இரா.இளங்குமரனார் & அ. முத்துலிங்கம்

தமிழ்த்திரு இரா.இளங்குமரனார் (பாவாணரின் தாசன்)

  • விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய் தமிழினை இழந்துவிடக்கூடாது

இரா.இளங்குமரனார்

  • செந்தமிழ் அந்தனர் என்று அழைக்கப்படுபவர் இரா. இளங்குமரனார்.
  • தேவநேயப் பாவாணரின் தாசன் தமிழ்த்திரு இரா.இளங்குமரனார் ஆவார்.
  • தமிழ்த்தென்றல் திரு.வி.க. போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் இரா.இளங்குமரனார்.
  • சொல் ஆராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் இரா.இளங்குமரனார் ஆவார்.
  • திருச்சி அல்லூரில் “திருவள்ளுவர் தவச்சாலை” அமைத்தவர் இரா. இளங்குமரனார். பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் இரா.இளங்குமரனார்.

இரா.இளங்குமரனார் எழுதிய நூல்கள்

  • தமிழ் இசை இயக்கம்
  • தனித்தமிழ் இயக்கம்
  • தேவநேயம்
  • பாவாணர் வரலாறு
  • இலக்கண வரலாறு
  • திருக்குறள் தமிழ் மரபுரை
  • குண்டலகேசி உரை
  • யாப்பருங்கலம் உரை
  • புறத்திரட்டு உரை
  • காக்கைப் பாடினிய உரை
  • தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள்
  • தமிழ் வழித் திருமணங்களை நடத்தி வருபவர் இரா.இளங்குமரனார்.
  • தமிழாசிரியர். நூலாக்கப் பணிகளை விரும்பிச் செய்பவர், தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர் இரா.இளங்குமரனார்.
  • திருவள்ளுவர் தவச்சாலை, பாவாணார் நூலகமும் திருச்சிக்கு அருகில் அல்லூரில் அமைத்துள்ளார் இரா. இளங்குமரனார்.
  • பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர். தொகுப்பாசிரியர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.

 

அ. முத்துலிங்கம்

  • எழுத்தாளர் அ. முத்துலிங்கம், இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர்.
  • எழுத்தாளர் அ. முத்துலிங்கம் தற்பொழுது கனடாவில் வசித்து வருகிறார்.
  • 1996 ஆம் ஆண்டு வம்ச விருத்தி என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக தமிழ்நாடு அரசின் முதல் பரிசினைப் பெற்றவர் எழுத்தாளர் அ. முத்துலிங்கம்.
  • 1989 ஆம் ஆண்டு வடக்கு வீதி என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக இலங்கை அரசின் சாகித்தியப் பரிசையும் பெற்றிருக்கின்றார் எழுத்தாளர் அ. முத்துலிங்கம்.

எழுத்தாளர் அ. முத்துலிங்கம் வெளியிட்டிருக்கின்ற சிறுகதைத் தொகுப்புகள்

  • வடக்கு வீதி
  • அக்கா
  • வம்ச விருத்தி
  • மகாராஜாவின் ரயில் வண்டி 
  • திகட சக்கரம்
  • எழுத்தாளர் அ. முத்துலிங்கம் பணி தொடர்பாகப் பல நாடுகளுக்குப் பயணித்திருக்கிறார்.

ஆறாம் திணை – அ. முத்துலிங்கம்

  • ஈழத்திலிருந்து புலம் பெயரும் தமிழ் மக்களின் துயரை சொல்லும் கதை
  • ஈழத்திலிருந்து புலம்பெயந்தவர்களுக்கு ஆறாம் திணை – பனியும் பனி சார்ந்த நிலமும்.
  • ஓர் இனத்தை அழிப்பதற்கு அவர்கள் நூல்களை எரித்தால் போதும், அவர்கள் அறிவு மேலும் வளர்வதற்கு முடியாமல் நின்றுவிடும்.
  • அறிவைச் சாகடித்துவிட்டால் மனிதன் செத்துவிடுவான்.

-‘ஃபாரன்ஹீட் 451 நூல்.

  • தங்களுடைய தாய்நாட்டிலிருந்து வெளியேறியவர்களும் வெளியேற்றப் பட்டவர்களும் எதிர்கொள்ளும் அவலங்களை ஆறாம் திணை ஆறாத வடுவாகப் பதிவு செய்கிறது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!