ஆகஸ்டு நன்கொடை & தனிநபர் சத்தியாகிரகம்

ஆகஸ்டு நன்கொடை

  • ஆகஸ்ட் 1940 இல் வைஸ்ராய் லின்லித்கோ காங்கிரஸை திருப்திப்படுத்த சில சலுகைகளை வழங்கினார்.
  • போருக்குப் பிறகு வரையறுக்கப்படாத ஒரு தேதியில் டொமினியன் அந்தஸ்து  வழங்குவதாக உறுதி வழங்கினார்.
  • புதிய அரசியலமைப்பை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும்.
  • அதிகமான இந்தியர்களைக் கொண்டு அரசப்பிரதிநிதியின் குழுவை (செயற்குழு) விரிவாக்கம் செய்தல்
  • இந்திய உறுப்பினர்களைக் கொண்ட போர் ஆலோசனைக் குழுவை உருவாக்குதல்
  • எனினும் குறிப்பிடப்படாத எதிர்காலத்தில் தன்னாட்சி (டொமினியன்) தகுதி என்ற சலுகை, காங்கிரசுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.
  • எனினும் ஜெர்மனி மற்றும் இத்தாலியின் பாசிச சக்திகளுக்கு எதிராகப் போராடிய பிரிட்டிஷ் அரசுக்கு இடையூறுகளை ஏற்படுத்த காங்கிரஸ் விரும்பவில்லை.

 தனிநபர் சத்தியாகிரகம்

  • புதிய அரசியல் சீர்திருத்தங்கள் எதையும் கொண்டுவர பிரிட்டிஷ் அரசு மறுத்தது.
  • பேச்சு சுதந்திரம் மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் சங்கங்களை அமைப்பதற்கான உரிமையை பறித்து அரசாணை பிறப்பித்தது.
  • இந்நிலையில் காங்கிரஸார் பலர் ஒன்று கூடி, காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும்படி, காந்தியை கேட்டுக் கொண்டனர். 
  • ஜெர்மனி மற்றும் இத்தாலியின் பாசிசப் படைகளுக்கு எதிரான போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களுக்கு இடையூறு விளைவிக்காத காரணத்தால் சில தனிநபர்களால் வரையறுக்கப்பட்ட சத்தியாகிரகத்தை காந்தி அறிவித்தார்.
  • இந்தியா நாசிசத்தை எதிர்த்தாலும் அது தானாக முன்வந்து போரில் இறங்கவில்லை என்பதை உலகுக்கு உணர்த்துவதே இதன் நோக்கமாக இருந்தது.
  • 1940 அக்டோபர் 17 ஆம் நாள் வினோபா பாவே (வினோபா பாவே மகாராஷ்டிரத்தில் அமைந்த தனது பாவ்னர் ஆசிரமத்தருகே) சத்தியாகிரகப் போராட்டத்தை முதன்முதலாக ஆரம்பித்தார்.
  • தனிநபர் சத்தியாகிரகத்தில் நேரு இரண்டாவது நபர்.
  • சத்தியாகிரகிகள் பேச்சு சுதந்திரத்தில் நாட்டம் கொண்டிருப்பர். சத்தியாகிரகிகளை அரசு கைது செய்யாமல் விட்டுவிடுமானால், மீண்டும் சத்தியாகிரகம் செய்வது, அப்போதும் அரசு கைது செய்யவில்லையானால் கிராமத்திற்கு சென்று மக்களை அழைத்துக்கொண்டு டெல்லியை நோக்கி பயணத்தை தொடங்குவர், இதனால் “டெல்லி சலோ இயக்கம்” என்று அறியப்பட்ட ஒரு இயக்கம் தொடங்கியது
  • சத்தியாகிரகம் ஆண்டு இறுதி வரை தொடர்ந்தது.
  • இந்தக் காலகட்டத்தில் 25,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!