தேசிய சுகாதாரக் கொள்கை, 2017 பற்றி விரிவாக எழுதுக

தேசிய சுகாதாரக் கொள்கை, 2017:

  • சுகாதார மையங்கள் மூலம் விரிவான ஆரம்ப சுகாதார சேவை வழங்குவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

நோக்கங்கள்:

  • அனைவருக்கும் சுகாதார நலத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேம்பட்ட சுகாதார பராமரிப்பு
  • சிறந்த தரமான சுகாதார, நல வாழ்வு சேவைகளை உலகளாவிய அளவில் உயர்த்துதல்

இலக்குகள்:

  • எச்.ஐ.வி / எய்ட்ஸ்க்கான இலக்குகள் என்று அழைக்கப்படும். 90:90:90 என்ற சர்வதேச இலக்குகளை 2020-ம் ஆண்டில் அடைதல்.
  • மொத்த கருவுறுதல் வீதத்தை 2025-க்குள் 2.1 ஆக குறைத்தல்.
  • 2020-ம் ஆண்டிற்குள் தாய் இறப்பு விகிதத்தை 100 ஆகக் குறைத்தல்
  • 2019-ம் ஆண்டிற்குள் குழந்தை இறப்பு விகிதத்தை 28 ஆகக் குறைத்தல்
  • 2018-ம் ஆண்டிற்குள் தொழுநோயை முற்றிலும் ஒழித்தல்
  • 2025-ம் ஆண்டிற்குள் காசநோயை முற்றிலும் ஒழித்தல்
  • 2025-ம் ஆண்டிற்குள் கண் பார்வையற்றோரின் எண்ணிக்கையை 1000 க்கு 0.25 ஆகக் குறைத்தல். மேலும் நோய் பாதிப்பைத் தற்போதைய நிலையிலிருந்து மூன்றில் ஒரு பகுதியாகக் குறைத்தல்

சிறப்பம்சங்கள்:

  • சுகாதாரத் துறை செலவினங்களை 2025 க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% ஆக படிப்படியாக அதிகரிக்கச் செய்தல்
  • அனைத்து பொது மருத்துவமனைகளிலும் இலவச மருந்துகள் (ம) இலவச அவசர சிகிச்சை சேவைகளை வழங்குதல்
  • வளங்களை வள ஆதாரங்களின் ஒதுக்கீடு செய்தல்: இக்கொள்கை பெரும்பங்கை (மூன்றில் இரண்டு (அ) அதற்கு மேல்) ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துகிறது.
  • இக்கொள்கை நோய் தொற்றுதல் / நிகழ்வினை குறைத்தல், சுகாதார நிலை, சுகாதார சுகாதார அமைப்பின் செயல்திறன் (ம) சுகாதார அமைப்பினை வலுவாக்குதல் போன்றவற்றை குறிப்பிட்ட இலக்காகக் கொண்டிருக்கும்.
  • உடல்நலம், சுகாதார அமைப்பு (ம) சேவைகளுக்கு தேவையான நிதியளித்தல், நோய்த் தடுப்பு (ம) பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்
  • இலவச மருந்துகள், நோயறிதல் (ம) பிற அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்குவதன் மூலம் பொது சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்துதல்.
  • தடுப்பு (ம) ஊக்குவிப்புடன் கூடிய தரமான சுகாதார சேவைகளை வழங்குதல்
  • சுகாதார வசதிகளுடன் இணைக்கப்பட்ட சுகாதார அட்டை
  • நோயாளிகளை மையப்படுத்திய அணுகுமுறை:
  • பிரச்சினைகளை விரிவில் தீர்ப்பதற்காக மருத்துவ தீர்ப்பாயத்தை அமைத்தல்.
  • தேசிய டிஜிட்டல் சுகாதார அதிகார அமைப்பை ஏற்படுத்தி, தொடர் கவனிப்பு சேவைகளை வரைமுறைப்படுத்துதல், பெருக்குதல் சுகாதாரத்தை செயல்படுத்துதல் டிஜிட்டல்
  • நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைத்தல்
  • தரமான பராமரிப்பு: சரியான கவனிப்பில்லாத நிலையை ஒழிக்க நிலையான ஒழுங்கு முறை கட்டமைப்பில் கவனம் செலுத்துதல்.
  • இந்தியாவில் உருவாக்குவோம் திட்டம்: இந்தியாவில் உற்பத்தி செய்து பிரத்யேக உள்நாட்டு தயாரிப்புகளை (மருந்துப் பொருட்களை வழங்குதல்.
  • சுகாதார அமைப்பில் செயல்திறனை மேம்படுத்த டிஜிட்டல் கருவிகளை பெரும் அளவில் பயன்படுத்திட இக்கொள்கை வலியுறுத்துகிறது.
  • தனியார் துறை ஈடுபாடு – தேசிய இலக்குகளை அடைவதற்காக தனியார் துறையுடன் இணைந்து சுகாதாரத் துறையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் துணை செய்தல்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!