ஊரகக் கடன்களுக்கான காரணங்களை ஆராய்க. / Analyse the causes for Rural Indebtedness.

Contents show
ஊரக கடன்சுமை 
  • ஊரக கடன்சுமை என்பது கிராம மக்கள் குறிப்பிட்ட காலத்தில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாமல் கடனின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையைக் குறிக்கும்
  • இந்தியாவின் நிதி கட்டமைப்பு பலவீனமாக இருப்பதனால் உதவி தேவைப்படும் விவசாயிகள், நிலமற்ற விவசாயிகள் மற்றும் வேளாண் கூலி தொழிலாளர்களின் கடன்சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது
  • இதனால் குறைந்த வாழ்க்கைத் தரம், குறைந்த உற்பத்தித் திறன், தற்கொலைகள் போன்ற தீய விளைவுகள் ஏற்படுகின்றன.
ஊரக கடன்சுமைகளின் இயல்புகள் 
  • இந்தியாவில் ஏறக்குறைய 4 ல் 3 பகுதி ஊரக குடும்பங்கள் கடனில் மூழ்கி உள்ளனர்
  • சிறு விவசாயிகளுக்கு கடன் சுமை அதிகம்
  • விவசாய தொழிலாளர்கள் மற்ற தொழிலாளர்களைக் காட்டிலும் மிகுந்த கடனாளிகளாக உள்ளனர்.
  • பெரும்பாலான கடன்கள் குறுகிய கால கடன்கள் மற்றும் உற்பத்தி இயல்பற்றவை
  • அதிக வட்டிக்கு கடன் வாங்குபவர்களின் சதவிகிதமே அதிகமாக உள்ளது
  • பெரும்பான்மையான கிராம மக்கள் தனியார் நிறுவனங்களிடமிருந்தும், அதிகவட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடமிருந்தும் கடன் பெறுகிறார்கள்
ஊரக கடன்களுக்கான காரணங்கள் 
ஊரக கடன்களுக்கான காரணங்கள் பின்வருமாறு 
விவசாயிகளின் ஏழ்மை நிலை
  • வறுமையில் நுகர்விற்காகவும், விவசாயத் தொழிலை மேற்கொள்வதற்காகவும் மற்றும் குடும்ப விழாக்களுக்காவும் விவசாயிகளை கடன் பெறத் தூண்டுகிறது
  • ஏழ்மை நிலை, கடன் மற்றும் கடனுக்கான அதிக வட்டி முதலியன விவசாயிகளைக் கடன் கொடுப்பவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறது
பருவமழை பொய்த்தல்
  • அடிக்கடி பருவமழை பொய்த்துப் போவது விவசாயிகளுக்கு சாபமாக அமைகிறது
  • இயற்கை பொய்த்துப் போவதால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்
  • ஆதலால் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாமல் அவதிப்படுகின்றனர்
  • விவசாயம் எப்போது சிறக்கும், கடன்களை அடைக்கலாமென அவர்களால் கணிக்க முடியவில்லை
வழக்குகள்
  • நிலங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதால் அதற்காக செலவிட அதிக கடன் பெறுகிறார்கள்
  • அவர்களின் கல்வியறிவின்மையாலும் அறியாமையாலும் வழக்குகள் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு அவர்கள்சேமிப்பு மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன
வட்டிக்குகடன் தருவோர் மற்றும் அதிக வட்டி வீதம்
  • உள்ளூரில் வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் அதிக வட்டி வசூலித்தல் மற்றும் அசலுடன் வட்டியைச் சேர்த்து அதிகரித்துக்கொண்டே செல்வதால் விவசாயிகள் கடனிலேயே மூழ்கும் நிலை உள்ளது
ஊரக கடன்களை தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் 
ஊரக கடன்களைத் தீர்ப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
  • அவை வட்டிக்கு கடன் கொடுப்பவர்களை ஒழுங்குபடுத்துதல், ஊரக வங்கிகளை மேம்படுத்துதல், வட்டார ஊரக வங்கிகள் (RRBs) தொடங்குதல், நுண்கடன்கள் வழங்குதல், சுயஉதவிக் குழுக்களை அமைத்தல் (SHGs), தொடக்க கூட்டுறவு வங்கிகள் மற்றும் நில வங்கிகள் தொடங்குதல், பயிர் கடன் வழங்குதல், முன்னோடி வங்கித்திட்டங்கள், சிறிய அலகு முன்னேற்ற மற்றும் மறு நிதியளிப்பு முகவர் வங்கி (MUDRA) தொடங்குதல், துணை தொழில்களை உருவாக்குதல், விவசாயம் சாரா தொழில்களை உருவாக்குதல், திறன் மேம்பாடு பயிற்சிகள் அளித்தல்
  • இருப்பினும் ஏழைகள் மற்றும் சுய உதவிக்குழுவினருக்கு வட்டி வீதங்கள் மற்றும் போக்குவரத்து செலவினங்கள் வசதிமிக்கவர்களுக்கு கிடைப்பதைக் காட்டிலும் அதிகமாக உள்ளது

 

Rural Indebtedness 
  • Rural indebtedness refers to the situation of the rural people unable to repay the loan accumulated over a period. 
  • The existence of rural indebtedness indicates the weak financial infrastructure of our country, in reaching the needy farmers, landless people and agricultural labourers.
Features of Rural Indebtedness
  • Nearly three fourth of rural families in the country are in debt. The amount of debt is heavier in the case of small farmers. 
  • Cultivators are more indebted than the non-cultivators. Most of the debts taken are short term and of unproductive nature. 
  • The proportion of debts having higher rates of interest is relatively high. Most of the villagers are indebted to private agencies particularly money lenders. 
Causes for Rural Indebtedness
The causes for rural indebtedness may be summarized as below:
The poverty of Farmers: 
  • The vicious circle of poverty forces the farmers to borrow for consumption, cultivation and celebrations. Thus, poverty, debt, and high rates of interest hold the farmer in the grip of money lenders. 
Failure of Monsoon: 
  • Frequent failure of monsoon is a curse to the farmers and they have to suffer due to the failure of nature. 
  • Therefore, farmers find it difficult to identify good years to repay their debts. 
Litigation: 
  • Due to land disputes litigation in the court compels them to borrow heavily. Being uneducated and ignorant, they are caught in the litigation process and dry away their savings and resources.
Money Lenders and High Rate of Interest: 
  • The rate of interest charged by the local money lenders is very high and the compounding of interest leads to perpetuating indebtedness of the farmer.
Measures to Remove Rural Indebtedness 
  • Several remedial measures have been introduced to reduce rural indebtedness. It includes regulation of money lenders, development of rural banks, Regional Rural Banks (RRBs), Micro Finance, formation of Self Help Groups (SHGs), Primary Cooperative Banks and Land Development Banks, Crop Loan Schemes, Lead Bank Schemes, Micro Units Development and Refinance Agency Bank (MUDRA), promotion of subsidiary occupation, off-farm employment opportunities, skill development programmes and so on. However, the interest rate charged plus transaction cost for poor people and Self-Help Groups is much higher as compared to that for rich people. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!