கிராம மற்றும் நகர மேம்பாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வாறு? / Local bodies play an important role in the development of villages and cities. How?

கிராம ஊராட்சி

  • கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு கிராம ஊராட்சி ஆகும்.
  • கிராம ஊராட்சி மக்களுக்கும் அரசுக்கும் இடையே இணைப்புப் பாலமாக செயல்படுகிறது.
  • கிராமங்கள், மக்கள் தொகைக்கு ஏற்ப பல பகுதிகளாகப் (Ward) பிரிக்கப்படுகின்றன.
  • இதன் பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள்
  • ஊராட்சி மன்றத் தலைவர்
  • பகுதி உறுப்பினர்கள்
  • ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்)
  • மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்
ஊராட்சி ஒன்றியம்
  • பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்) ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • கவுன்சிலர்கள் தங்களில் ஒருவரை ஊராட்சி ஒன்றியத் தலைவராகத் தேர்ந்தெடுப்பர்.
  • துணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார், வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) இதன் நிர்வாக அலுவலர் ஆவார்.
  • ஊராட்சி ஒன்றிய அளவில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மாவட்ட ஊராட்சி
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைக்கப்பட்டுள்ளது. 50,000 மக்கள் தொகை என்ற அடிப்படையில் மாவட்டம் பல பகுதிகளாகப் (District Panchayat ward) பிரிக்கப்படுகின்றது. பகுதி உறுப்பினர்களைக் கிராம ஊராட்சி மக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.
  • மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் தங்களின் ஒருவரை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கின்றனர்.
  • ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் வளர்ச்சித் திட்டங்களைக் கண்காணிக்கவும் மேற்பார்வையிடவும் செய்கின்றனர்.
  • உள்ளாட்சி அமைப்புகள் தேந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
  • தொகுதிகள், பகுதிகள் (wards) என அழைக்கப்படுகின்றன. பகுதி உறுப்பினர்கைள மக்கள் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.
  • அவ்வாறே மாநகராட்சித் தலைவரும் (மேயர்), நகராட்சித் தலைவரும் நேரடி தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.
  • மாநகராட்சித் துணைத்தலைவரும், நகராட்சித் துணைத் தலைவரும் அந்தந்தப் பகுதி (ward) உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்கள்.
கிராம ஊராட்சியின் பணிகள்
  1. அவசியப் பணிகள்
  2. குடிநீர் வழங்குதல்
  3. தெருவிளக்கு அமைத்தல்
  4. தெருக்களைத் தூய்மைப்படுத்துதல்
  5. கழிவு நீர்க் கால்வாய் அமைத்தல்
  6. ஊர்ச்சாலைகள் அமைத்தல்
  7. மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்.
விருப்பப் பணிகள்
  • பூங்கா அமைத்தல்
  • நூலகம் அமைத்தல்
  • விளையாட்டு மைதானம் அமைத்தல்.
மாநகராட்சியின் பணிகள்
  • குடிநீர் வசதி
  • தெருவிளக்கு அமைத்தல்
  • தூய்மைப் பணி
  • மருத்துவச் சேவை
  • சாலைகள் அமைத்தல்
  • மேம்பாலங்கள் அமைத்தல்
  • சந்தைகளுக்கான இடவசதி
  • கழிவுநீர்க்கால்வாய்
  • திடக்கழிவு மேலாண்மை
  • மாநகராட்சிப் பள்ளிகள்
  • பூங்காக்கள்
  • விளையாட்டு மைதானங்கள்
  • பிறப்பு, இறப்பு பதிவு

 

The Village Panchayats
  • The Village Panchayats are the local bodies of villages. They act as a link between the people and the government.
  • Villages are divided into wards based on their population. The representatives are elected by the people.
Panchayat Union
  • Many village Panchayats join to form a Panchayat Union. A Councillor is elected from each Panchayat.
  • Those councillors will elect a Panchayat Union Chairperson among themselves.
  • A Vice-Chairperson is also elected. A Block Development Officer (BDO) is the administrative head, of a Panchayat Union.
  • The services are provided on the Panchayat Union level.
District Panchayat
  • A District Panchayat is formed in every district. A district is divided into wards on the basis of a 50,000 population.
  • The ward members are elected by the Village Panchayats. The members of the District Panchayat elect the District Panchayat Committee Chairperson.
  • They provide essential services and facilities to the rural population and the planning and execution of development programmes for the district.
  • The local bodies are governed by the representatives elected by the people. The constituencies are called wards. People elect their ward members.
  • The Mayor of the City Municipal Corporation and the Municipal Chairperson are the elected representatives of the people.
  • The people elect them. The Corporation Deputy Mayor and the Municipal Vice-Chairperson are elected by the ward councillors”
The Elected Representatives
  1. Panchayat President
  2. Ward members
  3. Councillor
  4. District Panchayat Ward Councillor
Functions of the village Panchayat
Obligatory Functions
  • Water supply
  • Street lighting
  • Cleaning roads
  • Drainage & sewage pipes system
  • Laying down roads
  • Activation of Central and State Government schemes Discretionary Functions
  • parks
  • Libraries
  • Playgrounds, etc.
Functions of the City Municipal Corporation
  • Drinking water supply
  • Street Lighting
  • Maintenance of Clean Environment
  • Primary Health Facilities
  • Laying of Roads
  • Building flyovers
  • Space for markets
  • Drainage System
  • Solid waste management
  • Corporation schools
  • Parks
  • Playgrounds
  • Birth and Death registration, etc.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!