நள்ளி (நளிமலை நாடன்) – நெடுங்கோடு மலை, ஊட்டி, உதகமண்டலம், கோவை மாவட்டம்
நளிமலை – நள்ளி – (103-107)
பாடல்
கரவாது நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம் முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத் (நள்ளி)
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு நளிமலை நாடன் நள்ளியும்
சொல்லும் பொருளும்
- கரவாது – மறைக்காது
- துஞ்சு – தங்கு
பாடலின் பொருள்
- நள்ளி என்னும் வள்ளல், தன்னிடம் உள்ள பொருட்செல்வத்தை இல்லையென்னாது நட்புக் கொண்டவர் உள்ளம் மகிழ்ச்சி அடையுமாறு இனிய வாழ்விற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் குறிப்பறிந்து வழங்கும் பெரிய கைகளை உடையவன்.
- காலம் தவறாமல் பெய்யும் மழை போன்றவன் நள்ளி.
- போர்த் தொழிலில் வல்லமையுடையவன், மழைக்காற்று எப்போதும் இருக்கக்கூடிய உயர்ந்த மலை நாட்டை உடையவன் நள்ளி.
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.
———————————————————————————
TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
Org Code : owvff
Desktop / Laptop
http://web.classplusapp.com
Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563
———————————————————————————