முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் – குமர குருபரர்

சந்தத்தை ஊட்டிய இசை நாட்டியப் பாடல்

ஆடுக செங்கீரை! – 8ம் பாடல்

அறிமுகம்

  • தொடக்கம் முதல் தமிழிக் இலக்கியத்தில் சந்தத்தை ஊட்டிய இசை நாட்டியப் பாடல்கள் மொழிக்குப் பெருமை சேர்த்தன.
  • ஏற்றம் இறைத்தலுக்கு ஏற்ற சந்தத்தை கொண்டிருக்கிறது நாட்டுப்புறத்தமிழ்!
  • சந்தத்துடன் உள்ள பாடலில் உயிர்ப்பு அதிகம் இருக்கும், கேட்போருக்கு ஈர்ப்பும் இருக்கும்.
  • குழந்தையின் தலை அசைத்தலுக்கும் சந்தம் அமைத்துத் தருகிறது பிள்ளைத்தமிழ்!

பிள்ளைத்தமிழ்

  • 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ்
  • இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைத் கொண்டு, அவர்களை குழந்தையாகக் கருதிப் பாடுவது பிள்ளைத்தமிழ்.
  • பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது பிள்ளைத்தமிழ்
  • பிள்ளைத்தமிழில் (பத்து) 10 பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் (பத்து) 10 பாடல் வீதம் மொத்தம் (நூறு) 100 பாடல்களால் பாடப்பெறும்.
  • பிள்ளைத்தமிழ் ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகையாகப் பாடப்பெறும்.
  • முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழில் செங்கீரைப் பருவத்தின் எட்டாம் 8ம் பாடல் இடம்பெற்றுள்ளது.

ஆண்பாற், பெண்பாற் பிள்ளைத்தமிழ்

இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் – காப்பு. செங்கீரை,  தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி

  • ஆண்பாற் பிள்ளைத்தமிழ் (கடை மூன்று பருவம்) – சிற்றில், சிறு பறை, சிறு தேர்
  • பெண்பாற் பிள்ளைத்தமிழ் டைசி மூன்று பருவம்) – கழங்கு. அம்மானை, ஊசல்

குமரகுருபரர்

  • குமரகுருபரரின் காலம் 17ஆம் நூற்றாண்டு.
  • தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர் குமரகுருபரர்.

குமரகுருபரர் இயற்றியுள்ள நூல்கள்   

    • சகலகலா வல்லி மாலை
    • மதுரைக் கலம்பகம்
    • மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
    • திருவாரூர் மும்மணிக் கோவை
    • கந்தர் கலிவெண்பா
    • நீதி நெறி விளக்கம்

 குழைந்தையின் 5-6 ஆம் மாத பருவம் செங்கீரைப் பருவம்

செங்கீரை பருவம்

  • செங்கீரைச்செடி காற்றில் ஆடுவது போன்று 5-6 ஆம் மாதங்களில் குழந்தையின் தலை மென்மையாக அசையும்.
  • குழந்தையின் 5-6 ஆம் மாத பருவத்தை செங்கீரைப் பருவம் என்பர். இப்பருவத்தில் குழந்தை தன் இருகை ஊன்றி.ஒரு காலினை மடக்கி, மற்றொரு காலை நீட்டி தலை நிமிர்ந்தும் முகமசைந்தும் ஆடும்.

பாடல் –8

செம்பொனடிச் சிறு கிண்கிணியோடு சிலம்பு கலந்தாடத்

திருவரை யரைஞாணரை மணியொடு மொளி திகழரை வடமாடப்

பைம்பொன் அசும்பிய தொந்தியொடுஞ் சிறு பண்டி சரிந்தாடப்

பட்டநுதற் பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்

கம்பி விதம் பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்

கட்டிய சூழியு முச்சி யுமுச்சிக் கதிர் முத்தொடுமாட

அம்பவழத் திருமேனியுமாடிட ஆடுக செங்கீரை

ஆதி வயித்திய நாத புரிக்குகன் ஆடுக செங்கீரை

பாடலின் பொருள்

  • திருவடியில் அணிந்த சிறு செம்பொன்  கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடட்டும்.
  • இடையில் அரைஞாண் மணியோடு ஒளிவீசுகின்ற அரை வடங்கள் ஆடட்டும்.
  • பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறு வயிறு சரிந்தாடட்டும்
  • பட்டம் கடடிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டுடன் வட்ட வடிவான சுட்டிப் பதிந்தாடட்டும்.
  • கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழைகளும் அசைந்தாடட்டும் உச்சிக் கொண்டையும் அதில் சுற்றிக் கட்டப்பட்டுள்ள ஒளியுள்ள முத்துக்களோடு ஆடட்டும்
  • அழகிய பவளம் போன்ற திருமேனியும் ஆட, செங்கீரை ஆடுக
  • இவற்றுடன் தொன்மையான வைத்தியநாதபுரியில் எழுந்தருளிய முருகனே! செங்கீரை ஆடி அருள்க!

 சொல்லும் பொருளும்

  • அசும்பிய  –  ஒளி வீசுகிற
  • பண்டி – வயிறு
  • முச்சி – தலை உச்சிக் கொண்டை

 அணிகலன்களும் அணியும் இடங்களும்

  • தலையில் அணிவது – சூழி
  • நெற்றியில் அணிவது – சுட்டி
  • காதில் அணிவது – குண்டலம் / குழை
  • இடையில் அணிவது – அரை நாண்
  • காலில் அணிவது –  சிலம்பு / கிண்கிணி

முந்தைய ஆண்டு வினாக்கள்

முத்துக்குமார் சுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர்
(A) குமர குருபரர்
(B) பலபட்டடைச் சொக்கநாதர்
(C) சேக்கிழார்
(D) சிவஞான சுவாமிகள்
கீழே காண்பனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க
(A) தமிழகத்தின் ‘வேர்ட்ஸ் வொர்த்’ என்று புகழப்பட்டவர் புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்த வாணிதாசன்
(B) ‘திரைக்கவித்திலகம் அ. மருதகாசி பாடல்கள்’ என்னும் தலைப்பில் அ. மருதகாசியின் பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது
(C) நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அநுபூதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களைக் குமரகுருபரர் பாடினார்
(D) காரை முத்துப்புலவர், வணங்காமுடி, பார்வதிநாதன், ஆரோக்கியநாதன், கமகப்பிரியா எனப் புனைபெயர்கள் கண்ணதாசனுக்கு உண்டு

குமரகுருபரர் எம் மொழிகளில் புலமைமிக்கவர்
(A) தமிழ், வடமொழி
(B) தமிழ், வடமொழி, இந்துத்தானி
(C) தமிழ், மலையாளம்
(D) தமிழ், ஆங்கிலம்

தவறானவற்றைத் தேர்வு செய்க. குமரகுருபரரின் நூல்கள்
(A) கந்தர் கலிவெண்பா
(B) வேதியர் ஒழுக்கம்
(C) நீதிநெறி விளக்கம்
(D) சகலகலாவல்லி மாலை

மதுரை மீனாட்சியம்மையிடம் முத்துமணி மாலையை பரிசாக வாங்கியவர் – யார்?
(A) பரஞ்சோதி முனிவர்
(B) குமரகுருபரர்
(C) நக்கீரர்

(D) சீத்தலைச் சாத்தனார்
குமரகுருபரரின் ‘நீதி நெறி விளக்கம்’ என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்?
(A) முப்பத்து மூன்று
(B) ஐம்பது
(C) ஐம்பத்தொன்று
(D) ஐம்பத்து மூன்று

திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்
(A) இராமலிங்க அடிகளார்
(B) தாயுமானவர்
(C) குமரகுருபரர்
(D) வில்லிபுத்தூரார்
தமிழ், வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராக திகழ்ந்தார். அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு
(A) பாலி
(B) இந்துத்தானி
(C) கன்னடம்
(D) உருது
திருவாரூர் நான்மணி மாலையைப் பாடியவர்
(A) திருமூலர்
(B) குமரகுருபரர்
(C) சிவபெருமான்
(D) திருஞானசம்பந்தர்
குமரகுருபரர் எழுதாத நூல் எது?
(A) சுந்தர்கலி வெண்பா
(B)குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்
(C) மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ்
(D) முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ்

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

———————————————————————————

TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

Org Code : owvff

Desktop / Laptop
http://web.classplusapp.com 

Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff

iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563

———————————————————————————

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!