சிறுபாணாற்றுப்படை- 2 பொதினி மலை
பேகன் – பொதினி, ஆவினன்குடி, பழனி, திண்டுக்கல் மாவட்டம் பொதினி மலை – பேகன்-(84-87) வானம் வாய்த்த வளமலைக் கவாஅன் கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந்திறல் (பேகன்) அணங்கின் ஆவியர் பெருமகன் பெருங்கல் நாடன் பேகனும் ** பா வகை – நேரிசை ஆசிரியப்பா சொல்லும் பொருளும் வளமலை – பழநி மலை கவாஅன் – மலைப்பக்கம் கலிங்கம் – ஆடை பருவம் பொய்க்காமல் மழை பெய்யும் வளமலையில் வாழும் மயிலானது குளிரால் நடுங்கும் என்று எண்ணித்தன் மனத்தில் […]