வெள்ளம் என்றால் என்ன? வெள்ளத்தின் போது செய்யக்கூடியவை எவை?,செய்யக்கூடாதவை எவை?

வெள்ளப் பெருக்கு

  • அளவுக்கு அதிகமாக வழிந்தோடும் நீரையே வெள்ளப்பெருக்கு என்கிறோம். இஃது அவற்றின் கரைகளை அல்லது சிற்றாறுகளின் கரைகளைத் கடந்து வழிந்தோடிப் பள்ளமான பகுதிகளை மூழ்கடிக்கின்றது. 

வெள்ளப் பெருக்கின் வகைகள் 

திடீர் வெள்ளப் பெருக்கு,

  • அதிக மழைப்பொழிவின் போது ஆறுமணி நேரத்திற்குள் ஏற்படும் வெள்ளப்பெருக்கு திடீர் வெள்ளப்பெருக்காகும். 

ஆற்று வெள்ளப்பெருக்கு

  • ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஏற்படும் அதிகமான மழைப் பொழிவு அல்லது பனிக்கட்டி உருகுதல் அல்லது இரண்டும் சேர்ந்த சூழல் ஆற்று வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது.

கடற்கரை வெள்ளப்பெருக்கு

  • சில சமயங்களில் வெள்ளப்பெருக்கானது, சூறாவளி, உயர் ஓதம் மற்றும் சுனாமி ஆகியவற்றோடு தொடர்பு படுத்தப்பட்டு கடற்கரை சமவெளிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. 

வெள்ளப்பெருக்கிற்கான காரணங்கள்.

அடைமழை

  • ஆற்றின் கரைகளை மீறி ஆறு பாய்ந்து செல்லுதல் 
  • ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் அதிகமான மழைப்பொழிவு 
  • போதுமான பொறியியல் தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்படாத கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் தடுப்பணைகள்

வெள்ளப்பெருக்கின் தாக்கம்

  • கழிவுநீர் வடிகால் அமைப்பு அழிக்கப்படுதல் 
  • நீர் மாசுபடுதல் 
  • மண் அரித்தல் 
  • நீர் தேங்குதல் 
  • வேளாண்மை நிலங்கள் மற்றும் கால்நடைகள் அழிக்கப்படுதல் 
  • உயிர்ச் சேதங்கள் ஏற்படுதல் மற்றும் தொற்று நோய் பரவுதல் 

வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன் செய்ய வேண்டியவை

  • குடியிருப்புப் பகுதி வெள்ளப் பாதிப்பிற்கு உட்படும் தன்மையானதா என்பதைக் கண்டறிய வேண்டும்.
  • எடுத்துச் செல்லத்தக்க வானொலிப் பெட்டி,டார்ச்மற்றும் கூடுதல் பேட்டரிகள், குடிநீர், உலர் உணவு வகைகள், உப்பு மற்றும் சர்க்கரை போன்றவற்றை வைத்திருக்க வேண்டும். விலைமதிப்பு மிக்க பொருள்கள், துணிகள், தீப்பெட்டி, பெழுகுவர்த்தி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அவசியமான பொருட்களைப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.
  • குடை மற்றும் மூங்கில் கொம்பு வைத்திருக்க வேண்டும்.
  • .வேளாண் நிலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளிலிருந்து நீர் வழிந்தோடக் கால்வாய்கள் வெட்ட வேண்டும். மணல் மூட்டைகள் வைத்திருக்க வேண்டும். 

செய்யக் கூடாதவை

  • துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை உடனே இணைத்தல் கூடாது. 
  • வண்டிகளை இயக்குதல் கூடாது. 
  • வெள்ளத்தில் நீந்த முயற்சித்தல் கூடாது. 
  • வெள்ளப் பெருக்கு காலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளக் கூடாது. 
  • வெள்ளப் பெருக்கு எச்சரிக்கையை அலட்சியப்படுத்துதல் கூடாது. 
  • வெள்ளப் பெருக்கின் போது செய்ய வேண்டியவை .
  • மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு இணைப்பினைத் துண்டிக்க வேண்டும்.
  • கழிப்பிடத் துளை மீதும், கழிவுநீர் வெளியேறும் துளை மீதும் மணல் மூட்டைகளை வைக்க வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட அல்லது நன்கு தெரிந்த பாதையில் உடனடியாக வெளியேற வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!