Contents show
பார்சி சீர்திருத்த இயக்கம்
- 1851 இல் பர்துன்ஜி நௌரோஜி & S.S.பெங்காலி என்பார் “ரஹ்னுமாய் மஜ்தயாஸ்னன் சபா” (பார்சிகளின் சீர்திருத்தச் சங்கம்) எனும் அமைப்பை ஏற்படுத்தினார்.
- செய்தித்தாள்: ராஸ்டீ கோப்தார் (உண்மை விளம்பி).
- இவ்வமைப்பின் தலைவர்கள் திருமண நிச்சயம், திருமணம், இறப்பு ஆகிய சந்தர்ப்பங்களில் செய்யப்படும் விரிவான சடங்குகளை விமர்சனம் செய்தனர்.
- குழந்தைத் திருமணம், சோதிடத்தைப் பயன்படுத்துதல் ஆகிய இரண்டையும் எதிர்த்தனர்.
- பம்பாய் பார்சி சமூகத்தைச் சேர்ந்த பெர்ரம்ஜி மல்பாரி என்பார் குழந்தைத் திருமணப் பழக்கத்திற்கு எதிரான சட்டம் இயற்றப்பட வேண்டுமென இயக்கம் நடத்தினார்.
- இச்சமூகம் பெரோசா மேத்தா, தீன்சா வாச்சா போன்ற சிறந்த தலைவர்களை உருவாக்கியது.
சீக்கியர் சீர்திருத்த இயக்கம்
நிரங்கரி இயக்கம்
- நிறுவனர்: பாபா தயாள் தாஸ்
- நிரங்கரி (உருவமற்ற) இறைவனை வழிபட வேண்டுமென வலியுறுத்தினார்.
- சிலைவழிபாடு. சிலைவழிபாட்டோடு தொடர்புடைய சடங்குகள் ஆகியவற்றை மறுத்தல், குருநானக்கின் தலைமையையும் ஆதிகிரந்தத்தையும் மதித்தல் ஆகியன அவருடைய போதனைகளின் சாரமாக விளங்கின.
- மது அருந்துவதையும், மாமிசம் உண்பதையும் கைவிடும்படி வலியுறுத்திக் கூறினார்.
நாம்தாரி இயக்கம்
- நிறுவனர்: பாபாராம் சிங்
- நாம்தாரி இயக்கம் சீக்கியர்களின் அடையாளங்களை (வாளைத் தவிர) அணிய வற்புறுத்தியது.
- வாளுக்குப் பதிலாகத் தனது சீடர்களை லத்தியை வைத்துக் கொள்ளும்படி ராம்சிங் கூறினார்.
- இவ்வியக்கம் ஆணும் பெண்ணும் சமம் எனக் கருதியது, விதவை மறுமணத்தை ஆதரித்தது.
- வரதட்சணை முறையையும் குழந்தைத் திருமணத்தையும் தடைசெய்தது.
சிங்சபா ,1873, அமிர்தசரஸ்
- சீக்கிய மதத்தின் புனிதத்தை மீட்டெடுப்பதே சபாவின் முக்கியக் குறிக்கோளாக அமைந்தது.
- ஆங்கிலேயரின் ஆதரவுடன் அமிர்தரஸில் சீக்கியர்களுக்கென கால்சா கல்லூரி உருவாக்கப்பட்டது.
- சிங்சபாவே அகாலி இயக்கத்தின் முன்னோடி அமைப்பாகும்.