மலைபடுகடாம்-பெருங்கௌசிகனார்

மலைபடுகடாம்

  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம்..
  • மலைபடுகடாம் 583 அடிகளைக் கொண்டது.
  • கூத்தராற்றுப்படை எனவும் மலைபடுகடாம் அழைக்கப்படுகிறது.
  • மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் பலவகை ஓசைகளை அதன் மதம் என்று விளக்குவதால் இதற்கு மலைபடுகடாம் எனக் கற்பனை நயம் வாயந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது
  • நன்னன் என்னும் குறுநில மன்னனைப் பாட்டுடைத் தலைவனாக் கொண்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பாடியது மலைபடுகடாம்.
  • கூத்தர், பாணர், விறலியர் போன்ற கலைஞர்களுக்கு மன்னர்களும் வள்ளல்களும் விருந்தோம்பியும் பரிசளித்தும் போற்றிய செய்தியை மலைபடுகடாம் கூறுகிறது.

பாடல் 158 – 169

அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து அல்கி, *

கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து சேந்த செயலைச் செப்பம் போகி,

அலங்கு கூழை நாலும் ஆரிப்படுகர்ச் சிலம்பு  அடைந்திருந்த பாக்கம் எய்தி *

நோனாச் செருவின் வலம்படு நோன்தாள் மான விறல்வேள் வயிரியம் எனினே, நும்இல் பால் நில்லாது புக்கு, * * *

கிழவிர் போலக் கேளாது கெழீஇ கேட்புலம்பு அகல இனிய கூறி

பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையோடு குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்**

பாடலின் பொருள்

  • பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள், இரவில் சேர்ந்து தங்குங்கள்
  • எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்துக்கொள்ளுங்கள்
  • சிவந்த பூக்களைக் கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள்
  • அசையும் மூங்கில்கள் ஓசை எழுப்பும் கடினப்பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள்
  • அங்குள்ளவர்களிடம், ‘பகைவரைப் பெறாமல் போர் செய்யும் வலிய முயற்சியும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள்’ என்று சொல்லுங்கள்.
  • அதன் பிறகு நீங்கள் உங்கள் வீட்டிற்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள்.
  • உறவினர் போலவே அவர்கள் உங்களுடன் பழகுவர்.
  • நீண்ட வழியைக் கடந்து வந்த உங்களின் துன்பம்தீர இனிய சொற்களைக் கூறுவர்.
  • அங்கே, நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்.

சொல்லும் பொருளும்

  • அசைஇ – இளைப்பாறி
  • அல்கி – தங்கி
  • கடும்பு – சுற்றம்
  • நரலும் – ஒலிக்கும்
  • ஆரி – அருமை
  • படுகர் – பள்ளம்
  • வயிரியம் – கூத்தர்
  • வேவை – வெந்தது
  • இறடி – திணை
  • பொம்மல் – சோறு

முந்தைய ஆண்டு வினாக்கள்

மலைபடுகடாம் என்ற நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்
(A) கூத்தராற்றுப்படை
(B) பொருநராற்றுப்படை
(C) பெரும்பாணாற்றுப்படை
(D) திருமுருகாற்றுப்படை
(E) விடை தெரியவில்லை

கூத்தராற்றுப்பெடை’ எனும் அடைமொழியால் அழைக்கப்படும் நூல் யாது ?
A) முல்லைப்பாட்டு
B) குறிஞ்சிப்பாட்டு
C) மலைபடுகடாம்
D) பட்டினப்பாலை.

மலைபடுகடாம் நூலின் பாட்டுடைத் தலைவன்
(A) பெருங்கௌசிகனார்
(B) நன்னன்
(C) பாரி
(D) பாணர்
(E) விடை தெரியவில்லை

“நல்லிகைக் கடாம்புனை நன்னன் வெற்பில் வெல்புக ழனைத்தும் மேம்படத் தக்கோன்” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
(A) மலைபடுகடாம்
(B) மதுரைக்காஞ்சி
(C) முல்லைப்பாட்டு
(D) பட்டினப்பாலை

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!