முல்லைப்பாட்டு – நப்பூதனார்

முல்லைப்பாட்டு

  • முல்லைப்பாட்டு பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
  • முல்லைப்பாட்டு நூலில் மொத்தம் அடிகள் 103 அடி உள்ளன.
  • பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளது 1- 17 அடிகள்.
  • முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டுள்ளது.
  • முல்லைப்பாட்டில் பாடப்பட்ட நிலம் முல்லை நிலம்.
  • பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் முல்லைப்பாட்டு.

நப்பூதனார்

  • முல்லைப்பாட்டு நூலின் ஆசிரியர் நப்பூதனார்.
  • காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்.

விரிச்சி – நற்சொல்

ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஊர்ப்பக்கத்தில் போய், தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்; அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் செயல் நன்மையில் முடியும் என்றும் தீய மொழியைக் கூறின் தீதாய் முடியும் என்றும் கொள்வர்.

முல்லை நிலத்தின் முதல், கரு, உரிப் பொருள்கள்

முதல் பொருள்

  • முல்லை – காடு
  • பெரும் பொழுது – கார் காலம் (ஆவணி-புரட்டாசி)
  • சிறுபொழுது – மாலை

கரு பொருள்

  • நீர் – குறுஞ்சுனை, காட்டாறு
  • மரம் –  காயா, கொன்றை, குருத்தம்
  • பறவை – பிடவம், தோன்றிப் பூ, முல்லை

உரி பொருள்இருத்தல் காத்திருத்தல்

நல்லோர் விரிச்சி கேட்டல்

பாடல்

  • நனந்தலை உலகம் வளைஇ நேமியோடு வலம்புரி
  • சொறித்த மாதாங்கு தடக்கை **
  • நீர் செல, நிமிர்ந்த மா அல் போல, பாடுஇமிழ் பனிக்கடல்
  • பருகி, வலன் ஏர்ப,
  • கோடு கொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி *
  • பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை, அருங்கடி மூதூர் மருங்கில் போகி
  • யாழ்இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு, நாழி கொண்ட, நறுவீ முல்லை
  • அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது, பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப

பாடலின் பொருள்

  • அகன்ற உலகத்தை வளைத்துப் பெருமழைப் பொழிகிறது. வலம்புரிச்சங்குப் பொறித்த கைகளையுடைய திருமால், குறுகிய வடிவம் கொண்டு மாவலி மன்னன் நீர் வார்த்துத் தரும்பொழுது.
  • மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம்
  • அம்மேகம். ஒலிக்கும் கடலின் குளிர்நீரைப் பருகிப் பெருந்தோற்றம் கொண்டு, வலமாய் எழுந்து, மலையைச் சூழ்ந்து, விரைந்த வேகத்துடன் பெருமழையைப் பொழிகிறது.
  • துன்பத்தைச் செய்கின்ற அம்மாலைப்பொழுதில், முதிய பெண்கள் மிகுந்த காவலையுடைய ஊர்ப்பக்கம் சென்றனர்.
  • யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகளை சூழ்ந்து ஆரவாரிக்கும் நறுமனம் கொண்ட அரும்புகள், அந்த மலர்ந்த முல்லைப் பூக்களோடு நாழியில் கொண்டு வந்த நெல்லையும் சேர்த்துத் தெய்வத்தின் முன் தூவினர்.
  • பிறகு தெய்வத்தைத் தொழுது, தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.

பாடல்

* சிறு தாம்பு கொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி, ஆயமகள் நடுங்கு சுவல் அசைத்த

கையள், “கைய கொடுங்கோற் கோவலர் பின் நின்று உய்த்தர இன்னே வருகுவர், தாயர்” **

என்போள் நன்னர் நன்மொழி கேட்டனம்

பாடலின் பொருள்

  • அங்கு, சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக்கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இளமகள் கண்டாள்.
  • குளிர் தாங்காமல் கைகளைக் கட்டியபடி நின்ற அவள், “புல்லை மேய்ந்து உன் தாய்மார் வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட எம் இடையர் ஓட்டிவர இப்போது வந்துவிடுவர், வருந்தாதே” என்றாள்.
  • இது நல்ல சொல் எனக்கொண்டு முதுப்பெண்கள் தலைவியிடம் நற்சொல்லை நாங்கள் கேட்டோம் என்று கூறினர்.
  • இவ்வாறு தலைவன் வருகை குறித்து முதுப்பெண்டிர் விரிச்சி கேட்டு நின்றனர். *
  • நின் தலைவன் பகைவரை வென்று திறைப் பொருளோடு வருவது உறுதி. தலைவியே! மனத்தடுமாற்றம் கொள்ளாதே! என ஆற்றுப்படுத்தினர் முதுப்பெண்டிர்.

சொல்லும் பொருளும்

  • நனந்தலை உலகம் – அகன்ற உலகம்
  • கோடு – மலை
  • விரிச்சி – நற்சொல்
  • கொடுஞ்செலவு – விரைவாகச் செல்லுதல்
  • நேமி – சக்கரம்
  • தூஉய் – தூவி
  • சுவல் – தோள்
  • நறுவீ – நறுமணமுடைய மலர்கள்

முந்தைய ஆண்டு வினாக்கள்

பத்துப்பாட்டு நூல்களுள் அகப்பொருள் சார்ந்த நூல்கள்
(A) முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை
(B) முல்லைப்பாட்டு, மலைபடுகடாம், நெடுநல்வாடை
(C) மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, பட்டினப்பாலை
(D) மலைபடுகடாம், குறிஞ்சிப்பாட்டு, நெடுநல்வாடை

பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல்
(A) குறிஞ்சிப்பாட்டு
(B) முல்லைப்பாட்டு
(C) மதுரைக்காஞ்சி
(D) நெடுநல்வாடை
(E) விடை தெரியவில்லை

முல்லை நிலத்தில் நடைபெறும் தொழில்
(A) தேனெடுத்தல்
(B) ஏறுதழுவுதல்
(C) நெல்லரித்தல்
(D) மீன்பிடித்தல்

நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல்
(A) குறிஞ்சிப்பாட்டு
(B) முல்லைப் பாட்டு
(C) பட்டினப்பாலை
(D) மதுரை காஞ்சி

தவறான இணையைத் தேர்வு செய்க:
(A) குறிஞ்சி கபிலர்
(B) முல்லை ஓதலாந்தையார்
(C) மருதம் ஓரம்போகியார்
(D) நெய்தல் அம்மூவனார்

முல்லைத் திணையின் தெய்வம் எது?
(A) முருகன்
(B) வருணன்
(C) இந்திரன்
(D) திருமால்

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

———————————————————————————

TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

Org Code : owvff

Desktop / Laptop
http://web.classplusapp.com 

Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff

iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563

———————————————————————————

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!