3D அச்சிடுதல் என்றால் என்ன? அதன் நன்மைகள் யாவை?

3D அச்சிடுதல்

  • 3D அச்சிடுதல் அல்லது சேர்க்கை உற்பத்தி என்பது CAD மாடல் அல்லது டிஜிட்டல் 3D மாதிரியிலிருந்து முப்பரிமாணப் பொருளை உருவாக்குவதாகும் 

நன்மைகள்:

  • குறைவான விலை: பாரம்பரிய உற்பத்தி முறைகளை விட மலிவானது. குறைந்த எண்ணிக்கையில் அல்லது அதிக எண்ணிக்கையில் தயாரித்தாலும் ஒரே விலை தான். உதாரணமாக சீனா பத்து ஓரடுக்கு வீடுகளை $ 5000 / வீடு என்ற செலவுக்குள் கட்டியுள்ளது.
  • குறைவான நேரம்: பாரம்பரிய முறையில் பல்வேறு பாகங்களை இணைத்து ஒரு பொருளைத் தயாரிக்க வேண்டும். ஆனால் 3டி பிரிண்டிங்கில் நேரடியாக பொருளை உற்பத்தி செய்யலாம்.
  • அதிகதிறன். மாதிரிகளை எளிமையாக விரைவாக தயாரிக்கலாம்.
  • அதிக உற்பத்திதிறன்: அதிக மாதிரிகளையோ குறைந்த பொருட்களையோ விரைவாகத் தயாரிக்க சிறந்த முறை
  • நெகிழ்தன்மை: வெவ்வேறு மூலப்பொருட்களை பயன்படுத்தலாம். அதனால் ஒரே தொழிற்சாலையிலேயே பல்வேறு வகை பொருட்களைத் தயாரிக்கலாம்.
  • தனித்த பயனாக்கம் (கஸ்டமைசேசன்): தயாரிப்புச் செலவில் எந்த பாதிப்பம் இல்லாமல் ஒவ்வொரு தனித்தனி பயனாளருக்கும் தேவையானபடி பொருட்களைத் தனித்தனியாகத் தயாரிக்கலாம்.
  • தர உறுதி: உறுதியான பொருட்கள் சிறப்பான செயல்தன்மையுடன் தயாரிக்கலாம்.
  • வேலைவாய்ப்புகள்: இவ்வகை பிரிண்டர்கள் தயாரிக்கவும் மாதிரிகளைத் தயாரிக்கவும் அதிக அளவில் பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.
  • குறைவான கழிவு: சேர்க்கைத் தயாரிப்பு முறையில் எப்போதுமே பாரம்பரிய முறையைவிட கழிவு குறைவாகவே உருவாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!