B.C.தத் என்பவர் HMIS தல்வார் கப்பலின் பக்கவாட்டில் வெள்ளையனே வெளியேறு என்று எழுதியதற்காக கைது செய்யப்பட்டார்.
தத்தின் கைது நடவடிக்கை 1946 பிப்ரவரி 18 இல் வெடித்துக் கிளம்பிய கலகத்திற்கு உந்துவிசையாக அமைந்தது.
1946 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பம்பாயில் ராயல் இந்திய கடற்படை மாலுமிகள் கிளர்ச்சி செய்தனர்.
கராச்சியின் HMIS ஹிந்துஸ்தான் மற்றும் கராச்சியின் மற்ற கடற்படைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுன.
78 கப்பல்களின் 20,000 க்கும் மேற்பட்ட கடற்படைஉள்ளடக்கிய மற்ற நிலையங்களுக்கும் இது விரைவில் பரவியது.
கடற்படைமாலுமிகள்காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் லீக் கொடிகளை ஏற்றினர்.
பம்பாய், பூனா, கல்கத்தா, ஜெசோர் மற்றும் ஆம்ப்லா ஆகிய இந்திய விமானப்படை நிலையம் மற்றும் ஜபல்பூரில் உள்ள இந்திய சிக்னல் கார்ப்ஸ் ஆகியவையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
பம்பாய், மெட்ராஸ் மற்றும் கல்கத்தாவில் உள்ள தொழிற்சங்கங்கள் அனுதாப வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததால் இரு நகரங்களும் போர்க்களமாக மாறியது.
பிரிட்டிஷ் அரசு கிளர்ச்சியை அடக்குவதற்கு மிருகத்தனமான வழிமுறைகளை கையாண்டது.
அப்போது பம்பாயில் இருந்த சர்தார் வல்லபாய் படேல், கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வர முயற்சி எடுத்தார்.
அனைத்து அரசியல் தலைவர்களும் விடுவிக்கப்பட்டனர், காங்கிரஸ் மீதான தடை நீக்கப்பட்டது.
ராஜாஜி திட்டம்
தனி தேசத்திற்கான கோரிக்கை, வகுப்புவாத சவால் நீடித்தது மேலும் முஸ்லீம் லீக் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தியது.
முகமது அலி ஜின்னா முஸ்லீம் சமூகத்தின் ஒரே குரலாக தன்னை நிறுவிக்கொள்ள முயன்றார்.
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, காந்தி, ஜூலை 1944ல், ஜின்னாவுடன்‘ராஜாஜி திட்டம்’ அடிப்படையில் பேச்சு வார்த்தைகளை முன்மொழிந்தார்.
ராஜாஜியின் முன்மொழிவுகள்
போருக்கு பின் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் மாவட்டங்களைவரையறுப்பதோடு அம்மாவட்ட மக்கள் பாகிஸ்தானை விரும்புவார்களா என்பதைக் கண்டறியவயது வந்தோருக்கான வாக்கெடுப்புநடத்துவது.
பிரிவினை ஏற்பட்டால், பாதுகாப்பு அல்லது தகவல் தொடர்பு போன்ற சில அத்தியாவசிய சேவைகளை இயக்க பரஸ்பர ஒப்பந்தம்.
எல்லை மாவட்டங்கள் இரண்டு இறையாண்மை கொண்ட நாடுகளில்ஏதேனும் ஒன்றைதேர்வு செய்யலாம்;
முழு அதிகாரப் பரிமாற்றம் முடியும்வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும்.