இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள் (1 TO 3)

முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் (1951 – 1956)

  • குறிக்கோள்: விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் மின்சாரத் திட்டங்கள்
  • இது ஹரோத்-தோமர் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டது.
  • இதன் முதன்மை நோக்கம் நாட்டின் வேளாண்மை முன்னேற்றமானது.
  • சமூக முன்னேற்ற திட்டம் 1952ல் துவக்கப்பட்டது.
  • தேசிய அளவில் குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டம் 1952ல் தொடங்கப்பட்டது.
  • தேசிய விரிவாக்கத் திட்டம் 1953 இல் தொடங்கப்பட்டது.
  • இலக்கு : 2.1 எட்டியது : 3.6

இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1956 – 1961)

  • குறிக்கோள்: தொழில்
  • அடிப்படை மற்றும் பெரிய தொழிற்சாலைகளை மேம்படுத்துவதன் மூலம் விரைவான தொழிற்மயமாக்கல்.
  • இதனை மகலனோபிஸ் திட்டம் என்றும் கூறுவர்.
  • சோவியத் பெல்ட்மேன் வடிவம் போன்றது.
  • இந்தியா தேசிய காங்கிரஸின் ஆவடி மாநாட்டில் சமூகத்தின் சோசலிச முறையை ஊக்குவிக்கிறது.
நாடுஇடம்உதவிய நாடு
சட்டீஸ்கர்பிலாய்ரஷ்யா
ஒடிசாரூர்கேலாஜெர்மனி
மேற்கு வங்காளம்துர்காபூர்பிரிட்டன்
  • அணு ஆற்றல் ஆணையம் 1957-ல் உருவாக்கப்பட்டது.
  • தொழில் முன்னேற்றத்தை மேம்படுத்த புதிய தொழிற்கொள்கை (1956) கொண்டுவரப்பட்டது.
  • பஞ்சாயத்து ராஜ் அமைப்பு முதன் முதலில் 1959-ல் ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • இலக்கு: 4.5 எட்டியது: 4.2

 மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம் (1961 – 1966)

  • குறிக்கோள்: அடிப்படைத் தொழில்கள்
  • உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு மற்றும் வேளாண் பொருட்களை அதிகரித்தல் இதன் முக்கிய நோக்கமாகும்.
  • சீன படையெடுப்பு (1962), இந்தியா பாகிஸ்தான் போர் (1965), மோசமான பஞ்சம் (1965-1966)
  • ரூபாய் மதிப்பு 57% குறைக்கப்பட்டது.
  • இலக்கு: 6 எட்டியது: 2.4

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!