துக்ளக் வம்சம் (பொ.ஆ. 1320 – 1414)

கியாசுதீன் துக்ளக் (1320 – 1324)

  • கியாசுதீன் துக்ளக், பிரபுக்கள் வகுப்பினருடன் சமரசக் கொள்கையைப் பின்பற்றினார்.
  • கியாசுதீன் துக்ளக் தனது மகன் ஜானாகானை வாராங்கல்லுக்கு எதிராகப் போரிட அனுப்பிவைத்தார்.
  • கியாசுதீன் துக்ளக் டெல்லிக்கு அருகே துக்ளதாபாத் எனும் புதிய நகரை நிர்மாணம் செய்ய அடிக்கல் நாட்டினார்.
  • ஜானாகான் முகமதுபின் துக்ளக் எனும் பெயரோடு 1325இல் அரியணை ஏறினார்.

முகமதுபின்துக்ளக் (1324 -1351)

  • முகமது-பின்-துக்ளக் கற்றவர், நற்பண்பு நிறைந்தவர், திறமை வாய்ந்த அரசர் என்ற போதிலும் இரக்கமற்றவர்.

தலைநகர் மாற்றம்

  • தில்லியிலிருந்து தென்னிந்தியாவை ஆள்வது கடினம் என்று முகமது-பின்-துக்ளக் கருதினார்.
  • தலைநகரை தௌலதாபாத்துக்கு மாற்றும் துணிவான முயற்சியை மேற்கொண்டார். மகாராஷ்ட்டிரத்திலுள்ள தேவகிரிக்கு முகமது-பின்-துக்ளக் சூட்டிய மறுபெயரே தௌலதாபாத்.
  • இந்தத் திட்டம் தோல்வியைத் தழுவியது.
  • எனவே மீண்டும் தலைநகரை தில்லிக்கு மாற்ற உத்தரவிட்டார்.

அடையாள நாணயங்கள்

  • இந்த நாணய முறை ஏற்கனவே சீனாவிலும், ஈரானிலும் நடைமுறையில் இருந்தது.
  • இந்தியாவில் நாணயங்களின் மதிப்பு அதிலிருந்த வெள்ளி உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன.
  • ஆனால் துக்ளக்கின் முயற்சி காலத்திற்கு முன் எடுத்த முயற்சியாகிவிட்டது.
  • வெண்கல நாணயங்களைப் போலியாக அடிப்பது எளிதாயிருந்தது.
  • வெண்கல நாணயங்களைத் திரும்பப் பெற வேண்டிய அளவுக்குப் புதிய நாணயங்கள் மதிப்பிழக்கத் தொடங்கின. இதனால் மீண்டும் வெள்ளி நாணயங்களை அரசாங்கம் வெளியிட்டு அதை ஈடு செய்ய வேண்டியதாயிற்று.

பிற புதுமை நடவடிக்கைகள்

  • தோ-ஆப் சமவெளிப் பகுதியில் ஒரு நீண்டகாலக் கடும் பஞ்சம் ஏற்பட்டிருந்த நேரத்தில் இம்முயற்சி எடுக்கப்பட்டது.
  • வேளாண்மையைக் கவனித்துக்கொள்ள ஒரு தனித்துறையை (திவான்அமிர் கோஹி) சுல்தான் ஏற்படுத்தினார்.
  • கால்நடைகளையும், விதைகளையும் வாங்க, கிணறுகள் வெட்ட விவசாயிகளுக்குக் கடன் தரப்பட்டது என்றாலும் இது பயன்தரவில்லை.

ஃபெரோஸ் துக்ளக் (1351-1388)

  • பெரோஸின் தந்தை ரஜப், கியாசுதீன் துக்ளக்கின் தம்பி ஆவார்.
  • கியாசுதீன் ஆட்சிக்கு வந்தபோது, ஃபெரோஸை 12,000 குதிரை வீரர்களைக் கொண்ட சிறப்புப் படைக்குத் தளபதியாக்கினார்.

பிரபுக்களுடன் சமரசக் கொள்கை

  • பிரபுக்கள் வகுப்பினரிடமும் மதத் தலைவர்களிடமும் ஃபெரோஸ் துக்ளக், சமரசக் கொள்கையைக் கடைப்பிடித்தார்.
  • முகமது-பின்-துக்ளக் ஆதரிக்காத ஒரு நடைமுறையான, அலுவலர்களைப் பரம்பரைபரம்பரையாகப் பணியமர்த்துகிற முறையை ஃபெரோஸ் மீண்டும் அறிமுகப்படுத்தினார்.
  • 1,80,000 அடிமைகளின் நல்வாழ்க்கையில் அடிமைகள் நலத்துறை அக்கறை செலுத்தியது.
  • கைவினைத் தொழில்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, அரசாங்கத்தின் தொழில்கூடங்களில் அவர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
  • அவரது காலத்திய ஒரே பெரிய இராணுவப் படையெடுப்பு, சிந்துவின் மீது தொடுக்கப்பட்டதாகும் (1362).

மதக்கொள்கை

  • தமது அரசை இஸ்லாமிய அரசாக அறிவித்தார்.
  • இஸ்லாமியர் அல்லாதவருக்கு ஜிஸியா எனும் வரியை விதித்தார்.
  • பிராமணர்களும் அதைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர்.
  • புதிய இந்துக் கோயில்கள் கட்டுவதை ஃபெரோஸ் தடை செய்யவில்லை.

பொதுப் பணிகள்

  • சட்லெஜ் நதியிலிருந்து ஹன்ஸிக்கு வெட்டிய கால்வாயும், யமுனையில் வெட்டிய மற்றொரு கால்வாயும் அவரது வலுவான பொதுப்பணி வளர்ச்சிக் கொள்கையைச் சுட்டுகின்றன.

வரிவிதிப்பு

மக்களிடையே நான்கு விதமான வரிகளை வசூலித்தார்.

  1. கரோஜ் – விளைச்சலில் 1/10 பங்கு
  2. கம்ஸ் – போர்களில் கைப்பற்றிய பொருட்களில் 1/5 பங்கு
  3. ஜிஸியா – தலைவரி
  4. ஜகாத் – குறிப்பிட்ட இஸ்லாமிய மதச் சடங்குகளைச் செய்வதற்கு வசூலிக்கப்படும் கட்டணம்.
ஜிஸியா

Ø  ஜிஸியா என்பது இஸ்லாமிய அரசுகளால் அவர்களின் நிலத்தில் வாழும் இஸ்லாமியர் அல்லாத குடிமக்களின் தலைக்கு இவ்வளவு என விதித்து வசூலிக்கப்பட்ட ஒரு வரியாகும்.

Ø  இந்தியாவில் முதன்முறையாக இஸ்லாமியர் அல்லாதார் மீது ஜிஸியா விதித்தவர் குத்புதீன் ஐபக்.

Ø  முகலாய அரசர் அக்பர், பதினாறாம் நூற்றாண்டில் ஜிஸியாவை ஒழித்தவர் என்றாலும், பதினேழாம் நூற்றாண்டில் ஔரங்கசீப் அவ்வரியை மீண்டும் அறிமுகப்படுத்தினார்.

 தைமூரின் படையெடுப்பு (பொ..1398)

  • கடைசி துக்ளக் அரசர் நசுருதீன் முகமது ஷா (1294 -1414). இவரது ஆட்சியின் போதுதான் மத்திய ஆசியாவிலிருந்து தைமூரின் படையெடுப்பு நிகழ்ந்தது.
  • தைமூர் தில்லியைச் சூறையாடினார்.
  • தைமூர் வந்து சேர்ந்த செய்தியைக் கேட்ட சுல்தான் நசுருதீன் தில்லியை விட்டுத் தப்பி ஓடிவிட்டார்.
  • கொல்லர், கல்தச்சர், தச்சர் போன்ற இந்திய கைவினைஞர்களைச் சிறைபிடித்துச் சென்ற தைமூர், தனது தலைநகர் சாமர்கண்டில் கட்டடங்களை எழுப்புவதில் அவர்களை ஈடுபடுத்தினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!