மவுண்ட்பேட்டன் திட்டம்

மவுண்ட்பேட்டன் திட்டம்

  • மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவிற்கு வைஸ்ராயாக அதிகாரத்தை மாற்றும் பணிக்காக அனுப்பப்பட்டார்.
  • 3 ஜூன் 1947 இல் மவுண்ட்பேட்டன் திட்டம் அறிவிக்கப்பட்டது, எனவே இது ஜூன் 3ஆம் நாள் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

முன்மொழிவுகள்

  • இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு, பிரிட்டனின் தன்னாட்சிப் பகுதி (டொமினியன்) என்ற தகுதியுடன் அதிகாரமாற்றம் நடைபெறும்.
  • சிற்றரசுகள் இந்தியா அல்லது பாகிஸ்தானில் சேரவேண்டும்.
  • ராட்கிளிஃப் பிரவ்ன் தலைமையில் எல்லைகளை நிர்ணயிக்கும் ஆணையம் அமைக்கப்பட்டு அதிகாரமாற்றத்துக்குப் பிறகு இந்த ஆணையத்தின் முடிவு அறிவிக்கப்படும்.
  • பஞ்சாப் மற்றும் வங்காள சட்டப்பேரவைகள் அவைகள் பிரிக்கப்பட வேண்டுமா என்பது பற்றி வாக்கெடுப்பு நடத்தும்.
  • முஸ்லிம் லீக் 1947 ஜூன் 10 அன்று திட்டத்தை ஏற்றுக்கொண்டது.
  • 1947 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு கூடி, பிரிவினையை ஏற்று கோவிந்த் பல்லப் பந்த் முன்வைத்த தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது.
  • மவுண்ட்பேட்டன் திட்டம் 1947 ஜூலை 18 ஆம் தேதி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் இந்திய சுதந்திரச் சட்டத்தை இயற்றியதன் மூலம் நடைமுறைக்கு வந்தது.
  • இச்சட்டம் இந்தியாவின் மீதான பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் இறையாண்மையை ஒழித்தது.

சுதந்திரம் மற்றும் பிரிவினை

  • இந்தியப் பிரிவினையானது வங்காளம் மற்றும் பஞ்சாப் மாகாணங்களை இரண்டாகப் பிரித்தது.
  1. பஞ்சாப் மேற்கு மற்றும் கிழக்காகப் பிரிக்கப்பட்டு – மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு இந்தியாவிற்கும் செல்லும்
  2. வங்காளப் பிரிவு – மேற்குப் பகுதிகள் இந்தியாவில் இருக்கும் மற்றும் கிழக்கு பாகிஸ்தானாக மாறும்.
  • சில்ஹெட்டில் நடந்த வாக்கெடுப்பின் விளைவாக அந்த மாவட்டம் கிழக்கு வங்காளத்தில் இணைக்கப்பட்டது.
  • 1947 ஜூன் 3 இல் மௌண்ட் பேட்டன் பிரபு. அட்லி அறிவித்த தினத்திற்கு முன்னதாகவே 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
  • ராட்கிளிஃப் ஜூலை 8, 1947 இல் இந்தியா வந்தார். இரண்டு எல்லைக் கமிஷன்களுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
  • இந்தியா இரண்டு ஆதிக்க நாடுகளாகப் பிரிக்கப்பட்டது – இந்தியா மற்றும் பாகிஸ்தான். 
  • 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சுதந்திரம் பெற்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!