மதுரைக்காஞ்சி – மாங்குடி மருதனார்
மதுரைக்காஞ்சி பத்துபாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள். மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப்பட்டது. மதுரைக்காஞ்சியைப் ‘பெருகுவள மதுரைக்காஞ்சி’ என சிறப்பித்துக் கூறுவர். மதுரைக்காஞ்சி 782 அடிகளைக் கொண்டது. அவற்றுள் 354 அடிகள் மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன. மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் தலையாங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார். மாங்குடி மருதனார் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாங்குடி […]