How to pass TNPSC exam in First Attempt?

Contents show
என்னுடைய பெயர் ராம்.நான் தற்பொழுது தமிழ்நாடு அரசில் குரூப் 2 (INTERVIEW) பணியில் Co-OPERATIVE DEPARTMENT ல் இருக்கிறேன்.
TNPSC தேர்வுக்கு புதிதாக படிப்பவர்களுக்கு தேர்வு தயாரிப்பை முறையாக எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி பல குழப்பங்கள் இருப்பதாக பல மாணவ மாணவியருடன் பேசும்பொழுது எனக்குத் தெரிய வருகிறது.அவர்களுக்கு உதவுவதற்காகவே நான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.
  •  TNPSC தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?இந்தக் கேள்வியை வெற்றி பெற்றவர்களிடம் யாரிடமாவது கேட்டு இருக்கிறீர்களா?
  • சிலருக்கு இது தோன்றியிருக்கலாம்.பலருக்கு இதற்கான பதில் தெரியாமலும் இருக்கலாம்.
  • இதனை நாம் ஐந்து படிகளாக பிரிக்கலாம்.
படி: 1
1. TNPSC SYLLABUS ஐ மனப்பாடம் செய்ய வேண்டும்.
  • பெரும்பாலான TNPSC தேர்வர்கள் தாங்கள் GROUP I, GROUP 2 , GROUP 4 படிக்கிறோம் என எண்ணி அவற்றுக்கான MATERIAL என எது கிடைத்தாலும் படிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
  • கொஞ்ச காலம் கழித்தே அவர்களுக்கு தமிழ்நாடு புத்தகம் என்ற ஒன்று இருக்கிறது அதில் தான் படிக்க வேண்டும் என்ற விஷயம் தெரியவருகிறது.
  • அதன் பின்னர் அவர்கள் தமிழ்நாடு அரசு புத்தகங்களை மளமளவென்று படிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
  • ஆனால் மேலும் சில காலம் கழித்தே ஒவ்வொரு TNPSC தேர்வுக்கும் SYLLABUS என்ற ஒன்று இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கின்றனர்.இதற்குள் மூன்று வருடங்கள் ஓடி விடுகின்றன.
  • இப்படி காலத்தையும் பணத்தையும் வீணடிப்பவர்களே அதிகம்.அதன் பின்னர் தோல்வியில் துவண்டு விடுகின்றனர்.
  • ஆனால் அதைப் போல் அல்லாமல்  முதலில் மாணவ மாணவிகள் செய்ய வேண்டியது ஒவ்வொருவரும் தாங்கள் படிக்கும் தேர்வுக்கான SYLL BUS ஐ TNPSC தளத்திலிருந்து DOWNLOAD செய்து PRINT போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
  • இதுவே உங்களின் தேர்வு தயாரிப்பின் முதல் படியாக இருக்க வேண்டும்.இதை இதுவரை செய்யவில்லை என்றால் முதலில் அதை செய்யுங்கள்.
  • பின்னர் அந்த SYLLABUS ஐ POEM மனப்பாடப் பகுதியைப் போல மனனம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • இதை செய்த பின் உங்களுக்கு எந்த பாட தலைப்புகளை படிக்க வேண்டாம் என ஒரு தெளிவு பிறக்கும்.
படி 2:
2.தமிழ்நாடு அரசு புத்தக தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்.
  • புதிய புத்தகம் படிக்க வேண்டுமா அல்லது பழைய புத்தகங்களை படிக்க வேண்டுமா?
           கண்டிப்பாக புதிய புத்தகங்களை படிக்க வேண்டும்.
  •  மாணவர்களின் இரண்டாவது படியாக இந்த பகுதி இருக்க வேண்டும். 6 முதல் 12 வரை உள்ள புத்தகங்களில் நீங்கள் மனப்பாடம் செய்து வைத்திருக்கும் SYLLABUS  இன் அடிப்படையில் தேவையற்ற புத்தகங்களை நீக்கிவிட்டு தேவையான புத்தகங்களை மட்டும் வாங்கி கொள்ளுங்கள்.
  • மேலும் போட்டித் தேர்வில் பொதுஅறிவு பகுதியில் எந்த பகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை கண்டறியுங்கள்.பொதுவாகவே வரலாறு, இந்திய அரசியலமைப்பு, இந்திய பொருளாதாரம் மற்றும் கணிதம் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் (அதிக கேள்விகள்) அளிக்கப்பட்டிருக்கும்.
  • எனவே அந்த பாடப்பகுதியில் உள்ள தலைப்புகளை அதிக முக்கியத்துவம் அளித்து திரும்பத்திரும்ப திருப்புதல் செய்யுங்கள்.
  • GROUP 4 படிப்பவர்களுக்கும் இது பொருந்தும்.
  • தமிழ்நாடு அரசு புத்தகங்களை விட உயர்ந்த தரத்திலான MATERIAL என்று எதுவுமில்லை.
  • எனவே MATERIAL தேடி அலைவதை விட்டுவிட்டு முறையாக தமிழக அரசு புத்தகங்களை உங்கள் நேரத்திற்கு தகுந்தவாறு திட்டமிட்டு படிக்கத் துவங்குங்கள்.
  • உங்கள் போட்டித் தேர்வின் தன்மையைப் பொருத்து உங்கள் பாடப்புத்தகத்தில் உள்ள தகவல்களை  விரல் நுனியில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.எனவே பாடப்புத்தகங்களை குறைந்தபட்சம் ஐந்து முறையாவது தேர்வுக்கு முன் படித்திருக்க வேண்டும்.
படி 3:
3. TNPSC ஓராண்டில் நடத்திய அனைத்து போட்டித் தேர்வின் வினா விடைகளை பயிற்சி செய்திருகிறீர்களா?
  •  அனைத்து போட்டித் தேர்வுகளுக்குமே இது ஒரு பொதுவான வழிமுறை ஆகும். TNPSC ஐ பொறுத்தவரையில் ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 20 தேர்வுகள் பல்வேறு பணிகளுக்காக நடத்தப்படுகிறது.
  • பொது அறிவு தாள் என்பது ஒவ்வொரு தேர்விலும் முக்கிய பகுதியாக விளங்குகிறது.மாணவர்கள் அந்தப் பொது அறிவு தாள் கேள்வி பதில்களை பயிற்சி செய்வதன் மூலம் தாங்கள் தயாரிக்கும் தேர்வுக்கும் உதவிகரமாக இருக்கும்.
  •  எடுத்துக்காட்டாக மாணவர்கள் கணிதத்தில் பயிற்சி செய்ய வேண்டும் என்றால் 20 கேள்வித்தாள்களை எடுத்தால் அதில் குறைந்தபட்சம் 25 கணித வினாக்கள் கேட்கப்பட்டு இருக்கும்.
  • அந்த வினாக்களை பயிற்சி செய்தாலே உங்களுக்கு 20 x 25  = 500 கேள்வி பயிற்சி கிடைக்கும்.
  • இதைவிட தரமான பயிற்சியை யாராலும் வழங்க இயலாது என்பதே நிதர்சனம்.
படி 4:
4.நடப்பு நிகழ்வுகளுக்கு என்ன செய்யலாம்? புதிய SYLLABUS ன் அனைத்துப் பகுதியும் தமிழ்நாடு அரசு புத்தகத்தில் உள்ளதா?
  •   TNPSC தேர்வை பொருத்தவரை வரை குறைந்தபட்சம் 10 முதல் 25 கேள்விகள் நடப்பு நிகழ்வுகளில் இருந்து கேட்கப்படுகின்றன.
  • இதற்கு நீங்கள் தினசரி செய்தித்தாளை படித்தால் ஒரு வருட செய்தித்தாள்களில் உள்ள தகவல்களை திருப்புதல் செய்ய இயலாது.
  • எனவே தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு துறை வெளியிடும் மாத நடப்பு நிகழ்வுகள் PDF ஐ இலவசமாக DOWNLOAD செய்து படித்து வரலாம்.
  • மேலும் TNPSC வெளியிட்ட புதிய SYLLABUS ன் தகவல்கள் அனைத்தும் புதிய புத்தகத்தில் இருக்கின்றதா என பல மாணவ மாணவியர்கள் சந்தேகம் கொள்கின்றனர்.
  • சில தலைப்புகளான E-GOVERNANCE, SOCIAL WELFARE SCHEMES போன்றவற்றை தவிர மற்ற அனைத்து தலைப்புகளும் புதிய புத்தகங்களில் உள்ளன.
  • முக்கியமாக UNIT 8, UNIT 9 போன்றவற்றிக்கு முறையாக புதிய தமிழ்நாடு புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.எனவே தேவையற்ற MATERIAL ஐ தேடி அலைய வேண்டாம்.
படி 5:
5.தேர்வறையில் மன தைரியம்,சிக்கலற்ற தெளிவான சிந்தனை.
  •    பல மாணவ மாணவிகள் தேர்வு தயாரிப்பை மிகச் சிறப்பாக செய்கின்றனர்.
  • ஆனால் தேர்வு நாளில் தேர்வு அறையில் ஏற்படும் மன அழுத்தம்,தெளிவற்ற சிந்தனை (WRONG SHADING OF ANSWERS) ஆகியவற்றினால் ஒரு மதிப்பெண் அல்லது அதற்கு குறைவான மதிப்பெண்களால் தங்களுடைய அரசு வேலை வாய்ப்பினை தவற விடுகின்றனர்.
  •  இதில் மாணவ மாணவிகள் முக்கியமாக உணர்ந்து கொள்ள வேண்டியது என்னவெனில் தங்கள் தேர்வு தயாரிப்பின் போது புத்தகங்களை படிக்க மட்டும் செய்யாமல், படித்த விஷயங்களை திரும்ப ஞாபகம் வருகிறதா என்பதையு பல தேர்வுகளை எழுதி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  •  ஒவ்வொரு தேர்வை நீங்கள் எழுதும் போதும் TNPSC நடத்தும் தேர்வு எழுதுவது போன்ற மன நிலையில் ஓரிடத்தில் அமர்ந்து தேர்வறையில் என்ன செய்வீர்களோ அதுபோன்று உங்கள் தேர்வுகளை எழுத வேண்டும்.
  •  இதன் மூலம் நீங்கள் என்னென்ன பிரச்சனைகளை எதிர் கொள்கிறீர்கள் என்பதை தெளிவாக அறிந்து அதை பயிற்சியின் மூலமாக பல தேர்வுகள் எழுதும் போது சரி செய்யலாம்.
  • மேலும் இது போன்ற பிரச்சினைகளை நானும் சந்தித்துள்ளேன்.எனக்கு முன் பணியில் இருந்தவர்களிடம் ஆலோசித்து அறிந்து அதை சரி செய்து கொண்டேன்.
  • எனவே, தவறை சரி செய்து கொண்டால் மட்டுமே நாம் இங்கு வெற்றியாளனாக மாறமுடியும்.
“பழையன கழிதலும் புதியன புகுதலும்” தொடங்கட்டும்.
மேலே குறிப்பிட்ட விஷயங்களை தவறாது முனைப்போடு செயல்படுத்துங்கள் உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
-INTERVIEW TAKEN BY EXAM MACHINE TEAM

17 thoughts on “How to pass TNPSC exam in First Attempt?”

    1. சார் உங்க கோச்சிங் சென்டர் எங்க இருக்கு எனது ஊர் திண்டுக்கல்என்னோட போன் நம்பர் அனுப்புறேன் கால் பண்ணுங்க சார் 6383793056 தமிழ்ல type பண்ணுன spelling mistak இல்லாம பண்ணலாம் அதுக்குத்தான் தமிழ்ல மெசேஜ் பண்ணுனே சார் தப்பாநினைக்க வேண்டாம் 🙏🙏

  1. Really wonderful and energetic words. It will be a best motivation for me. Thanks you so much Ram sir and Exam Machine team.

  2. Best motivated for ram sir.
    Thanks for ur energetic words.
    Once again thank u Lott for exam ma chine team. always good efforts and more information exam .machine team

    gives to tnpsc aspirats

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!