பொருளியல்:
- பொருளாதாரம் என்பது பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தி,பகிர்வு, பயன்பாடு ஆகிவற்றை பற்றி படிக்கும் சமூக அறிவியல் ஆகும்.
- பொருளியல் என்பது மனிதர்களின் பொருளியல் நடவடிக்கைகளை ஆராய்வதாகும்.
பொருளியல் மற்றும் பொருளாதாரம்:
- பொருளியல் என்பது சந்தை, வேலைவாய்ப்பு மற்றும் பிறவற்றின் கோட்பாடாகும்.
- பொருளாதாரம் என்பது அந்த கோட்பாடுகளின் பயன்பாட்டின் பின் வெளிப்படும் உண்மையான தகவல் ஆகும்.
உற்பத்தி காரணிகள்:
- நிலம் – வாடகை
- உழைப்பு – கூலி
- மூலதனம் – வட்டி
- தொழிலமைப்பு – லாபம்
பொருளாதாரத்தின் பிரிவுகள்
- நுண்ணியல் பொருளாதாரம்:
- தனி ஒரு பண்டத்தின் விலை, தனிப்பட்ட நிறுவனங்கள் அல்லது தொழில், தனிக்குடும்பங்கள், ஆகியவற்றைப் பற்றி ஆராய்வது நுண்ணியல் பொருளாதாரம் ஆகும்.
- பேரியல் பொருளாதாரம்:
- பேரியல் பொருளாதாரம், நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக ஆராய்கிறது.
- g: நாட்டு வருமானம், வறுமை, வேலையின்மை, பணவீக்கம்.
- நவீன பேரியல் பொருளாதாரம் என்ற கருத்தானது ஜான் மோனட் கீன்ஸ் அவருடைய புத்தகமான வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் தொடர்பான பொது கோட்பாடு என்ற புத்தகத்தின் வழியாக வெளிப்படுகிறது.
- இவர் பொருளாதார பெருமந்தத்தை பற்றி விளக்கியுள்ளார்
- இவர் பேரியல் பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.