1851 இல் பர்துன்ஜிநௌரோஜி & S.S.பெங்காலி என்பார் “ரஹ்னுமாய் மஜ்தயாஸ்னன் சபா” (பார்சிகளின் சீர்திருத்தச் சங்கம்) எனும் அமைப்பை ஏற்படுத்தினார்.
செய்தித்தாள்: ராஸ்டீ கோப்தார் (உண்மை விளம்பி).
இவ்வமைப்பின் தலைவர்கள் திருமண நிச்சயம், திருமணம், இறப்பு ஆகிய சந்தர்ப்பங்களில் செய்யப்படும் விரிவான சடங்குகளை விமர்சனம் செய்தனர்.
குழந்தைத் திருமணம், சோதிடத்தைப் பயன்படுத்துதல் ஆகிய இரண்டையும் எதிர்த்தனர்.
பம்பாய் பார்சி சமூகத்தைச் சேர்ந்த பெர்ரம்ஜி மல்பாரி என்பார் குழந்தைத் திருமணப் பழக்கத்திற்கு எதிரான சட்டம் இயற்றப்பட வேண்டுமென இயக்கம் நடத்தினார்.
இச்சமூகம் பெரோசா மேத்தா, தீன்சா வாச்சா போன்ற சிறந்த தலைவர்களை உருவாக்கியது.
சீக்கியர் சீர்திருத்த இயக்கம்
நிரங்கரி இயக்கம்
நிறுவனர்: பாபா தயாள் தாஸ்
நிரங்கரி (உருவமற்ற) இறைவனை வழிபட வேண்டுமென வலியுறுத்தினார்.
சிலைவழிபாடு. சிலைவழிபாட்டோடு தொடர்புடைய சடங்குகள் ஆகியவற்றை மறுத்தல், குருநானக்கின் தலைமையையும் ஆதிகிரந்தத்தையும் மதித்தல் ஆகியன அவருடைய போதனைகளின் சாரமாக விளங்கின.
மதுஅருந்துவதையும், மாமிசம்உண்பதையும் கைவிடும்படி வலியுறுத்திக் கூறினார்.
நாம்தாரி இயக்கம்
நிறுவனர்: பாபாராம் சிங்
நாம்தாரி இயக்கம் சீக்கியர்களின் அடையாளங்களை (வாளைத் தவிர) அணிய வற்புறுத்தியது.
வாளுக்குப் பதிலாகத் தனது சீடர்களை லத்தியை வைத்துக் கொள்ளும்படி ராம்சிங் கூறினார்.
இவ்வியக்கம் ஆணும் பெண்ணும் சமம் எனக் கருதியது, விதவை மறுமணத்தை ஆதரித்தது.
வரதட்சணை முறையையும் குழந்தைத் திருமணத்தையும் தடைசெய்தது.
சிங்சபா ,1873, அமிர்தசரஸ்
சீக்கிய மதத்தின் புனிதத்தை மீட்டெடுப்பதே சபாவின் முக்கியக் குறிக்கோளாக அமைந்தது.
ஆங்கிலேயரின் ஆதரவுடன் அமிர்தரஸில் சீக்கியர்களுக்கென கால்சா கல்லூரி உருவாக்கப்பட்டது.