நீர் மாசுபடுதல்
உயிரினங்களுக்கு ஆபத்தான, உயிரினங்களின் உடல் நலனைக் கெடுக்கிற பொருள்களையோ, சக்திகளையோ மனிதன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நீர் நிலைகளுக்குள் செலுத்துதல் நீர் மாசுபடுத்துதல் ஆகும்.
Contents show
நீர் மாசுபடுதலுக்கான காரணங்கள்
கழிவு நீர் மற்றும் தேவையற்ற நீர் வெளியேற்றம்
- பல இடங்களில் இருந்து வருகின்ற சாக்கடைத் தண்ணீர், கழிவு நீர் குப்பைகள், விவசாயக் கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் நீர் நிலைகளில் கொட்டப்படுகின்றது.
- இத்தகைய கழிவுகளில் உள்ள நச்சுப்பொருட்கள் தண்ணீரை மாசுபடுத்தி நச்சுத்தன்மை உள்ளதாக மாற்றுகின்றது
திடக் கழிவுகள் குவித்தல்
- திடப்பொருள் கழிவுகளை நீர் நிலையில் கொட்டுதல், நீர் நிலையுடன் கலந்துவிடுமாறு விட்டுவிடுதல்.
ஆலைக் கழிவுகளைக் கொட்டுதல்
- மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் மாசுப்பொருட்களான, ஆஸ்பெஸ்ட்டாஸ், காரீயம், பாதரசம், கிரிஸ் எண்ணெய் மற்றும் பெட்ரோலியக் கழிவுகள் போன்றவை ஆலைக்கழிவுகளில் அதிகம் உள்ளது.
எண்ணெய் சிந்துதல்
- கப்பல்களாலும் குறிப்பாக எண்ணெய்க் கப்பல்களாலும் எண்ணெய் கடல்நீரை மாசுபடுத்துக்கின்றது. கடல்நீரில் எண்ணெய் கலக்காமல் படலமாகத் தண்ணீரில் படர்கின்றது.
- இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
அமில மழை
- காற்று மாசுவினால் அமில மழை ஏற்பட்டு நீர்மாசு ஏற்படுத்துகின்றது.
- காற்று மாசுவில் உள்ள அமிலத் துகள்கள் தண்ணீர் ஆவியுடன் கலந்து அமில மழையை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
புவி வெப்பமடைதல்
- புவி வெப்பமடைதல் காரணமாக நீரின் வெப்ப நிலை அதிகரித்து நீர்வாழ் உயிரினங்களைப் பாதிக்கின்றது.
நீர்நிலைகளில் பிராண வாயு குறைதல் (Eutrophication)
- நீர்நிலைகள் மாசுபடும் போது தண்ணீரில் அதிக அளவு நைட்ரஜனும் குறைந்த அளவு பிராணவாயுவும் இருக்கும்.
- இதனால் நீர்நிலைகளில் பாசிபடர்ந்து காணப்படும். பிராண வாயுக் குறைபாட்டால் மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
நீர் மாசுவின் விளைவுகள்
- மனித இனம், விலங்குகள், தாவரங்கள் என அனைத்தும் நீர் மாசுவால் பாதிக்கப்படுகின்றது. விவசாயத்தில் நீர் மாசுவால் பயிரும் நிலத்தின் வளத்தன்மையும் பாதிக்கப்படுகின்றது.
- கடல் வாழ் உயிரினங்கள் கடல் நீர் மாசுவினால் பாதிக்கப்படுகின்றது.
- இத்தகைய பாதிப்புக்களின் விளைவுகள் எத்தைகைய வேதியியல் பொருட்கள் கலக்கின்றன மற்றும் மாசுகளின் அடர்த்தி ஆகியவற்றைப் பொறுத்து அமைகின்றன.
- நகர்ப்புறங்களில் உள்ள நீர் நிலைகள் குப்பைகள், கழிவு நீர், உற்பத்தி நிறுவனங்கள் மருத்துவ மையங்கள் அங்காடிகள் ஆகியவற்றின் கழிவுகளைக் கொட்டுவதாலும் மாசு அடைகின்றது.
நீர்வாழ் உயிரினங்களின் இறப்பு:
- நீர் மாசுவினால் நீர்நிலைகளில் உள்ள நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகின்றது இதன் காரணமாக கடல் வாழ் உயிரினங்களான மீன், நண்டு, கடல்பறவைகள், டால்பின் போன்றவைகள் இறந்து கடற்கரைகளில் ஒதுங்குகின்றது.
இயற்கையான உணவுப் பாதை இடைநிறுத்தப்படுகின்றது
- காரீயம், காட்மியம் போன்ற மாசுக்காரணிகள் கலந்த உணவை சிறிய பறவைகள், அவற்றை உண்ட மீன்கள், அவற்றை உண்ட மனிதர்கள் என அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
நோய்கள் பரவுதல்:
- சுத்திகரிக்கப்படாத அல்லது சரியாக சுத்திகரிக்கப்படாத கழிவுகள் நீர்நிலைகளில் கலக்கும் போது வாழ்வியல் நிலைகளைப் பேரளவு பாதிக்கின்றன.
- திறந்த வெளியில் மலம் கழித்தல், திடக் கழிவுகளைக் கொட்டுதல், சாக்கடை நீரைக் கலத்தல் ஆகியவற்றின் மூலமாக தண்ணீர் மூலம் பரவும் நோய்களான ஹெபாடிட்டிஸ் A, டைபாய்டு, மலேரியா, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, டெங்கு காய்ச்சல், வைரல் காய்ச்சல் மற்றும் புழுத்தொற்றுக்கள் ஏற்படுகின்றன.
இயற்கை அமைப்புகளை அழித்தல் (Destruction of eco – Systems)
- இயற்கை அமைப்புக்கள் அதிக அளவில் நீர் மாசுவினால் பாதிக்கப்படுகின்றது. இவ்வாறு இயற்கை அமைப்புக்கள் பாதிக்கப்படுகின்ற போது மனித வர்க்கத்திற்கு அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
நீர் மாசுவினைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய தீர்வுகள்
- ஒருங்கிணைந்த நீர்நிர்வாக நடவடிக்கையை மேற்கொள்ளல்.
- தேங்கு நீர்க் குளங்களும் முறையான வடிகால் வசதியும் ஏற்படுத்துதல்.
- வடிநீர்க் கால்வாய்களை பராமரித்தல்.
- கழிவு மற்றும் சாக்கடை நீரை சுத்தப்படுத்தும் அமைப்புக்களை நிறுவுதல்.
- தொடர்ந்து நீர் ஆதாரங்கள் மற்றும் கழிவு நீரைக் கண்காணித்தல்.
- சட்ட விரோதமாக நீர்நிலைகளில் கழிவுகளைக் கொட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தல்.
[the_ad id=”6551″]
Water Pollution
The introduction (directly or indirectly) of substances or energy into the marine environment (including estuaries) results in deleterious effects to living resources, hazards to human health, a hindrance to marine activities.
Causes of water pollution:
Discharge of sewage and wastewater:
- Sewage, garbage and liquid waste of households, agricultural runoff and effluents from factories are discharged into lakes and rivers.
- These wastes contain harmful chemicals and toxins which make the water poisonous for aquatic animals and plants.
Dumping of solid wastes:
- The dumping of solid wastes and litter in water bodies cause huge problems.
Discharge of industrial wastes:
- Industrial waste contains pollutants like asbestos, lead, mercury, grease oil and petrochemicals, which are extremely harmful to both people and
Oil Spill:
- Seawater gets polluted due to oil spilled from ships and tankers while travelling.
- The spilled oil does not dissolve in water and forms a thick sludge polluting the water.
Acid rain:
- Acid rain is the pollution of water caused by air pollution.
- When the acidic particles caused by air pollution in the atmosphere mix with water vapour, it results in acid rain.
Global warming:
- Due to global warming, there is an increase in water temperature as a result aquatic plants and animals are affected.
Eutrophication:
- Eutrophication is an increased level of nutrients in water bodies.
- This results in the bloom of algae in the water.
- It also depletes the oxygen in the water which negatively affects fish and other aquatic animal populations.
Effects of Water Pollution
- Water pollution adversely affects the health and life of man, animals and plants alike.
- Polluted water is also harmful to agriculture as it adversely affects crops and soil fertility.
- Pollution of seawater damages oceanic life.
- The effects can be catastrophic, depending on the kind of chemicals, concentrations of the pollutants.
- The effects of water pollution are varied and depend on what chemicals are dumped and in which locations.
- Many water bodies near urban areas are highly polluted. This is the result of both garbage dumped by individuals and dangerous chemicals legally or illegally dumped by manufacturing industries, health centres and markets.
Death of aquatic animals:
- The main problem caused by water pollution is that it kills organisms that depend on these water bodies.
- Dead fish, crabs, birds and seagulls, dolphins, and many other animals often wind up on beaches, killed by pollutants in their habitat.
Disruption of food-chains:
- Pollution disrupts the natural food chain as well.
- Pollutants such as lead and cadmium are eaten by tiny animals.
- Later, these animals are consumed by fish and the food chain continues disrupted at all higher levels.
Diseases:
- The discharge of untreated and under-treated effluent contributes to severe ecological degradation.
- The indiscriminate human activities such as open defecation, solid waste dumping, discharge of drainage water are responsible for the pathogenic bacteria water-borne diseases like Hepatitis-A, Typhoid, Malaria, Dysentery, Jaundice, Dengue fever, Viral fever and Worm infections.
Destruction of Ecosystems:
- Ecosystems can be severely destroyed by water pollution.
- Many areas are now being affected by careless human pollution, and this pollution is coming back to hurt humans in many ways.
Remedial measures to Control Water Pollution
- Comprehensive water management plan.
- Construction of proper storm drains and settling ponds.
- Maintenance of drain line
- Effluent and sewage treatment plant.
- Regular monitoring of water and wastewater.
- Stringent actions towards illegal dumping of waste into the water bodies.