Contents showம. சிங்காரவேலர் (1860-1946)
சென்னை மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில், தொழிலாளர் இயக்க முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
சென்னையில் பிறந்த அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாநிலக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.
இளமைக் காலத்தில் பௌத்தத்தைப் பரிந்துரை செய்தார்.
அவர் தமிழ், ஆங்கிலம், உருது, இந்தி, ஜர்மன், பிரெஞ்ச் மற்றும் ரஷ்யன் என பலமொழிகள் அறிந்திருந்ததோடு காரல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், ஹெர்பர்ட் ஸ்பென்சர், ஆல்பர்ட் ஐன்ஸ்டின் ஆகியோரின் கருத்துக்களைத் தமிழில் வடித்தவர்.
1923 இல் முதல் முதலாக மே தின விழாவை ஏற்பாடு செய்தவரும் அவரே.
அவர் இந்திய பொதுவுடைமை (கம்யூனிஸ்ட்) கட்சியின் ஆரம்பகான தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சனைகளைப் வெளிப்படுத்துவதற்காக தொழிலாளன். (Worker) என்ற பத்திரிக்கையை வெளியிட்டார்.
பெரியாரோடும் சுயமரியாதை இயக்கத்தோடும் நெருக்கமாக இருந்தார்.
Singaravelar (1860-1946)
Singaravelar was a pioneer in the Labour movement activities in the Madras presidency.
He was born in Madras and graduated from the Presidency College, University of Madras.
He advocated Buddhism in his early life.
He knew many languages. including Tamil, English, Urdu, Hindi, German, French and Russian and wrote about the ideas of Karl Marx, Charles Darwin, Herbert Spencer and Albert Einstein in Tamil.
He organised the first-ever celebration of May Day in 1923.
He was one of the early leaders of the Communist Party of India.
He published a Tamil newspaper, Thozhilahm (Worker) to address the problems of the working class. He was closely associated with Periyar and the Self-Respect Movement.
மயிலை சின்னதம்பி ராஜா (1883-1943)
மக்களால் எம்.சி. ராஜா என அழைக்கப்பட்ட அவர் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முக்கியமானவர் தலைவர்களில் ஒருவர்.
ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கிய அவர் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றுக்கான பல்வேறு) பாடப்புத்தகங்களை எழுதினார்.
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை (நீதிக்கட்சி) உருவாக்கியவர்களில் ஒருவராவார்.
சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து சட்டமேலவைக்கு தேர்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினராவார். (1920-1926)
சென்னை சட்ட சபையில் நீதிக்கட்சியின் துணைத் தலைவராகச் செயல்பட்டார்.
1928 இல் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் எனும் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக நீண்டகாலம் பணியாற்றினார்.
M.C. Rajah
Mylai Chinnathambi Raja (1883-1943), popularly known as M.C. Rajah, was one of the prominent leaders from the depressed class Rajah started his career as a teacher and wrote different textbooks for schools and colleges.
He was one of the founding members of the South Indian Liberal Federation (Justice Party).
He became the first elected Legislative Council Member (1920-26) from the depressed classes in Madras province.
He functioned as the Deputy Leader of the Justice Party in the Madras Legislative Council.
In 1928, he founded the All India Depressed Classes Association and was its long time leader.