பெருங்குளம்
- இந்த பெருங்குளமானது நன்கு அகன்று, செவ்வக வடிவத்தில் அமைந்திருந்த நீர்த்தேக்கம் ஆகும்.
- குளத்தின் நான்கு பக்கங்களிலும் உள்ள நடைபாதை வடக்குப்பக்கத்திலும் தெற்குப்பக்கத்திலும் படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது.
- குளத்தின் தரைப்பகுதி நீரை உறிஞ்சாமல் இருப்பதற்காக நீலக்கீல் (Bitumen) என்ற பசையால் பூசப்பட்டிருந்தது.
- சில கட்டுமான அமைப்புகள் தானியக்கிடங்குகளாக அடையாளம் காணப்படுகின்றன.
- வடபுறத்திலிருந்தும், தென்புறத்திலிருந்தும் குளத்திற்குச் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
தானியக் களஞ்சியம்
- இது 168 அடி நீளமும், 135 அடி அகலமும் உடையது.
- இதன் சுவர்கள் 52 அடி உயரமும், 9 அடி கனமும் உடையவை.
- தள வெடிப்புகளில் கோதுமை, பார்லி, தினைவகைகள், எள் மற்றும் பருப்பு வகைகளின் மிச்சங்கள் சிதறிக் காணப்பட்டன.
- செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக் களஞ்சியம் ஒன்று ஹரியானா மாநிலத்தில் உள்ள ராகிகர்கியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இது முதிர்ச்சியடைந்த ஹரப்பா காலத்தைச் சார்ந்தது.
மாபெரும் கட்டடங்கள்
- மொஹஞ்சதாரோவில் இருந்த இன்னொரு மிகப்பெரும் பொதுக் கட்டடம், கூட்ட அரங்கு ஆகும்.
- இது 20 தூண்கள் 4 வரிசைகளை கொண்டு பரந்து விரிந்த கூடம் ஆகும்.