இந்தியாவில் பிராமணர் அல்லாதோர் இயக்கங்கள்

பிராமணர் அல்லாதோர் இயக்கங்கள்

  • நாமசூத்ரா இயக்கம்வங்காளம் மற்றும் கிழக்கு இந்தியா
  • ஆதி தர்மா இயக்கம்வடமேற்கு இந்தியா
  • சாத்தியசோதாக்மேற்கு இந்தியா
  • திராவிட இயக்கங்கள்தென் இந்தியா

ஜோதிபா பூலே

  • ஜோதிபா பூலே 1827 இல் மகாராஷ்டிராவில் பிறந்தார். 
  • முக்கியமாக அவர் பிராமண எதிர்ப்பியக்கத்தின் தொடக்ககாலத் தலைவரென்றே அறியப்படுகிறார்.
  • ஜோதிபாவும் அவருடைய மனைவி சாவித்திரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர் விவசாயிகள் மற்றும் தாழ்த்தப்பட்டோர்  உரிமைகளுக்காகவும் போராடினார்.
  • ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஆதரவற்றோர் இல்லத்தை நிறுவிய முதல் இந்து இவர்தான் என உறுதியாகக் கூறலாம்.
  • அவர் 1852 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை புனேயில் திறந்தார்.
  • சத்தியசோதக் சமாஜ் (உண்மையை நாடுவோர் சங்கம், Truth Seekers Society) எனும் அமைப்பை 1873 ஆம் ஆண்டு நிறுவினார்.
  • பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார் & விதவை மறுமணத்தைக் குறிப்பாக மறுமணம் மறுக்கப்பட்ட உயர்சாதி இந்துக்களின் மறுமணத்தை ஆதரித்தார்.
  • ஜோதிபா பெற்றோரில்லா குழந்தைகளுக்கென்று விடுதிகளையும் விதவைகளுக்கென காப்பகங்களையும் உருவாக்கினார்.
  • அவருடைய புத்தகமான குலாம்கிரி (அடிமைத்தனம்) ஒரு முக்கிய நூலாகும். அந்நூல் சாதிய ஏற்றதாழ்வுகளைக் கண்டனம் செய்தது.
  • தாழ்த்தப்பட்டோரின் நிலையை மேம்படுத்த தன்வீட்டின் அருகிலேயே குளம் அமைத்து தாழ்த்தப்பட்டோர் நீர் எடுத்து பயன்படுத்துமாறு செய்தார்.
  • அனைவரோடும் ஒன்றாக அமர்ந்து, சாதியை மறந்து உணவு உண்ணுதலை (சமபந்தி) விரும்பினார்.
  • இவருக்கு மகாத்மா என்ற பட்டம் வித்தல்ராவ் கிருஷ்ணஜி வண்டேகர் என்பவரால் கொடுக்கப்பட்டது.

நாராயண குரு (1854-1928)

  • 1854 இல் கேரளாவில் ஏழைப்பெற்றோர்க்கு மகனாகப் பிறந்த நாராயண குரு மலையாளம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் அறிஞராகவும் கவிஞராகவும் திகழ்ந்தார்.
  • ஸ்ரீநாராயண குரு 1902 இல் “ஸ்ரீ நாராயண குரு தர்மபரிபாலன யோகம்” (Sri Narayanaguru Dharma Paripalana Yogam (SNDP)) எனும் அமைப்பை நிறுவினார். இவ்வமைப்பு
  • பொதுப்பள்ளிகளில் சேர்வதற்கான உரிமை
  • அரசுப் பணிகளில் அமர்த்தப்படுதல்
  • சாலைகளைப் பயன்படுத்துவதற்கான, கோவில்களுக்குள் செல்வதற்கான உரிமை
  • அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற பிரச்சனைகளைக் கைகளில் எடுத்தது.
  • அருவிபுரம் எனும் ஊரில் ஒரு பெரிய கோவிலைக்கட்டிய அவர் அனைவருக்கும்  அர்ப்பணித்தார்.
  • அவருடைய இயக்கம் கேரள சமூகத்தில் குறிப்பாக ஈழவர்களுக்கிடையில் பெரும்மாற்றங்கள் நிகழ உந்து சக்தியாய்த் திகழ்ந்தது.
  • குமாரன் ஆசான், டாக்டர் பால்பு போன்ற சிந்தனையாளர்களும் கவிஞர்களும் இவருடைய சிந்தனைகளால் தூண்டப் பெற்று இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றனர்.

அய்யன்காளி (1863 – 1941)

  • அய்யன்காளி 1863 இல் திருவனந்தபுரத்திலுள்ள வெங்கனூரில் பிறந்தார்.
  • குழந்தையாய் இருக்கும்போது அவர் சந்தித்த சாதியப்பாகுபாடு அவரை சாதி எதிர்ப்பியக்கத்தின் தலைவராக மாற்றியது. 
  • ஸ்ரீநாராயண குருவால் ஊக்கம்பெற்ற அய்யன்காளி 1907 இல் சாது ஜன பரிபாலன சங்கம் (ஏழை மக்கள் பாதுகாப்புச் சங்கம் – Association for the protection of the Poor) எனும் அமைப்பை நிறுவினார்.
  • உயர்சாதியினர் மட்டுமே அணியவேண்டும் என இருந்த ஆடைகள் அணிந்தும் மேலும் மாட்டுவண்டியில் பயணம் செய்தும் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

 

  • பண்டித ரமாபாய் (1858 – 1922)
  • சமஸ்கிருத மொழியில் ஆழமான புலமை பெற்றிருந்ததால் அவருக்கு ‘பண்டித்’, ‘சரஸ்வத்’ எனும் பட்டங்கள் வழங்கப்பட்டன.
  • 1880 இல் சமூகத்தின் கீழ்மட்டக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வங்காளியைத் திருமணம் செய்து கொண்டார்.
  • கணவரும் இயற்கை எய்தவே, புனே திரும்பிய அவர் ரானடே, பண்டார்க்கர் ஆகிய தலைவர்களின் உதவியுடன் ஆரிய மகிளா சமாஜ் எனும் அமைப்பை நிறுவினார்.
  • ரானடே, பண்டார்க்கர் ஆகியோரின் உதவியோடு கைவிடப்பட்ட விதவைகளுக்காக ‘சாரதா சதன்’ (வீடற்றவர்களுக்கான இல்லம் அல்லது கற்றல் இல்லம்) எனும் அமைப்பைத் தொடங்கினார்.
  • வெகு விரைவிலேயே இந்து பெண்களைக் கிறித்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்கிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டதால் தனது செயல்பாடுகளைப் புனேவுக்கு அருகேயுள்ள கேத்கான் எனும் இடத்திற்கு மாற்றினார். அங்கு ‘முக்தி சதன்’ (சுதந்திர இல்லம்) எனும் அமைப்பை நிறுவினார்.

கந்துகூரி வீரேசலிங்கம்

  • கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு தென்னிந்தியாவில் மகளிர் விடுதலைக்காக போராடிய ஆரம்பகால போராளி ஆவார்.
  • அவர் விவேகவர்தினி என்ற பத்திரிகையை வெளியிட்டார். மேலும் அவர் 1874இல் தனது முதல் பெண்கள் பள்ளியைத் திறந்தார். 
  • விதவை மறுமணம் மற்றும் பெண் கல்வி ஆகியவற்றைச் சமூக சீர்திருத்தத்திற்கான தனது திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகக் கொண்டார்.

M.G. ரானடே மற்றும் B.M. மலபாரி

  • M.G. ரானடே மற்றும் B.M. மலபாரி ஆகியோர் பம்பாயில் பெண்கள் முன்னேற்றத்திற்கான இயக்கத்தை நடத்தினர். 
  • 1869ஆம் ஆண்டில், ரானடே விதவை மறுமண சங்கத்தில் சேர்ந்து, விதவை மறுமணம் மற்றும் பெண் கல்வியை ஊக்குவித்ததுடன் குழந்தை திருமணத்தை எதிர்த்தார்.
  • 1887இல் இந்திய தேசிய சமூக மாநாட்டை தொடங்கினார். அது சமூக சீர்திருத்தத்திற்கான ஒப்புயர்வற்ற நிறுவனமாக உருவானது. 
  • ஒரு பத்திரிகையாளரான B.M. மலபாரி 1884இல் குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்கான ஒரு இயக்கத்தைத் தொடங்கினார். 
  • துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!