நிபா வைரஸ் பற்றியும் அதன் பரவல்,நோய் கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விவரி 

நிபா வைரஸ்

  • நிபா வைரஸ் என்செபாலிடிஸை ஏற்படுத்தும் உயிரினம் ஒரு ஆர் என்.ஏவாகும். அல்லது பாராமிக்சோவிரிடே குடும்பத்தைச் சார்ந்த ரிபோநியூக்ளிக் அமில வைரஸ், ஹெனிபா வைரஸ் வகை ஆகும்
  • நிபா வைரஸ் தொற்றானது விலங்குகளிடமிருந்து பரவுகின்ற ஒரு ஜீனோடிக் நோயாகும்.

பரவுதல்

  • அசுத்தமான உணவு மூலமாகவோ அல்லது நேரடியாக ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கோ பரவுகிறது.
  • பாதிக்கப்பட்டவர்களில் இந்த நோயானது, கடுமையான சுவாச நோய் மற்றும் அபாயகரமான என்செபாலிட்டிஸ் போன்ற பல விதமான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
  • பன்றிகள் போன்ற விலங்குகளிலும் இந்த வைரஸ் கடுமையான நோய் தாக்குதலை ஏற்படுத்துகிறது

நோய் கண்டறிதல்:

  • செராலஜி – இரத்த பரிசோதனை மூலம் ஆன்டிபாடிகளைக் (எதிர்பொருளைக்) கண்டறிதல்.
  • ஹிஸ்டோபேதாலஜி – திசுக்கள் பற்றிய நுண்ணிய ஆய்வு.
  • பி.சி.ஆர். வைரஸ் டி.என்.ஏ.வைக் காண பாலிமரேஸ் சங்கிலி விளைவு – தொழில்நுட்பம்.

உறுதிபடுத்தும் சோதனைகள்:

  • சீரம் நடுநிலைப்படுத்தும் சோதனை.
  • எலைசா
  • ஆர்டி-பி.சி.ஆர்

தடுப்பூசி:

  • குறிப்பாக நிபா வைரஸை அழிக்கும் தடுப்பூசி மருந்துகள் தற்போது கண்டறியவில்லை.
  • உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுபடி, ரைபோவைரினானது, குமட்டல், வாந்தி மற்றும் நோயுடன் தொடர்புடைய வலிப்பு போன்றவற்றை குறைக்கலாம்.
  • பாதிக்கப்பட்ட நபர்கள் மருந்துவமனையில் சேர்க்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
  • மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுவதைத் தடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
  • வைரஸை விரைவாகக் கண்டறிவதற்கும், கட்டுபாட்டு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும், பொருத்தமான கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்பட வேண்டும்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!