நகர நாகரிகம்
ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம் அதற்கான காரணங்கள்
- சிறப்பான நகரத் திட்டமிடல்
- சிறப்பான கட்டிடக்கலை வேலைப்பாடு
- தூய்மைக்கும், பொது சுகாதாரத்திற்கும் கொடுக்கப்பட்ட அதிக முன்னுரிமை
- தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகள்
- விவசாய மற்றும் கைவினைத் தொழில்களுக்கான திடமான அடித்தளம்.
வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும்
- வேளாண்மை முக்கிய ஆதாரமாக விளங்கியது.
- கோதுமை, பார்லி, அவரை வகைகள், கொண்டைக்கடலை, எள், வெவ்வேறு தினை வகைகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களைப் பயிரிட்டார்கள்.
- ஹரப்பா மக்கள் இரட்டைப்பயிரிடல் முறையைப் பின்பற்றினார்கள்.
- ஹரப்பா மக்கள் உழவுக்குக் கலப்பையைப் பயன்படுத்தினார்கள்.
- பாசனத்துக்குக் கால்வாய்களையும் கிணறுகளையும் பயன்படுத்தினார்கள்.
விலங்குகளைப் பழக்கப்படுத்துதல்
- செம்மறியாடு, வெள்ளாடு, கோழி உள்ளிட்ட பறவைகளை வளர்த்தார்கள்.
- எருமை, பன்றி, யானை போன்ற விலங்குகள் குறித்த அறிவும் அவர்களுக்கு இருந்தது.
- ஆனால் ஹரப்பா பண்பாட்டில் குதிரை இல்லை.
- ஹரப்பாவில் மாடுகள் செபு எனப்பட்டன.
- ஹரப்பா மக்களின் உணவில் மீன், பறவை இறைச்சி ஆகியவையும் இருந்தன.
- காட்டுப் பன்றி, மான், முதலை ஆகியவற்றுக்கான சான்றுகளும் ஹரப்பா நாகரிகப் பகுதிகளில் கிடைத்துள்ளன.
கைவினைத் தயாரிப்பு
- கார்னிலியன் (மணி), ஜாஸ்பர், கிரிஸ்டல் (படிகக்கல்). ஸ்டீட்டைட் (நுரைக்கல்) ஆகியவற்றிலும் செம்பு, வெண்கலம், தங்கம் ஆகிய உலோகங்களிலும் சங்கு, பீங்கான் சுடுமண் ஆகியவற்றிலும் அணிகலன்களைச் செய்தார்கள். இவை மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
பொருள் | நகரம் |
சங்கு | நாகேஷ்வர், பாலகோட் |
வைடூரியம் | ஷார்டுகை |
கார்னிலியன் (மணி) | லோத்தல் |
ஸ்டீட்டைட் (நுரைக்கல்) | தெற்கு ராஜஸ்தான் |
செம்பு | ராஜஸ்தான், ஓமன் |
மொகஞ்சதாரோ–தலைவர்
- அமர்ந்த நிலையில் உள்ள ஓர் ஆண் சிலை மொகஞ்சதாரோவில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெண்கல சிலை
- மொகஞ்சதாரோவில் வெண்கலத்தால் ஆன சிறிய பெண் சிலை கிடைத்தது. இவை ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என சர் ஜான் மார்ஷல் நினைத்தார்.
மட்பாண்டங்கள்
- மட்பாண்டங்கள் சிவப்பு வண்ணத்தில் இருந்தன. அதில் கருப்பு வண்ணத்தில் அழகிய வேலைப்பாடுகளைச் செய்தனர்.
உலோகங்களும், கருவிகளும், ஆயுதங்களும்
- மனிதர்களால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம் செம்பு.
- ஹரப்பா நாகரிகம் வெண்கலக் கால நாகரிகமாகும்.
- ரோரிசெர்ட் எனப்படும் படிகக்கல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள்.
துணிகளும், அணிகலன்களும்
- பொதுவாக பருத்தி ஆடைகளே பயன்பாட்டில் இருந்தன.
- கம்பளி ஆடைகளும் உபயோகப்படுத்தப்பட்டன.
- மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட நடனமாடும் பெண் சிலையின், முழங்கையின் மேல்பகுதி வரை வளையல்கள் காணப்படுகின்றன.
- சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய சிவப்பு நிற மணிக்கற்களைப் (Carnelian) பயன்படுத்தினர்.
வணிகமும், பரிவர்த்தனையும்
- க்யூனிபார்ம் கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன.
- அவற்றில் காணப்படும் “மெலுகா” என்னும் சொல் சிந்து பகுதியைக் குறிக்கிறது.
- மெசபடோமியப் புராணத்தில் மெலுகா குறித்து கீழ்க்கண்ட வரிகள் இடம்பெற்றுள்ளன.
- “உங்களது பறவை ஹஜா பறவை ஆகுக. அதன் ஒலி அரண்மனையில் கேட்கட்டும்”.
- ஹஜா பறவை மயில் என்று சில தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள்.
- சுமேரியாவின் அக்காடிய பேரரசிற்குட்பட்ட அரசன் நாரம்சின் என்பவர் சிந்து வெளிப் பகுதியிலுள்ள மெலுக்கா என்னும் இடத்தில் இருந்து அணிகலன் வாங்கியதாகக் குறிப்பு எழுதியுள்ளார்.
- குஜராத்திலுள்ள லோத்தலில் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- லோத்தல் என்னும் இடம் குஜராத்தில் சபர்மதி ஆற்றின் ஒரு துணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.