பாதுகாப்பு மற்றும் முன்னேற்றங்களில் பிரிட்டீஸாரின் பங்கு

பாதுகாப்பு மற்றும் முன்னேற்றங்களில் பிரிட்டீஸாரின் பங்கு

பிண்டாரி போர் (1816 – 1818)

  • மத்திய மாகாணங்கள் மற்றும் இராஜ புத்திர பகுதிகளைச் சேர்ந்த கொள்ளைக் கூட்டமே பிண்டாரிகள் எனப்பட்டன.
  • இவர்கள் குறிப்பிட்ட மதத்தையோ அல்லது ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் அல்ல.
  • இக்குழுவில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என கலந்து இருந்தனர்.
  • துணைப் படைத் திட்டத்தின் மூலம் வேலையிழந்த சிப்பாய்கள் இக்கூட்டத்தில் இணைந்தனர்.
  • 1818ன் முடிவில் பிண்டாரிகள் ஆங்கிலேய அரசால் ஒடுக்கப்பட்டனர்.

தக்கர்களை ஒடுக்குதல்

  • கடவுள் காளியின் பெயரில் பயணிகளை கொலை செய்து கொள்ளையடிப்பதை
  • வழக்கமாக கொண்ட மத்திய இந்தியாவைச் சேர்ந்த கொள்ளைக் கும்பலே தக்கர்கள் எனப்பட்டனர்.
  • 18 ஆம் நூற்றாண்டில் தக்கர்களின் எண்ணிக்கையானது அதிகரித்தது.
  • தக்கர்களை ஒழிக்க 1830ல் கர்னல் வில்லியம் ஸ்லீமேன் என்பவரின் தலைமையின் கீழ் ஒரு படையை வில்லியம் பெண்டிங் பிரபு அமைத்தார்.
  • அடுத்த 5 ஆண்டுகளில் 3000 தக்கர்கள் கைது செய்யப்பட்டு பலர் கொலை செய்யப்பட்டு மற்றும் பலர் அந்தமான் தீவுகளுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
  • இவ்வெற்றியின் மூலம் வில்லியம் ஸ்லீமேன் ‘தக்கீ ஸ்லீமேன்’ என அழைக்கப்பட்டார்.

இரயில்வே அறிமுகம்

  • இந்தியாவில் இரயில் சேவையை கொண்டுவர 3 காரணங்கள் பிரிட்டீசாருக்கு இருந்தது.
  1. பொருளாதாரம்
  2. நிர்வாகம்
  3. பாதுகாப்பு
  • 1853 ல் டல்ஹௌசி பிரபு இரயில் கொள்கையை உருவாக்கினார். இக்கொள்கையின் படி 5 சதவீத இலாபம் முதலீட்டாளருக்கு உறுதிசெய்யப்பட்டது.
  • இந்தியாவின் முதல் இரயில் பாதை 1853ல் மும்பை மற்றும் தானேவிற்கு இடையில் போடப்பட்டது.
  • 1855ல் ஹவுரா மற்றும் இராணிகஞ்சு இடையேயும் 1856ல் சென்னை மற்றும் அரக்கோணம் இடையேயும் இரயில் பாதை ஏற்படுத்தப்பட்டது.
  • இதனால் டல்ஹௌசி இந்திய இரயில்வேயின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

தந்தித் தொடர்பு

  • 1852 ல் தந்தி அலுவலகங்கள் இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டன.
  • 1852ல் ஓசாகன்சி என்பவர் தந்தித் துறையின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.
  • கல்கத்தா, பெஷாவர், மும்பை மற்றும் இணைக்கப்பட்டது. சென்னைப் பகுதிகள் தந்தி மூலம்
  • தந்தித் தொடர்பானது 1857 கலகத்தினை அடக்க ஆங்கிலேயருக்கு பெரும் உதவியாக அமைந்தது.
  • டல்ஹௌசி இந்திய தந்தித் துறையின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
  • இந்தியாவில் 2013ல் தந்தித் தொடர்பானது நிறுத்தப்பட்டது.

தபால் சீர்திருத்தங்கள்

  • 1854ல் டல்ஹெசி பிரபு தபால் அலுவலகச் சட்டத்தை ஏற்படுத்தினார்.
  • இந்தியா முழுவதும் ஒரே தபால் சேவை முறை அறிமுகம் செய்யப்பட்டது.
  • தபால் தலை அறிமுகம் செய்யப்பட்டது.
  • இத்தகைய சீர்திருத்தங்களின் விளைவாக பிரபு வை உருவாக்கியவர் என போற்றப்படுகிறார். டல்ஹௌசி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!