ஹரப்பா – வாழ்கை முறை

கே.வி.டி (கொற்கைவஞ்சிதொண்டி) வளாகம்:

  • பாகிஸ்தானில் இன்றும் கொற்கை, வஞ்சி, தொண்டி, மத்ரை. உறை, கூடல்கர் என்ற பெயர் கொண்ட இடங்கள் உள்ளன.

எடைக்கற்களும் அளவீடுகளும்

  • நிலத்தை அளக்க வெண்கல அளவுக்கோலை பயன்படுத்தி உள்ளனர்.
  • ஹரப்பா நாகரிகப் பகுதிகளிலிருந்து படிகக்கல்லாலான, கனசதுர வடிவ எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • எடைக்கற்கள் இரும முறையை உணர்த்துகின்றன.
  • எடையின் விகிதம் இரு மடங்காகும்படி பின்பற்றப்பட்டுள்ளது (1: 2: 4: 8: 16: 32).
  • 16-இன் விகிதம் கொண்ட சிறிய எடை அளவீடு இன்றைய அளவீட்டில் 63 கிராம் கொள்ளத்தக்கதாக உள்ளது.
  • ஹரப்பா மக்கள் இன்றைய அளவீட்டில் ஒரு இஞ்ச் = 1.75 செ.மீ. ஆகக் கொள்ளும் விதத்தில் அளவுகோலையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
  • குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தந்தத்தினாலான அளவுகோல் 1704 மி.மீ. வரை சிறிய அளவீடுகளைக் கொண்டுள்ளது.

முத்திரைகளும், எழுத்துமுறையும்

  • ஸ்டீட்டைட், செம்பு, சுடுமண், தந்தம் போன்றவற்றாலான முத்திரைகள் ஹரப்பா நாகரிகப் பகுதிகளில் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • ஹரப்பா எழுத்துமுறையை இன்றுவரைக்கும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
  • ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத்தொடர் 26 குறியீடுகளைக் கொண்டுள்ளது.
  • பல அறிஞர்கள் அது திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கருதுகிறார்கள்.
  • இந்த எழுத்துக்கள் இடம் இருந்து வலமாக ஒரு வரியும், வலம் இருந்து இடமாக மற்றொரு வரியாகவும் எழுதப்படுகின்றன.

கலையும், பொழுதுபோக்கும்

  • பொம்மை வண்டிகள், கிலுகிலுப்பைகள், சக்கரங்கள், பம்பரங்கள், சதுரங்க விளையாட்டில் பயன்படுத்தப்படுவதைப் போன்ற காய்கள், கட்டங்கள் வரையப்பட்ட பலகைகள் விளையாட்டுகளுக்குச் சான்றாகும்.

நம்பிக்கைகள்

  • சிந்து மக்கள் இயற்கையை வழிபட்டார்கள். அரச மரங்கள் வழிபாட்டுக்குரியதாக இருந்திருக்கலாம்.
  • ஹரப்பா மக்கள் இறந்தோரைப் புதைத்தனர்.
  • இறந்த உடல்களை எரித்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.
  • ஹரப்பா புதைகுழிகளில் மட்பாண்டங்கள், அணிகலன்கள், அதாமிரக்கண்ணாடி, மணிகள் ஆகியவை கிடைத்துள்ளன.
  • இறப்பிற்கு பின்னரான வாழ்க்கை பற்றி அவர்களின் நம்பிக்கையை இவை குறிக்கலாம்.
  • தாய் தெய்வ வழிபாடு இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
  • இதுவே பிறகு சக்தி வழிபாடாக மாறியது.

பசுபதி வழிபாடு:

  • ஹரப்பாவில் கிடைத்த முத்திரைகளில் அமர்ந்த நிலையிலுள்ள மகாயோகியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
  • அதில் மூன்று முகங்களைக் கொண்ட கடவுள், யோக நிலையில் அமர்ந்திருப்பதைப் போல உள்ளது.
  • அதனைச் சுற்றி வலப்புறத்தில் யானை, புலி உருவங்களும், இடப்புறத்தில் காண்டாமிருகம், எருமை உருவங்களும் அமைந்துள்ளது.
  • வரலாற்று ஆய்வாளர்கள் கூற்றுப்படி, இது சிவனுக்குரிய “திருமுகம்” (மூன்றுமுகம்) பசுபதி (விலங்குகளின் கடவுள்), யோகேசுவரன் (யோகிகளின் கடவுள்) போன்ற பல்வேறு வடிவங்களை உணர்த்துவதாக இவ்வழிபாடுகள் உள்ளன.

மருத்துவம்

  • சிந்துவெளி மக்கள் கண், காது, தொண்டை, தோல் தொடர்பான நோய்களுக்குப் பயன்படுத்தும் மருந்துகளைச் செய்வதற்குக் கட்டில் (Cuttle) என்ற ஒரு வகையான மீனின் எலும்புகளைப் பயன்படுத்தினர்.

பெண்களின் நிலை

  • சிந்துவெளியில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் மதிக்கப்பட்டனர்.
  • வெண்கலத்தால் ஆன முகம் பார்க்கும் கண்ணாடிகள், தந்தத்தால் செய்யப்பட்ட சீப்புகள் போன்ற பொருள்கள் இங்கு கிடைத்துள்ளன.

அரசியல் முறை

  • ஹரப்பாவும் மொஹஞ்சதாரோவும் நகர அரசுகளுக்கான ஆட்சியமைப்பின் கீழ் இயங்கியிருக்கலாம்.
  • பண்பாட்டுப் பொருள்களிலும் அளவீடுகளிலும் காணப்படும் சீரான தன்மை ஹரப்பா சமூகம் உறுதியான மைய நிர்வாகத்தின் கீழ் இயங்கியிருக்க வேண்டும் என்ற கருத்தை வலுப்படுத்துகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!