பட்டய சட்டம் 1813, பட்டய சட்டம் 1833 & பட்டய சட்டம் 1853 

பட்டய சட்டம் 1813

  • கிழக்கிந்திய கம்பெனியின் வணிக உரிமையை 20 வருடங்களுக்கு புதுப்பித்தது.
  • கம்பெனியின் முற்றுரிமை நீக்கப்பட்டது.
  • பிரிட்டீஸ் அரசு இந்தியர்களின் கல்விக்காக ஆண்டிற்கு 1 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது.
  • இந்தியாவின் ஐரோப்பியர்களின் நலனிற்காக பாதிரியார்களையும் ஆயர்களையும் நியமித்தது.
  • பிரிட்டீஸ் வணிகர்களும் மதப் பரப்புரையளர்களும் இந்தியாவில் தங்க அனுமதி அளிக்கப்பட்டது.

பட்டய சட்டம் 1833 

  • வில்லியம் கோட்டையின் தலைமை ஆளுநர் என்பது மாற்றப்பட்டு ஒருங்கிணைந்த பிரிட்டீஸ் இந்தியாவின் தலைமை ஆளுநர் என மாற்றப்பட்டது. முதல் பிரிட்டீஸ் இந்திய தலைமை ஆளுநர் வில்லியம் பென்டிங் பிரபு ஆவார்.
  • குடிமைப் பணியாளர்கள் நியமனத்தில் போட்டித் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது.
  • கம்பெனியின் வணிக நடவடிக்கைகள் அனைத்தும் நீக்கப்பட்டு கம்பெனி ஒரு நிர்வாக அமைப்பாக மாற்றப்பட்டது.
  • இந்தியச் சட்டக் குழு ஏற்படுத்தப்பட்டு அனைத்து சட்டங்களும் இக்குழுவால் இயற்றப்பட்டு பிரிட்டீஸ் பாராளுமன்றத்தின் அனுமதி பெற வேண்டும் என மாற்றப்பட்டது. இச்சட்டம் இந்தியர்களுக்கு உயர் பதவி வழங்க அனுமதி அளித்தது.

பட்டய சட்டம் 1853 

  • இச்சட்டம் இந்தியாவை கம்பெனி நிர்வகிக்க காலவரையற்ற அனுமதி அளித்தது.
  • சட்டமன்ற குழுவின் உறுப்பினர் எண்ணிக்கையானது 6லிருந்து 12ஆக உயர்த்தப்பட்டது.
  • முதல் முறையாக தலைமை ஆளுநர் குழுவின் சட்டம் மற்றும் நிர்வாக பணிகள் பிரிக்கப்பட்டது.
  • முதல் முறையாக சட்டமன்ற குழுவில் இந்திய பிரதிநிதிகளை நியமிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவர்கள் வங்கம், மும்பை, சென்னை மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • குடிமையியல் பணி நியமனங்களில் பொது போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!