பரிபாடல்-கீரந்தையார்

பரிபாடல்

  • பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.
  • பரிபாடல் நூல் “ஓங்கு பரிபாடல்” எனும் புகழுடையது
  • சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் (இசைபாடல்) ஆகும்.
  • பரிபாடலில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் உரையாசிரியர்கள் கூறியுள்ளனர்.
  • இன்று 24 பாடல்களே கிடைத்துள்ளன.
  • பாடப் பகுதியிலுள்ள பரிபாடல் பாடலை எழுதியவர் கீரந்தையார்.

நெருப்புப் பந்தாய் வந்து குளிர்ந்த பூமி

பாடல் – 2: 4-12

விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக் கரு வளர் வானத்து இசையில் தோன்றி, *

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும், உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்

செந்தீச் சுடரிய ஊழியும், பனியொடு தண்பெயல் தலைஇய ஊழியும்

அவையிற்று உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு

மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும் உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்.

சொல்லும் பொருளும்

  • விசும்பு  –  வானம்
  • ஊழ்  – முறை
  • பீடு – சிறப்பு
  • ஆர்தருபு – வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த
  • ஊழி – யுகம்
  • தண்பெயல் – குளிர்ந்த மழை
  • ஈண்டி – செறிந்து திரண்டு

பாடலின் பொருள்

  • எதுவுமேயில்லாத பெருவெளியில் அண்டத் தோற்றத்துக்குக் காரணமான பரமாணு பேரொலியுடன் தோன்றியது.
  • உருவம் இல்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம் என்னும் முதல் பூதத்தின் ஊழி அது.
  • அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக்காலங்கள் கடந்து சென்றன.
  • பிறகு நெருப்புப் பந்துபோலப் புவி உருவாகி விளங்கிய ஊழிக் காலம் தொடர்ந்தது.
  • பின்னர்ப் பூமி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்து ஊழிக்காலம் கடந்தது.
  • அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.
  • மீண்டும் மீண்டும் நிறை வெள்ளத்தால் நிறைந்த இப்பெரிய உலகத்தில், உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது.
  • அச்சூழலில் உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியான ஊழிக்காலம் வந்தது.

முந்தைய ஆண்டு வினாக்கள்

பேரண்டத் தோற்றம் குறித்த அறிவியல் செய்தியினைக் குறிப்பிடும் சங்க இலக்கியம்
(A) பட்டிணப்பாலை
(B) கலித்தொகை
(C) அகநானூறு
(D) பரிபாடல்
(E) விடை தெரியவில்லை

சங்க இலக்கிய நூல்களுள் பன்னோடு பாடப்பட்ட நூல்
(A) புறநானூறு
(B) அகநானூறு
(C) பரிபாடல்
(D) நற்றிணை
(E) விடை தெரியவில்லை

எட்டுத் தொகை நூல்களில் ‘ஓங்கு’ என்னும் அடைமொழி பெற்ற நூல் (3 முறை கேட்கப்பட்டுள்ளது)
(A) குறுந்தொகை
(B) கலித்தொகை
(C) நற்றிணை
(D) பரிபாடல்
(E) விடை தெரியவில்லை

“பூவில் இதழகத் தனைய தெருவம்” கொண்ட ஊர் என்று மதுரையைச் சிறப்பித்துக் கூறும் நூல்
(A) மதுரைக்காஞ்சி
(B) பரிபாடல்
(C) பட்டினப்பாலை
(D) சிலப்பதிகாரம்
(E) விடை தெரியவில்லை

‘தமிழ்வேலி’ என்று மதுரைத் தமிழ்சங்கத்தினைக் கூறிய நூல்
(A) பரிபாடல்
(B) புறநானூறு
(C) திருவாசகம்
(D) தேவாரம்

அகத்திணையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது? (2 முறை கேட்கப்பட்டுள்ளது)
(A) பரிபாடல்
(B) நற்றிணை
(C) ஐங்குறுநூறு
(D) பதிற்றுப்பத்து

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை – இவ்வடி இடம் பெற்ற நூல்
(A) பரிபாடல்
(B) நற்றிணை
(C) மதுரைக்காஞ்சி
(D) நெடுநல்வாடை

“வரையழி வாலருவி வாதாலாட்ட”இவ்வடியில் வரும் ‘தாலாட்டு’ என்ற சொல்லாட்சி காணப்பெறும் எட்டுத்தொகை நூல்
(A) அகநானூறு
(B) குறுந்தொகை
(C) பரிபாடல்
(D) ஐங்குறுநூறு

இசைப்பண்ணும், இசையமைத்தவர் பெயரும் குறிக்கப்பட்டுள்ள தமிழிலக்கியம்
(A) நற்றிணை
(B) புறநானூறு
(C) ஐங்குறுநூறு
(D) பரிபாடல்

பொருந்தாத இணையைக் குறிப்பிடுக:
(A) சிற்றிலக்கியங்கள் தொண்ணூற்றாறு
(B) திருக்குறள் முப்பால்
(C) மலைபடுகடாம் கூத்தராற்றுப்படை
(D) பரிபாடல் பத்துப்பாட்டு

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!