பழமொழி நானூறு
- பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார்.
- பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- பழமொழி நானூறு, நானூறு (400) பாடல்களைக் கொண்டது.
- ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது.
முன்றுறை அரையனார்
- முன்றுறை அரையனார் கி.பி. நான்காம் (4) நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
- முன்றுறை அரையனார் சமண சமயத்தைச் சேர்ந்தவர். பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இதனை அறியமுடிகிறது.
பாடல்
மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும் பாரி மடமகள் பாண்மகற்க
பாடலின் பொருள்
மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர்.
பாடல்
நீர் உலையுள் கொண்டு பொன் திறந்து கொண்டு
நல்கினாள் ஒன்றாகு முன்றிலோ இல்*
பாடலின் பொருள்
பாரி மகளிர் உலை நீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர்.
அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு, எதுவும் இல்லை என்பதை அறியலாம்.
சொல்லும் பொருளும்
- மாரி – மழை
- வறந்திருந்த – வறண்டிருந்த
- புகவா – உணவாக
- மட மகள் – இள மகள்
- நல்கினாள் – கொடுத்தாள்
- முன்றில்* – வீட்டின் முன் இடம் (திண்ணை) இங்கு வீட்டைக் குறிக்கிறது
இப்பாடலில் இடம் பெற்றுள்ள பழமொழி ஒன்றாகு முன்றிலோ இல் என்பதாகும். இதன் பொருள் ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பது.
முந்தைய ஆண்டு வினாக்கள்
‘கற்றவனுக்குக் கட்டுச் சோறு வேண்டாம்’ என்று குறிப்பிடும் இலக்கியம் (2 times)
(A) மூதுரை
(B) நாலடியார்
(C) பழமொழி நானூறு
(D) நான்மணிக்கடிகை
‘பொன் திறந்து கொண்டு புகாவா நல்கினாள்’ -பழமொழி நானூறு.
இதில் புகாவா என்பதன் பொருள்
(A) நீர்
(B) உணவு
(C) காற்று
(D) பொருள்
(E) விடை தெரியவில்லை
‘அறுமோ, நரி நக்கிற்று என்று கடல்’? – இது பயின்று வந்த நூல் எது?
(A) பழமொழி
(B) நாலடியார்
(C) திருக்குறள்
(D) ஆசாரக் கோவை
பொருத்தமான பழமொழியைக் கண்டறி ‘கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா’.
(A) ஞாயிறைக் கைமறைப்பார் இல்
(B) முள்ளினால் முள்களையும் ஆறு
(C) ஆற்றுணா வேண்டுவது இல்
(D) பாம்பு அறியும் பாம்பின் கால்
“கற்றவர்க்கு எல்லா நாடுகளும் தம்முடைய நாடுகளே” சங்கப்புலவர் – என்ற கருத்தமைந்த பாடலைப் பாடியவர்
(A) கணியன் பூங்குன்றனார்
(B) முன்றுறை அரையனார்
(C) கணிமேதாவியார்
(D) திருவள்ளுவர்
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.
———————————————————————————
TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
Org Code : owvff
Desktop / Laptop
http://web.classplusapp.com
Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563
———————————————————————————