ம. சிங்காரவேலர் மற்றும் மயிலை சின்னதம்பி ராஜா பற்றி சிறுகுறிப்பு வரைக / Write a Short note on M. Singaravelar and M.C. Rajah

Contents show
ம. சிங்காரவேலர் (1860-1946)
  • சென்னை மாகாண தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில், தொழிலாளர் இயக்க முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
  • சென்னையில் பிறந்த அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாநிலக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.
  • இளமைக் காலத்தில் பௌத்தத்தைப் பரிந்துரை செய்தார்.
  • அவர் தமிழ், ஆங்கிலம், உருது, இந்தி, ஜர்மன், பிரெஞ்ச் மற்றும் ரஷ்யன் என பலமொழிகள் அறிந்திருந்ததோடு காரல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், ஹெர்பர்ட் ஸ்பென்சர், ஆல்பர்ட் ஐன்ஸ்டின் ஆகியோரின் கருத்துக்களைத் தமிழில் வடித்தவர்.
  • 1923 இல் முதல் முதலாக மே தின விழாவை ஏற்பாடு செய்தவரும் அவரே.
  • அவர் இந்திய பொதுவுடைமை (கம்யூனிஸ்ட்) கட்சியின் ஆரம்பகான தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
  • தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சனைகளைப் வெளிப்படுத்துவதற்காக தொழிலாளன். (Worker) என்ற பத்திரிக்கையை வெளியிட்டார்.
  • பெரியாரோடும் சுயமரியாதை இயக்கத்தோடும் நெருக்கமாக இருந்தார்.

 

Singaravelar (1860-1946)
  • Singaravelar was a pioneer in the Labour movement activities in the Madras presidency.
  • He was born in Madras and graduated from the Presidency College, University of Madras.
  • He advocated Buddhism in his early life.
  • He knew many languages. including Tamil, English, Urdu, Hindi, German, French and Russian and wrote about the ideas of Karl Marx, Charles Darwin, Herbert Spencer and Albert Einstein in Tamil.
  • He organised the first-ever celebration of May Day in 1923.
  • He was one of the early leaders of the Communist Party of India.
  • He published a Tamil newspaper, Thozhilahm (Worker) to address the problems of the working class. He was closely associated with Periyar and the Self-Respect Movement.

 

மயிலை சின்னதம்பி ராஜா (1883-1943)
  • மக்களால் எம்.சி. ராஜா என அழைக்கப்பட்ட அவர் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முக்கியமானவர் தலைவர்களில் ஒருவர்.
  • ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கிய அவர் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றுக்கான பல்வேறு) பாடப்புத்தகங்களை எழுதினார்.
  • தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை (நீதிக்கட்சி) உருவாக்கியவர்களில் ஒருவராவார்.
  • சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து சட்டமேலவைக்கு தேர்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினராவார். (1920-1926)
  • சென்னை சட்ட சபையில் நீதிக்கட்சியின் துணைத் தலைவராகச் செயல்பட்டார்.
  • 1928 இல் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் எனும் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக நீண்டகாலம் பணியாற்றினார்.
M.C. Rajah
  • Mylai Chinnathambi Raja (1883-1943), popularly known as M.C. Rajah, was one of the prominent leaders from the depressed class Rajah started his career as a teacher and wrote different textbooks for schools and colleges.
  • He was one of the founding members of the South Indian Liberal Federation (Justice Party).
  • He became the first elected Legislative Council Member (1920-26) from the depressed classes in Madras province.
  • He functioned as the Deputy Leader of the Justice Party in the Madras Legislative Council.
  • In 1928, he founded the All India Depressed Classes Association and was its long time leader.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!