வைரஸ் என்பதனை வரையறு.மனித வைரஸ்கள் பற்றி விவரித்து எழுதுக 

வைரஸ்:

  • வைரஸ்கள் என்பவை உயிருள்ள செல்களுக்குள் இனப்பெருக்கம் செய்கின்ற மிகச்சிறிய அகச்செல் நிலைமாறா ஒட்டுண்ணிகள் ஆகும்.
  • உயிருள்ள செல்களுக்கு வெளியே, ஓர் உயிருள்ள உயிரினத்தின் பண்புகளை இவை பெற்றிருக்காது.
  • வைரஸ்கள் உயிருள்ள செல்களுக்குள் நுழைந்து புதிய வைரஸ்களை உருவாக்க அச்செல்களைத் தூண்டுகின்றன.

மனித வைரஸ் நோய்கள்

 

 நோய்கள்நோய்க்காரணிநோய்த் தொற்றும் பகுதிபரவும் முறை

 

அறிகுறிகள்

 

1.

 

சாதாரண சளி (தடிமல்) (Common Cold)ரைனோ வைரஸ்கள் (Rhinoviruses)

 

சுவாசப்பாதை

 

நீர்த்திவலைகள்

 

மூக்கடைப்பு மற்றும் கோழை வெளியேற்றம், தொண்டை வலி, இருமல் மற்றும் தலைவலி
2.

 

புட்டாளம்மை (Mumps) (பொன்னுக்கு வீங்கி)

 

மம்ப்ஸ் வைரஸ் (ஆர்.என்.ஏ வைரஸ்) பாராமிக்சோ வைரஸ் (Paramyxo virus)உமிழ்நீர்ச் சுரப்பி

 

உமிழ்நீர் மற்றும் நீர்த் திவலைகள்

 

மேலண்ண சுரப்பியல் (Parotid) வீக்கம் ஏற்படுதல்

 

3.தட்டம்மை (Measles)

 

ருபல்லா வைரஸ் (Rubella) (ஆர்.என்.ஏ வைரஸ்) பாராமிக்சோ வைரஸ் (Paramyxo virus) Virus)

 

தோல் மற்றும் சுவாசப்பாதை

 

நீர்த்திவலைகள்

 

கரகரப்பான, தொண்டை மூக்கு ஒழுகல், இருமல், காய்ச்சல் மற்றும் தோல் கழுத்து, காதுகளில் ஏற்படும் சிவப்பு நிறத் தடிப்புகள்
4

 

கல்லீரல் அழற்சி (Viral Hepatitis)

 

ஹெப்பாடைட்டிஸ்-B வைரஸ்

 

கல்லீரல்

 

பெற்றோர் வழி,

இரத்தப் பரிமாற்றம்

 

கல்லீரல் சிதைவு, மஞ்சள் காமாலை, குமட்டல், மஞ்சள் கண்கள், காய்ச்சல் மற்றும் வயிற்று வலி
5.சின்னம்மை (Chicken pox)

 

வேரிசெல்லா ஸோஸ்டர் வைரஸ் (Varicella Zoster virus) (டி.என்.ஏ. வைரஸ்)

 

சுவாசப்பாதை, தோல் மற்றும் நரம்பு மண்டலம்

 

நீர்த்திவலைகள் மற்றும் நேரடி தொடர்பு

 

லேசான காய்ச்சலுடன் தோல் அரிப்பு, தோல் தடிப்பு மற்றும் கொப்புளம்
6.

 

இளம்பிள்ளை வாதம் (Polio)

 

போலியோ வைரஸ் (ஆர்.என்.ஏ வைரஸ்)

 

குடல், மூளை, தண்டுவடம்

 

நீர்த் திவலைகள், வாய்வழி. மலத்தொற்று

 

காய்ச்சல், தசை விறைப்பு மற்றும் வலுவிழத்தல்,பக்கவாதம் மற்றும் சுவாசக் கோளாறு
7.டெங்கு காய்ச்சல் (Dengue fever)

 

டெங்கு வைரஸ் ஃபிளேவி வைரஸ்தோல் மற்றும் ரத்தம்

 

நோய்க் கடத்தியான ஏடிஸ் ஏஜிப்டி கொசுக்கள்

 

திடீரன தோன்றும் அதிக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டுவலி
8.சிக்குன்குன்யா (Chikun gunya)

 

ஆல்ஃபா வைரஸ் (டோகா வைரஸ்) (Alphavirus Togavirus)நரம்பு மண்டலம்

 

நோய்க் கடத்தியான ஏடிஸ் எஜிப்தி கொசுக்கள் (Aedes aegypti)

 

காய்ச்சல், மூட்டுவலி, தலைவலி மற்றும் மூட்டுகளில் வீக்கம்

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!