ஹரப்பா – நகர நாகரிகம்

நகர நாகரிகம்

ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம் அதற்கான காரணங்கள்

  • சிறப்பான நகரத் திட்டமிடல்
  • சிறப்பான கட்டிடக்கலை வேலைப்பாடு
  • தூய்மைக்கும், பொது சுகாதாரத்திற்கும் கொடுக்கப்பட்ட அதிக முன்னுரிமை
  • தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகள்
  • விவசாய மற்றும் கைவினைத் தொழில்களுக்கான திடமான அடித்தளம்.

வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும்

  • வேளாண்மை முக்கிய ஆதாரமாக விளங்கியது.
  • கோதுமை, பார்லி, அவரை வகைகள், கொண்டைக்கடலை, எள், வெவ்வேறு தினை வகைகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களைப் பயிரிட்டார்கள்.
  • ஹரப்பா மக்கள் இரட்டைப்பயிரிடல் முறையைப் பின்பற்றினார்கள்.
  • ஹரப்பா மக்கள் உழவுக்குக் கலப்பையைப் பயன்படுத்தினார்கள்.
  • பாசனத்துக்குக் கால்வாய்களையும் கிணறுகளையும் பயன்படுத்தினார்கள்.

விலங்குகளைப் பழக்கப்படுத்துதல்

  • செம்மறியாடு, வெள்ளாடு, கோழி உள்ளிட்ட பறவைகளை வளர்த்தார்கள்.
  • எருமை, பன்றி, யானை போன்ற விலங்குகள் குறித்த அறிவும் அவர்களுக்கு இருந்தது.
  • ஆனால் ஹரப்பா பண்பாட்டில் குதிரை இல்லை.
  • ஹரப்பாவில் மாடுகள் செபு எனப்பட்டன.
  • ஹரப்பா மக்களின் உணவில் மீன், பறவை இறைச்சி ஆகியவையும் இருந்தன.
  • காட்டுப் பன்றி, மான், முதலை ஆகியவற்றுக்கான சான்றுகளும் ஹரப்பா நாகரிகப் பகுதிகளில் கிடைத்துள்ளன.

கைவினைத் தயாரிப்பு

  • கார்னிலியன் (மணி), ஜாஸ்பர், கிரிஸ்டல் (படிகக்கல்). ஸ்டீட்டைட் (நுரைக்கல்) ஆகியவற்றிலும் செம்பு, வெண்கலம், தங்கம் ஆகிய உலோகங்களிலும் சங்கு, பீங்கான் சுடுமண் ஆகியவற்றிலும் அணிகலன்களைச் செய்தார்கள். இவை மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
பொருள்நகரம்
சங்குநாகேஷ்வர், பாலகோட்
வைடூரியம்ஷார்டுகை
கார்னிலியன் (மணி)லோத்தல்
ஸ்டீட்டைட் (நுரைக்கல்)தெற்கு ராஜஸ்தான்
செம்புராஜஸ்தான், ஓமன்

மொகஞ்சதாரோதலைவர்

  • அமர்ந்த நிலையில் உள்ள ஓர் ஆண் சிலை மொகஞ்சதாரோவில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெண்கல சிலை

  • மொகஞ்சதாரோவில் வெண்கலத்தால் ஆன சிறிய பெண் சிலை கிடைத்தது. இவை ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என சர் ஜான் மார்ஷல் நினைத்தார்.

மட்பாண்டங்கள்

  • மட்பாண்டங்கள் சிவப்பு வண்ணத்தில் இருந்தன. அதில் கருப்பு வண்ணத்தில் அழகிய வேலைப்பாடுகளைச் செய்தனர்.

உலோகங்களும், கருவிகளும், ஆயுதங்களும்

  • மனிதர்களால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம் செம்பு.
  • ஹரப்பா நாகரிகம் வெண்கலக் கால நாகரிகமாகும்.
  • ரோரிசெர்ட் எனப்படும் படிகக்கல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள்.

துணிகளும், அணிகலன்களும்

  • பொதுவாக பருத்தி ஆடைகளே பயன்பாட்டில் இருந்தன.
  • கம்பளி ஆடைகளும் உபயோகப்படுத்தப்பட்டன.
  • மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட நடனமாடும் பெண் சிலையின், முழங்கையின் மேல்பகுதி வரை வளையல்கள் காணப்படுகின்றன.
  • சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய சிவப்பு நிற மணிக்கற்களைப் (Carnelian) பயன்படுத்தினர்.

வணிகமும், பரிவர்த்தனையும்

  • க்யூனிபார்ம் கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன.
  • அவற்றில் காணப்படும் “மெலுகா” என்னும் சொல் சிந்து பகுதியைக் குறிக்கிறது.
  • மெசபடோமியப் புராணத்தில் மெலுகா குறித்து கீழ்க்கண்ட வரிகள் இடம்பெற்றுள்ளன.
  • “உங்களது பறவை ஹஜா பறவை ஆகுக. அதன் ஒலி அரண்மனையில் கேட்கட்டும்”.
  • ஹஜா பறவை மயில் என்று சில தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள்.
  • சுமேரியாவின் அக்காடிய பேரரசிற்குட்பட்ட அரசன் நாரம்சின் என்பவர் சிந்து வெளிப் பகுதியிலுள்ள மெலுக்கா என்னும் இடத்தில் இருந்து அணிகலன் வாங்கியதாகக் குறிப்பு எழுதியுள்ளார்.
  • குஜராத்திலுள்ள லோத்தலில் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • லோத்தல் என்னும் இடம் குஜராத்தில் சபர்மதி ஆற்றின் ஒரு துணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!