சிறுபாணாற்றுப்படை- 6- அதியமான் நெடுமான் அஞ்சி

அதியமான் நெடுமான் அஞ்சி – தகடூர், பூரிக்கல், தருமபுரி மாவட்டம் (ஔவைக்கு பூரிக்கல் நெல்லிக்கனி)

தகடூர் – அதிகன்-(99-103)

பாடல்

மால்வரைக் கமழ்பூஞ்சாரல் கவினிய நெல்லி அமிழ்து

விளை தீங்கனி ஒளவைக்கு ஈந்த (அதிகன்)

உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல் அரவக் கடல் தானை அதிகனும்

சொல்லும் பொருளும்

  • மால்வரை – பெரியமலை, கரியமலை

பாடலின் பொருள்

  • நறுமணம் கமழும் பெரிய மலைச்சாரலில் இருந்த அழகுமிக்க நல்லி மரத்தின் கனி, உயிர் நிலைபெற்று வாழ உதவும் அமுதத்தின் தன்மையுடையது. அது தனக்குக் கிடைக்கப்பெற்றபோது. அதனை தான் உண்ணாமல் ஒளவைக்கு வழங்கியவன் அதிகன் என்னும் வள்ளல்;
  • வலிமையும் சினமும் ஒளியும் மிக்க வேலினை உடையவன்: கடல் போன்று ஒலிக்கும் படையினையும் உடையவன் அதிகன்.

மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.

எங்கள் Telegram- ல் இணைய Link
WhatsApp குழுவில் இணைய Link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!