பெரியாரின் தாய்மொழி கன்னடம் ஆகும்.இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மூன்று திராவிட மொழிகளைப் பேசும் ஆற்றல் பெற்றவர்.
தனது 19-வது வயதில் நாகம்மையை மணந்தார்.
அரசியல் வாழ்வு:
1918ல் ஈரோடு நகரசபைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1919ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார்.
1920 இல் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார்.
1921 ல் ஈரோட்டில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்.
1922 – 23 ம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1924 ம் ஆண்டு கேரள மாநிலத்தில் வைக்கம் என்ற ஊரில் ஆலய நுழைவு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார்.
ஆதலால் வைக்கம் வீரர் என பாராட்டப்பட்டார்.
இவரை வைக்கம் என்ற ஊருக்கு அழைத்துச் சென்றவர் ஜார்ஜ் ஜோசப் ஆவார்.
ஜார்ஜ் ஜோசப் ரோசாப்பூ துரை என மதுரை மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.
1925 ம்ஆண்டு வா வே சு ஐயரின் சேரன்மாதேவி குருகுலத்தில் நிலவிய வருணாசிரம நடவடிக்கைகளை பெரியார் எதிர்த்தார்.
1925 ல் காஞ்சிபுரத்தில் திரு வி கல்யாண சுந்தரனார் தலைமையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் கொண்டுவந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கையை காங்கிரஸ் ஏற்க மறுத்ததால், பெரியார் காங்கிரசிலிருந்து விலகினார்.
1925 ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
1929 ல் சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு செங்கல்பட்டில் நடைபெற்றது.
1930 ஜனவரியில் குடும்பக்கட்டுப்பாடு பற்றிய புத்தகத்தை வெளியிட்டார்.
தேவதாசி ஒழிப்பு மசோதாவை நிறைவேற்றுவதில் முக்கிய கருவியாக செயல்பட்டார்.
இந்த மசோதா அக்டோபர் 9,1947 சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
1937 இந்தி எதிர்ப்புப் போராட்டம் மேலும் 1948,1952,1965 ஆகிய ஆண்டுகளிலும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினார்.
1938 ல் மறைமலையடிகளின் மகள் நீலாம்பிகை அம்மையார் தலைமையில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் ஈ வெ ரா வுக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
இப்பட்டத்தை வழங்கியவர் டாக்டர் தர்மாம்பாள்.
1938 ல் நீதிக் கட்சியின் தலைவரானார்.
1939 ல் திராவிடநாடு கோரிக்கையை எழுப்பினார்.
1944 – ம்ஆண்டு அண்ணாதுரையின் தீர்மானத்தின்படி நீதிக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என மாற்றம் செய்யப்பட்டது.
70 வயதான பெரியார் 28 வயதுடைய மணியம்மையை திருமணம் செய்து கொண்டார்.
1953 – ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு.
1970 – யுனெஸ்கோ விருது பெற்றார்.
1973 – மத்திய அரசு இவரை பாராட்டி அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டது.
1973 ம்ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் தனது 94வது வயதில் இயற்கை எய்தினார்.
பி ஆர் அம்பேத்கர் எழுதிய ஜாதி ஒழிப்பு எனும் நூலை அந்த நூல் வெளிவந்தவுடன் 1936 ல் தமிழில் பதிப்பித்தார்.
இந்தி எதிர்ப்பு போராட்டம் ஆனது (1937 – 39) தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்தப் போராட்டத்துக்காக பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெரியார் – பெண் உரிமையில் பங்கு
பெரியார் ஆணாதிக்க சமூகத்தை விமர்சித்தார்.
குழந்தை திருமணத்தையும் தேவதாசி முறையும் கண்டனம் செய்தார்.
பெண்களுக்கு விவாகரத்து பெறுவதற்கு சொத்தில் பங்கு பெறுவதற்கும் உரிமை உண்டு என ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல் – பெண் ஏன் அடிமையானாள்?
சொத்துக்கள் பாதுகாவலர்களாக இருத்தல் மற்றும் தத்தெடுத்தல் ஆகியவற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்றார்.
குடும்பக் கட்டுப்பாடு கருத்தடை ஆகியவற்றை வலுவாக ஆதரித்தவர்
1989 ம் ஆண்டு தமிழ்நாடு இந்து வாரிசுரிமை சீர்திருத்த சட்டத்தை அறிமுகம் செய்தது.
அச்சட்டம் முன்னோர்களின் சொத்துகளை உடைமையாக பெறுவதில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்பதை உறுதிப்படுத்தியது.
‘திருமணம் செய்து கொடுப்பது’ என்ற வார்த்தைகளை மறுத்த அவர் அதற்கு பதிலாக திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்ட வாழ்க்கைத்துணை என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டினார்.
சமயம் குறித்து பெரியார்:
பெரியார் நாத்திக வாதத்தை (கடவுள் மறுப்பு) முன் வைத்தார்.
சமயம் என்றால் நீங்கள் மூடநம்பிக்கைகளை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று பொருள் என உறுதிபடக் கூறினார்.
கோவில்களில் நிலவிய பரம்பரை அர்ச்சகர்கள் முறையை அவர் எதிர்த்தார்.
பிராமண அர்ச்சகர்கள் வேத சடங்குகளையும் புறக்கணிக்க மக்களை ஊக்குவித்தார்.
சடங்குகள் அற்ற சாதி மறுப்பு சுயமரியாதை திருமணங்களை பரிந்துரை செய்தார்.
முறையான சமய அறிவை பெற்றுள்ள தகுதி உடைய தனிநபர்களும் அர்ச்சகராகலாம் என்று வாதிட்டார்.
பத்திரிக்கைகள்:
குடியரசு (1925) – சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள்.
ரிவோல்ட் (1928) – ஆங்கில இதழ்
புரட்சி (1933)
பகுத்தறிவு (1934) – இவ்விதழின் மூலம் தமிழ் மொழி எழுத்து சீர்திருத்தம் கொண்டு வந்தார்,ரோமானிய எண் முறையை பயன்படுத்தினார்.
விடுதலை (1935)
திராவிடன் (நீதிக்கட்சியின் நாளிதழில் சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் கட்டுரை எழுதி வந்தார்)
Thank you exam Mechine, very useful important short notes
Ssuper
Thank you so much