப்பின்மை: போதிய கல்வியறிவு இல்லாததால் அதிக இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருத்தல்.

வகுப்புவாதம்:

  • மத அடிப்படையில் சண்டையிட்டுக் கொள்வது

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!