மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்
- வேலை செய்யும் உரிமை (Right to Work) உத்திரவாதம் அளிக்கும் ஒரு சமூக நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
- கிராமப்புற இந்தியாவில் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உள்ளூர் அரசாங்கம் குறைந்தபட்சம் 100 நாட்கள் ஊதியத்துடன் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
முக்கிய நோக்கங்கள்:
- திறன் சாராத பணியாளர்களுக்கு (Unskilled Labour) வருடத்திற்கு 100 நாட்களுக்கு குறையாத ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை வழங்குதல்.
- கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.
- கிணறுகள், குளங்கள், சாலைகள் மற்றும் கால்வாய்களின் போன்ற கிராமப்புற உள்கட்டமைப்புகளை உருவாக்குதல்.
- கிராமப்புறங்களில் இருந்து நகர்புற இடப்பெயர்வை குறைத்தல்.
சலுகை பெற தகுதிகள்:
- இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
- வேலை தேடுபவர் விண்ணப்பிக்கும் நேரத்தில் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் உள்ளூர்வாசி ஆக இருக்க வேண்டும்.
- விண்ணப்பம் சமர்ப்பித்து 15 நாட்களுக்குள்/ வேலை கோரப்பட்ட நாளிலிருந்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
- இந்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை (Department of rural development and panchayat raj) மற்றும் மாநில அரசும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.
- MGNREGA பணிகள் சமூக தணிக்கை (Social Audit) கட்டாயமாகும். இது பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு உதவுகிறது.
கிராம சபையின் பங்கு:
- கிராமசபை கூட்டங்களில் உள்ளூர் தேவைகளை கருத்தில் கொண்டு பணிகள் முன்னுரிமை தீர்மானிக்கப்படுகின்றது.
- கிராமசபை வேலைகளுக்கான விண்ணப்பங்களை பெற்று அதனை சரிபார்க்கிறது.
- வேலை வாய்ப்பிற்கான அட்டைகளை வழங்குகின்றது.
- மேலும் விண்ணப்பங்களை தேதியிட்ட ரசீதை வழங்குகின்றது.
- விண்ணப்பம் பெற்ற பின்பு அவர்களுக்கான வேலை வாய்ப்பை ஒதுக்கீடு செய்கின்றது.
மாநில அரசின் பொறுப்புகள்:
- மாநில வேலைவாய்ப்பு உத்தரவாத நிதியை (State Employment Guarantee Fund) நிறுவுகின்றது.
it’s useful data sir… Thank you so much for ur effort…..
Thank You Mam