முதலமைச்சரின் பங்கு மற்றும் பணிகளையும் விளக்குக

முதலமைச்சர்

  • இந்திய அரசியலமைப்புக்கிணங்க, மாநிலச் செயல்துறையில் பெயரளவுத் தலைவராக ஆளுநரும் உண்மையான தலைவராக முதலமைச்சரும் உள்ளனர்.
  • மாநில அளவில் முதலமைச்சரின் நிலை மத்தியில் பிரதம மந்திரியின் நிலையைப் போன்றது.
  • விதி 163-ன் படி, தன்விருப்ப அதிகாரங்களைத் தவிர, மற்ற அதிகாரங்களையும் பணிகளையும் ஆளுநர் செயல்படுத்துவதில் உதவியும் ஆலோசனையும் கூறுவதற்கு, முதலமைச்சரைத் தலைவராகப் பெற்றுள்ள ஒரு அமைச்சரவையை ஒவ்வொரு மாநிலமும் பெற்றிருக்கும்.
  • முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்.
  • நடைமுறையில், மாநில சட்டசபைக்கான பொதுத் தேர்தல்கள் நடந்து முடிந்தவுடன் மாநிலத்தில் அமைச்சகம் அமைக்க பெரும்பான்மைக் கட்சியின் தலைவரை ஆளுநர் அழைக்கிறார்.
  • ஆளுநரின் விருப்பம் உள்ளவரை முதலமைச்சர் பதவி வகிப்பார்.
  • இருப்பினும், முதலமைச்சர் பதவியின் இயல்பான பதவிக்காலம் ஐந்து வருடங்கள் ஆகும்.
  • ஆனால், இராஜினாமாவாலும், விதி 356-ன்படி மாநில அவசரநிலை அமுலாக்கத்தாலும் அவர் பதவி இழக்கலாம்.

முதலமைச்சரின் அதிகாரங்கள்

  • முதலமைச்சர் மாநில நிர்வாகத்தின் தலைவராக இருக்கிறார்.
  • அவர் அதிகமான பணிகளையும், அதிகாரங்களையும் பெற்றுள்ளார்.

முதலமைச்சரின் பணிகளும் அதிகாரங்களும் பின்வருமாறு

      • அமைச்சரவை தொடர்பானவை
      • ஆளுநர் தொடர்பானவை
      • மாநில சட்டத்துறை தொடர்பானவை
      • மற்ற பணிகளும் அதிகாரங்களும்

அமைச்சரவை தொடர்பானவை

  • நபர்களை முதலமைச்சர் அமைச்சரவையின் தலைவராக, அதிகாரங்களையும் செயல்படுத்துகிறார்.
  • ஆளுநரால் அமைச்சர்களாக பரிந்துரைக்கிறார்.
  • அவர் அமைச்சர்களிடையே இலாக்காக்களைப் பகிர்ந்தளிக்கிறார்.
  • அவர் அமைச்சரவையை மாற்றியமைக்கிறார் மற்றும் மறுமாற்றமும் செய்கிறார்.
  • கருத்து வேறுபாட்டின் காரணமாக அவர் ஒரு அமைச்சரை ராஜினாமா செய்ய வேண்டுகிறார் அல்லது அவரை அமைச்சரவையிலிருந்து பதவி விலக்க ஆளுநருக்கு ஆலோசனைக் கூறுகிறார்.
  • அவர் அமைச்சரவை கூட்டங்களுக்குத் தலைமை வகிக்கிறார் மற்றும் அதன் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்துகிறார்.
  • அவர் தனது பதவியை இராஜினாமா செய்வதன்மூலம் அமைச்சரவையை முடிவுக்குக் கொண்டுவரலாம். மற்றும்
  • அவர் அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகளை வழிநடத்துகிறார், இயக்குகிறார். கட்டுப்படுத்துகிறார் மற்றும் ஒருங்கிணைக்கிறார்.

ஆளுநர் தொடர்பானவை

  • விதி 167-ன்படி ஆளுநருக்கும் அமைச்சரவைக்கும் இடையிலான தொடர்பின் பிரதான வழியாக முதலமைச்சர் உள்ளார். மற்றும்
  • பின்வரும் அலுவலர்களின் நியமனம் தொடர்பாக ஆளுநருக்கு அவர் ஆலோசனை கூறுகிறார்.
  • மாநில தலைமை வழக்கறிஞர்
  • மாநில தேர்தல் ஆணையர்
  • மாநில பொதுப்பணி ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்.
  • மாநில திட்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாநில நிதி ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்.

மாநில சட்டத்துறைத் தொடர்பானவை

  • மாநில சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டுவது மற்றும் தள்ளிப்போடுவது தொடர்பாக முதலமைச்சர் ஆளுநருக்கு ஆலோசனை கூறுகிறார்.
  • சபையில் அரசாங்கக் கொள்கைகளை அவர் அறிவிக்கிறார்.
  • சட்ட சபையில் அவர் மசோதாக்களை அறிமுகம் செய்யலாம். மற்றும்
  • எந்த நேரத்திலும் சட்ட சபையைக் கலைப்பதற்காக ஆளுநரிடம் அவர் பரிந்துரை செய்யலாம்.

மற்ற பணிகளும் அதிகாரங்களும்

  • ஆளுங்கட்சியின் தலைவராக, கட்சியைக் கட்டுப்படுத்தவும், நன்னெறிகளை வளர்க்கவும், முதலமைச்சர் கடமைப்பட்டுள்ளார்.
  • மாநிலத்தின் தலைவராக, பல்வேறு பிரிவு மக்களின் கோரிக்கைகளைக் கவனமாக பரிசீலிக்கவும் அவர் கடமைப்பட்டவர்.
  • பல்வேறு பணிகளின் அரசியல் தலைவராக, மாநில அளவில் உள்ள பல்வேறு துறைகளின் செயலர்களை மேற்பார்வையிடவும், கட்டுப்படுத்தவும் மற்றும் ஒருங்கிணைக்கவும் அவர் கடமைப்பட்டவர்.
  • மாநில அரசின் சீரான செயல்பாடு மற்றும் சிறந்த மத்திய – மாநில உறவுகளுக்காக, மத்திய அரசாங்கத்துடன் ஒரு நல்லுறவை வளர்க்க அவர் கடமைப்பட்டவர். மற்றும்
  • அமைச்சரவையின் அளவு முதலமைச்சரால் தீர்மானிக்கப்படுகிறது.
  • எனினும், சமீபத்திய அரசியலமைப்புத் திருத்தத்திற்கிணங்க, சட்டசபை உறுப்பினர்களின் 15 சதவிகித்தை மட்டுமே அவர் அமைச்சர்களாக்க முடியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!