கிராம ஊராட்சி
- கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு கிராம ஊராட்சி ஆகும்.
- கிராம ஊராட்சி மக்களுக்கும் அரசுக்கும் இடையே இணைப்புப் பாலமாக செயல்படுகிறது.
- கிராமங்கள், மக்கள் தொகைக்கு ஏற்ப பல பகுதிகளாகப் (Ward) பிரிக்கப்படுகின்றன.
- இதன் பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
Contents show
தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள்
- ஊராட்சி மன்றத் தலைவர்
- பகுதி உறுப்பினர்கள்
- ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்)
- மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்
ஊராட்சி ஒன்றியம்
- பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படுகிறது.
- ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்) ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
- கவுன்சிலர்கள் தங்களில் ஒருவரை ஊராட்சி ஒன்றியத் தலைவராகத் தேர்ந்தெடுப்பர்.
- துணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார், வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) இதன் நிர்வாக அலுவலர் ஆவார்.
- ஊராட்சி ஒன்றிய அளவில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மாவட்ட ஊராட்சி
- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைக்கப்பட்டுள்ளது. 50,000 மக்கள் தொகை என்ற அடிப்படையில் மாவட்டம் பல பகுதிகளாகப் (District Panchayat ward) பிரிக்கப்படுகின்றது. பகுதி உறுப்பினர்களைக் கிராம ஊராட்சி மக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.
- மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் தங்களின் ஒருவரை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கின்றனர்.
- ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் வளர்ச்சித் திட்டங்களைக் கண்காணிக்கவும் மேற்பார்வையிடவும் செய்கின்றனர்.
- உள்ளாட்சி அமைப்புகள் தேந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
- தொகுதிகள், பகுதிகள் (wards) என அழைக்கப்படுகின்றன. பகுதி உறுப்பினர்கைள மக்கள் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.
- அவ்வாறே மாநகராட்சித் தலைவரும் (மேயர்), நகராட்சித் தலைவரும் நேரடி தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.
- மாநகராட்சித் துணைத்தலைவரும், நகராட்சித் துணைத் தலைவரும் அந்தந்தப் பகுதி (ward) உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்கள்.
கிராம ஊராட்சியின் பணிகள்
- அவசியப் பணிகள்
- குடிநீர் வழங்குதல்
- தெருவிளக்கு அமைத்தல்
- தெருக்களைத் தூய்மைப்படுத்துதல்
- கழிவு நீர்க் கால்வாய் அமைத்தல்
- ஊர்ச்சாலைகள் அமைத்தல்
- மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்.
விருப்பப் பணிகள்
- பூங்கா அமைத்தல்
- நூலகம் அமைத்தல்
- விளையாட்டு மைதானம் அமைத்தல்.
மாநகராட்சியின் பணிகள்
- குடிநீர் வசதி
- தெருவிளக்கு அமைத்தல்
- தூய்மைப் பணி
- மருத்துவச் சேவை
- சாலைகள் அமைத்தல்
- மேம்பாலங்கள் அமைத்தல்
- சந்தைகளுக்கான இடவசதி
- கழிவுநீர்க்கால்வாய்
- திடக்கழிவு மேலாண்மை
- மாநகராட்சிப் பள்ளிகள்
- பூங்காக்கள்
- விளையாட்டு மைதானங்கள்
- பிறப்பு, இறப்பு பதிவு
The Village Panchayats
- The Village Panchayats are the local bodies of villages. They act as a link between the people and the government.
- Villages are divided into wards based on their population. The representatives are elected by the people.
Panchayat Union
- Many village Panchayats join to form a Panchayat Union. A Councillor is elected from each Panchayat.
- Those councillors will elect a Panchayat Union Chairperson among themselves.
- A Vice-Chairperson is also elected. A Block Development Officer (BDO) is the administrative head, of a Panchayat Union.
- The services are provided on the Panchayat Union level.
District Panchayat
- A District Panchayat is formed in every district. A district is divided into wards on the basis of a 50,000 population.
- The ward members are elected by the Village Panchayats. The members of the District Panchayat elect the District Panchayat Committee Chairperson.
- They provide essential services and facilities to the rural population and the planning and execution of development programmes for the district.
- The local bodies are governed by the representatives elected by the people. The constituencies are called wards. People elect their ward members.
- The Mayor of the City Municipal Corporation and the Municipal Chairperson are the elected representatives of the people.
- The people elect them. The Corporation Deputy Mayor and the Municipal Vice-Chairperson are elected by the ward councillors”
The Elected Representatives
- Panchayat President
- Ward members
- Councillor
- District Panchayat Ward Councillor
Functions of the village Panchayat
Obligatory Functions
- Water supply
- Street lighting
- Cleaning roads
- Drainage & sewage pipes system
- Laying down roads
- Activation of Central and State Government schemes Discretionary Functions
- parks
- Libraries
- Playgrounds, etc.
Functions of the City Municipal Corporation
- Drinking water supply
- Street Lighting
- Maintenance of Clean Environment
- Primary Health Facilities
- Laying of Roads
- Building flyovers
- Space for markets
- Drainage System
- Solid waste management
- Corporation schools
- Parks
- Playgrounds
- Birth and Death registration, etc.