புறநானூறு-3 கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

பாண்டிய மன்னன் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

  • பாண்டிய மன்னன் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின் பாடல்கள் புறநானூற்றில் (1) ஒன்றும் பரிபாடலில் (1) ஒன்றும் இடம் பெற்றுள்ளன.
  • பாண்டிய மன்னருள் பெருவழுதி என்னும் பெயரில் பலர் இருந்தனர். ஆயினும், அரிய பண்புகள் அனைத்தையும் தம் இளமைக்காலத்திலேயே பெற்றிருந்த காரணத்தால் இவரை இளம்பெருவழுதி என்று அழைத்தனர்.
  • கடற்பயணம் ஒன்றில் இறந்துபோனமையால் இவர், கடலுள் மாயந்த இளம்பெருவழுதி என்று பிற்காலத்தவரால் அழைக்கப்படுகின்றார்.

திணை  –  பொதுவியல் திணை

துறை  –   பொருண் மொழிக் காஞ்சித் துறை

பொருண் மொழிக் காஞ்சித் துறை

  • மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுதல் பொருண் மொழிக் காஞ்சித் துறையாகும்.

பாடல் – 182

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்! *

துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழ் எனின் உயிருங் கொடுக்குவர், பழியெனின் பெறினும் கொள்ளலர் அயர்விலர் * * *

அன்ன மாட்சி அனையர் ஆகித் தமக்கென முயலா நோன் தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

பா வகை : நேரிசை ஆசிரியப்பா

 சொல்லும் பொருளும்

  • தமியர் – தனித்தவர்
  • துஞ்சல் – சோம்பல்
  • மாட்சி – பெருமை
  • தாள் – முயற்சி
  • முனிதல் – வெறுத்தல்
  • அயர்வு – சோர்வு
  • நோன்மை – வலிமை

 பாடலின் பொருள்

  • தமக்காக உழைக்காமல் பிறர்க்காகப் பெரிய முயற்சியுடன் உழைப்பவர்கள், இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும் அஃது உயிர்க்காப்பது என்பதற்காகத் தனித்து உண்ண மாட்டார்கள்;
  • யாரையும் வெறுக்க மாட்டார்கள். சோம்பலின்றிச் செயல்படுவார்கள், பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்.
  • புகழ்வரும் என்றால் தம் உயிரையும் கொடுப்பார்கள், உலகம் முழுவதும் கிடைப்பதாயிருந்தாலும் பழிவரும் செயல்களைச் செய்மாட்டார்கள். எதற்கும் மனம் தளரமாட்டார்கள்.
  • இத்தகைய சிறப்புடையோர் இருப்பதால் தான் இவ்வுலகம் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது

 பாடலின் சுருக்கம்

கிடைத்திருப்பதென்னவோ அரிய அமிழ்தம்! அதனால் என்ன தனித்துண்ணத் தகுமோ? எமக்கது பெரிதில்லை எவரிடத்தும் வெறுப்பில்லை.

சோம்பல் சுயமழிக்கும் உயர்ந்தோர் அஞ்சுவது அஞ்சுவர் தாமும் புகழா இதோ எம் உயிர். இகழா பூமிப்பரிசும் பொருட்டில்லை. எமக்குள்ளிருப்பது குறுமனம் அன்று பெருமலையெனத் தமக்கென வாழாது பிறர்க்கென வாழும் தகைசால் மாண்பினர் உளதால் அன்றோ இக்கணமும் உயிர்த்திருக்கிறது உலகம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!