இரண்டாம் உலகப் போர் மற்றும் அதன் தாக்கங்கள்

இரண்டாம் உலகப் போர் மற்றும் அதன் தாக்கங்கள்

காங்கிரஸ் அமைச்சரவையின் பதவி விலகல்

  • 1939இல் இரண்டாம் உலகப்போர் வெடித்தது. இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த லின்லித்கோ காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் இந்தியாவும் போரில் இருப்பதாக உடனடியாக அறிவித்தார்.
  • எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகின.
  • முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையை உறுதியுடன் வலியுறுத்தியபடி லண்டனிலிருந்து இந்தியா திரும்பிய ஜின்னா 1934 ஆம் ஆண்டு முஸ்லீம் லீக்கிற்கு புத்துயிர் ஊட்டினார்.
  • காங்கிரஸ் ஆட்சி முடிவடைந்ததை மீட்பு நாளாக 1939 டிசம்பர் 22 இல் முஸ்லிம் லீக் கொண்டாடியது.
  • 1939 ஆம் ஆண்டு காந்தியின் வேட்பாளரான பட்டாபி சீதாராமையாவை தோற்கடித்து சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸின் தலைவரானார்.
  • காந்தி ஒத்துழைக்க மறுத்ததால், சுபாஷ் சந்திரபோஸ் தனது பதவியை ராஜினாமா செய்து பார்வர்ட் பிளாக்கைத் தொடங்கினார்.
  • கல்கத்தா அமர்வில் ராஜேந்திர பிரசாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • கம்யூனிஸ்டுகள் ஆரம்பத்தில் இரண்டாம் உலகப் போரை “ஏகாதிபத்தியப் போர்” என்று கூறி எதிர்த்தனர்.
  • சோவியத் யூனியன் மீது நாஜி தாக்குதல் நடத்தியபோது, கம்யூனிஸ்டுகள் அதை மக்கள் போர்என்று அழைத்து ஆங்கிலேயர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
  • இதன் விளைவாக 1942 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான தடை நீக்கப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!