முக்கியமாக அவர் பிராமண எதிர்ப்பியக்கத்தின் தொடக்ககாலத் தலைவரென்றே அறியப்படுகிறார்.
ஜோதிபாவும் அவருடைய மனைவி சாவித்திரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர் விவசாயிகள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் உரிமைகளுக்காகவும் போராடினார்.
ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஆதரவற்றோர் இல்லத்தை நிறுவிய முதல் இந்து இவர்தான் என உறுதியாகக் கூறலாம்.
அவர் 1852 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை புனேயில் திறந்தார்.
சத்தியசோதக்சமாஜ் (உண்மையை நாடுவோர் சங்கம், Truth Seekers Society) எனும் அமைப்பை 1873ஆம் ஆண்டு நிறுவினார்.
பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார் & விதவை மறுமணத்தைக் குறிப்பாக மறுமணம் மறுக்கப்பட்ட உயர்சாதி இந்துக்களின் மறுமணத்தை ஆதரித்தார்.
ஜோதிபா பெற்றோரில்லா குழந்தைகளுக்கென்று விடுதிகளையும் விதவைகளுக்கென காப்பகங்களையும் உருவாக்கினார்.
அவருடைய புத்தகமான குலாம்கிரி (அடிமைத்தனம்) ஒரு முக்கிய நூலாகும். அந்நூல் சாதிய ஏற்றதாழ்வுகளைக் கண்டனம் செய்தது.
தாழ்த்தப்பட்டோரின் நிலையை மேம்படுத்த தன்வீட்டின் அருகிலேயே குளம் அமைத்து தாழ்த்தப்பட்டோர் நீர் எடுத்து பயன்படுத்துமாறு செய்தார்.
அனைவரோடும் ஒன்றாக அமர்ந்து, சாதியை மறந்து உணவு உண்ணுதலை (சமபந்தி) விரும்பினார்.
இவருக்கு மகாத்மா என்ற பட்டம் வித்தல்ராவ் கிருஷ்ணஜி வண்டேகர் என்பவரால் கொடுக்கப்பட்டது.
நாராயண குரு (1854-1928)
1854 இல் கேரளாவில் ஏழைப்பெற்றோர்க்கு மகனாகப் பிறந்த நாராயண குரு மலையாளம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் அறிஞராகவும் கவிஞராகவும் திகழ்ந்தார்.
ஸ்ரீநாராயண குரு 1902 இல் “ஸ்ரீ நாராயண குரு தர்மபரிபாலன யோகம்” (Sri Narayanaguru Dharma Paripalana Yogam (SNDP)) எனும் அமைப்பை நிறுவினார். இவ்வமைப்பு
பொதுப்பள்ளிகளில் சேர்வதற்கான உரிமை
அரசுப் பணிகளில் அமர்த்தப்படுதல்
சாலைகளைப் பயன்படுத்துவதற்கான, கோவில்களுக்குள் செல்வதற்கான உரிமை
அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற பிரச்சனைகளைக் கைகளில் எடுத்தது.
அருவிபுரம் எனும் ஊரில் ஒரு பெரிய கோவிலைக்கட்டிய அவர் அனைவருக்கும் அர்ப்பணித்தார்.
அவருடைய இயக்கம் கேரள சமூகத்தில் குறிப்பாக ஈழவர்களுக்கிடையில் பெரும்மாற்றங்கள் நிகழ உந்து சக்தியாய்த் திகழ்ந்தது.
குமாரன் ஆசான், டாக்டர் பால்பு போன்ற சிந்தனையாளர்களும் கவிஞர்களும் இவருடைய சிந்தனைகளால் தூண்டப் பெற்று இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றனர்.
அய்யன்காளி (1863 – 1941)
அய்யன்காளி 1863 இல் திருவனந்தபுரத்திலுள்ள வெங்கனூரில் பிறந்தார்.
குழந்தையாய் இருக்கும்போது அவர் சந்தித்த சாதியப்பாகுபாடு அவரை சாதி எதிர்ப்பியக்கத்தின் தலைவராக மாற்றியது.
ஸ்ரீநாராயண குருவால் ஊக்கம்பெற்ற அய்யன்காளி 1907 இல் சாது ஜன பரிபாலன சங்கம்(ஏழை மக்கள் பாதுகாப்புச் சங்கம் – Association for the protection of the Poor) எனும் அமைப்பை நிறுவினார்.
உயர்சாதியினர் மட்டுமே அணியவேண்டும் என இருந்த ஆடைகள் அணிந்தும் மேலும் மாட்டுவண்டியில் பயணம் செய்தும் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
பண்டித ரமாபாய் (1858 – 1922)
சமஸ்கிருத மொழியில் ஆழமான புலமை பெற்றிருந்ததால் அவருக்கு ‘பண்டித்’, ‘சரஸ்வத்’ எனும் பட்டங்கள் வழங்கப்பட்டன.
1880 இல் சமூகத்தின் கீழ்மட்டக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வங்காளியைத் திருமணம் செய்து கொண்டார்.
கணவரும் இயற்கை எய்தவே, புனே திரும்பிய அவர் ரானடே, பண்டார்க்கர் ஆகிய தலைவர்களின் உதவியுடன் ஆரிய மகிளா சமாஜ் எனும் அமைப்பை நிறுவினார்.
ரானடே, பண்டார்க்கர் ஆகியோரின் உதவியோடு கைவிடப்பட்ட விதவைகளுக்காக ‘சாரதா சதன்’(வீடற்றவர்களுக்கான இல்லம்அல்லதுகற்றல் இல்லம்) எனும் அமைப்பைத் தொடங்கினார்.
வெகு விரைவிலேயே இந்து பெண்களைக் கிறித்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்கிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டதால் தனது செயல்பாடுகளைப் புனேவுக்கு அருகேயுள்ள கேத்கான் எனும் இடத்திற்கு மாற்றினார். அங்கு ‘முக்தி சதன்’ (சுதந்திர இல்லம்) எனும் அமைப்பை நிறுவினார்.
கந்துகூரி வீரேசலிங்கம்
கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு தென்னிந்தியாவில் மகளிர் விடுதலைக்காக போராடிய ஆரம்பகால போராளி ஆவார்.
அவர் விவேகவர்தினி என்ற பத்திரிகையை வெளியிட்டார். மேலும் அவர் 1874இல் தனது முதல் பெண்கள் பள்ளியைத் திறந்தார்.
விதவை மறுமணம் மற்றும் பெண் கல்வி ஆகியவற்றைச் சமூக சீர்திருத்தத்திற்கான தனது திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகக் கொண்டார்.
M.G.ரானடே மற்றும் B.M. மலபாரி
M.G. ரானடே மற்றும்B.M. மலபாரி ஆகியோர் பம்பாயில் பெண்கள் முன்னேற்றத்திற்கான இயக்கத்தை நடத்தினர்.
1869ஆம் ஆண்டில், ரானடே விதவை மறுமண சங்கத்தில் சேர்ந்து, விதவை மறுமணம்மற்றும் பெண் கல்வியை ஊக்குவித்ததுடன் குழந்தை திருமணத்தை எதிர்த்தார்.
1887இல் இந்திய தேசிய சமூக மாநாட்டை தொடங்கினார். அது சமூக சீர்திருத்தத்திற்கான ஒப்புயர்வற்ற நிறுவனமாக உருவானது.
ஒரு பத்திரிகையாளரான B.M. மலபாரி 1884இல்குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்கான ஒரு இயக்கத்தைத் தொடங்கினார்.
துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.