இரட்டுற மொழிதல்

சந்த கவிமணி (சண்முக சுந்தரம்) தமிழ் அழகனார்

  • தமிழ் அழகனாரின் இயற்பெயர் சண்முக சுந்தரம் (தமிழ் அழகனார்)
  • தமிழ் அழகனாரின் சிறப்பு பெயர் சந்த கவிமணி
  • தமிழ் அழகனார் (பன்னிரெண்டு) 12 சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளர்.
  • இலக்கணப் புலமையும் இளம் வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்றவர் தமிழ் அழகனார்..
  • தமிழ் அழகனார் எழுதிய இரட்டுற மொழிதல் நூல் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.

இரட்டுற மொழிதல்

  • இரட்டுற மொழிதல் நூலின் ஆசிரியர் சந்த கவிமணி தமிழ் அழகனார்
  • இரட்டுற மொழிதல் நூலின் ஆதார நூல் தனிப்பாடல் திரட்டு – (5ம் பகுதி)
  • இரட்டுற மொழிதல் நூலின் மைய கருத்து தமிழ் கடலோடு ஒத்திருத்தல் என்பதை அறிதல்.

தமிழின் பெருமை

  • விண்ணோடும் முகிலோடும் உடுக்களோடும் கதிரவனோடும் கடலோடும் தமிழ் இணைத்துப் பேசப்படுகிறது
  • இவற்றுக்குள்ள ஆற்றலும் விரிவும் ஆழமும் பயனும் தமிழுக்கும் உண்டு எனப் போற்றப்படுகிறது.
  • தமிழ் கடலோடு ஒத்திருத்தலை இரட்டுற மொழிவதன் மூலம் அறிகையில் அதன் பெருமை ஆழப்படுகிறது; விரிவுபடுகிறது.

சிலேடை பாடல் (அ) இரட்டுற மொழிதல் வரையறை

  • ஒரு சொல்லோ, சொற்றொட இரு பொருள்பட தருமாறு பாடுவது சிலேடைப்பாடல் (அ) இரட்டுற மொழிதல் எனப்படும்.
  • இரட்டுற மொழிதல் அணியை சிலேடை அணி என்றும் அழைப்பர்.
  • இதனை வடமொழியாளர்கள் சிலேடை அணி என்பர். தமிழில் இரட்டுற மொழிதல் அணி என்பர்.
  • செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப் பேச்சிலும் சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆழிக்கு இணை தமிழ்

தமிழ்

முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்

மெத்த வணிகலமும் மேவலால் – நித்தம்

கடல்

அணை கிடந்தே சங்கத்தவர் காக்க ஆழிக்கு

இணை கிடந்ததே தமிழ் ஈண்டு

தமிழ்

  • இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது
  • முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது
  • ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது
  • சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது

 கடல்

  • முத்தினையும் அமிழ் தினையும் தருகிறது
  • வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது
  • மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது
  • தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது

சொல்லும் பொருளும்

  • துய்ப்பது – கற்பது. தருதல்
  • மேவலால் – பொருந்துதலால் ,பெறுதலால்

தமிழுக்கும்கடலுக்கும் ஒப்பீடு

பாடல்                                    தமிழுக்கு                                                     கடலுக்கு

முத்தமிழ் (3)                இயல்,இசை,நாடகம்                 முத்திணனை அமிழ்ந்து எடுத்தல்

 

முச்சங்கம் -(3)             முதல்,இடை,கடை                        மூன்று வகையான சங்குகள்

 

மொத்த அணிகலன் – (5)    ஐம்பெரும் காப்பியங்கள் மிகுதியான வணிகக் கப்பல்கள்

 அறிஞர்களின் சிலேடை (இரட்டுற மொழிதல்) பேச்சு

காலை நேரம் வரவேற்பு நிகழ்ச்சி – கி.வா.ஜகந்நாதன்

  • “அடடே! காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே!” – தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன்

வித்துவானின் இசை நிகழ்ச்சி விமர்சனம் – சுப்புடு

  • “அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல், குரலிலும் கம்மல்” – இசை விமர்சகர் சுப்புடு

பல் மருத்துவர் – – கி.ஆ.பெ. விசுவநாதன்

  • “இவர் பல்துறை வித்தகர்” – கி.ஆ.பெ.விசுவநாதன்

முந்தைய ஆண்டு வினாக்கள்

ஒரு சொல்லோ தொடரோ இரு பொருள் தருமாறு பாடுவது
(A) தற்குறிப்பேற்றணி
(B) உவமையணி
(C) உருவக அணி
(D) இரட்டுறமொழிதல் அணி

இரட்டுற மொழிதல் என்பது
(A) ஒரு சொல் பல பொருட்களைத் தருதல்
(B) ஒரு சொல் இரண்டு பொருள்பட அமைந்து வருதல்
(C) பல சொற்கள் ஒரு பொருள் தருதல்
(D) ஒரே சொல் மீண்டும் மீண்டும் பலமுறை வருதல்
(E) விடை தெரியவில்லை

 

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!