பிக் டேட்டா என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் யாவை?

பிக் டேட்டா

  • பிக் டேட்டா என்பது பாரம்பரிய தரவு செயலாக்க பயன்பாட்டு மென்பொருளால் கையாள முடியாத அளவுக்கு பெரிய அல்லது சிக்கலான தரவுத் தொகுப்புகளைக் குறிக்கிறது.

பயன்பாடுகள்

  • ஆளுகை: பெருந்தரவானது இலக்கு விநியோகத்திற்காக மக்கள் தொகைக்கு ஏற்ப பகுப்பாய்வு செய்யவும், பயனாளர்களின் பதிவுகளை பராமரிக்கவும், எதிர்கால போக்குகள் மற்றும் தேவைகளை கணிக்கவும் உதவுகிறது. 
  • முதலீடு, சேமிப்பு (ம) செலவு ஆகியவற்றை மறுபரீசிலனை செய்யவும் உதவுகிறது.
  • வணிகங்கள்: வாடிக்கையாளர்களின் சுயவிவரம் மற்றும் தேவைகளை புரிந்து கொள்ளவும், விற்பனைபில் மையப்படுத்தப்பட்ட தரவு மற்றும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் தனிப்பட்ட வரலாறு போன்றவற்றை பராமரிக்க உதவுகிறது.
  • உடல்நலம் சுகாதாரத்தில் புற்றுநோய்க்கான புதிய மருந்துகளை: கண்டறியவும், சிகிச்சையை மேம்படுத்துவும், எந்தவொரு நோய்க்கு முன் தோன்றும் அறிகுறிகளை கொண்டு நோய்களை கணிக்கவும் பெருந்தரவு பயன்படுகிறது.
  • பாதுகாப்பு: போலீஸ் படைகளுக்கும், பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் பெருந்தரவானது சைபர் தாக்குதல்கள், கிரெட்டிட் கார்டு மோசடிகளை கண்டறிதல், பயங்கரவாதத்தை தடுத்தல் மற்றும் குற்றச் செயல்பாடுகளை கணித்தல் போன்றவற்றிற்கு உதவுகிறது.

நகரமயமாக்கல்: பெருந்தரவானது நகரங்களின் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!