Skip to content இரா.பி.சேது பிள்ளை சொல்லின் செல்வர் எனப் போற்றப்படுபவர் இரா.பி.சேது பிள்ளை, செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இரா.பி.சேது பிள்ளை. இந்திய அரசின் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் நூல் இரா.பி.சேது பிள்ளை எழுதிய தமிழின்பம் என்னும் நூல் ஆகும். இரா.பி.சேது பிள்ளை எழுதியுள்ள நூல்கள் தமிழகம் ஊரும் பேரும் தமிழ் விருந்து ஆற்றங்கரையினிலே மேடைப்பேச்சு கடற்கரையினிலே தமிழறிஞர், வழக்குரைஞர். மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், எனப் பன்முகத் திறன் பெற்றவர் இரா.பி.சேது பிள்ளை. கடற்கரையினிலே என்னும் நூலிலிருந்து வ.உ. சிதம்பரனார் பேசுவதாக அமைந்த பாடப்பகுதி கொடுக்கப்பட்டுள்ளது.
கப்பலோட்டிய தமிழர் (வ.உ. சிதம்பரனார்) இரா.பி.சேது பிள்ளை மாலைப்பொழுது தூத்துக்குடி கடற்கரையினிலே வ.உ. சிதம்பரனார் தனது பழைய நினைவுகளை பேசுவதாக அமைந்த பாடம் ஆங்கில அரசாங்கம் விதித்த சிறை வாசம் முடிந்த பின்னர்த் தூத்துக்குடிக்குத் திரும்பினார் வ.உ. சிதம்பரனார். சுதேசக் கப்பல் சுதேசக் கப்பல் கம்பெனியின் தலைவர் பாண்டித்துரை. சுதேசக் கப்பல் கம்பெனியின் செயலாளர் வ.உ. சிதம்பரனார். சுதேசக் கப்பல் முதல் பயணம் தூத்துக்குடியில் இருந்து கொழும்புத் துறைமுகம் நோக்கிப் புறப்பட்டது. சுதேசக் கப்பல் கம்பெனியின் வேலையில் இருந்து விலகிக்கொண்டால் (நூறு) 100 ஆயிரம் ரூபாய் தருவதாக ஆங்கிலேயர்கள் தருவதாக கூறினர். வந்தே மாதரம் – திலகரும் பாரதியும் வந்தே மாதரம் என்ற சுதந்திர மந்திரம் வங்க நாட்டில் பிறந்தது. காட்டுக்கனல் போல் வந்தே மாதரம் என்ற சுதந்திர மந்திரம் எங்கும் பரவிற்று. சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என்று வடநாட்டில் மார்தட்டி நின்ற மராத்திய வீரர் பாலகங்காதர திலகர். தென்னாட்டில் தேன்றிய அஞ்சா நெஞ்சினர். செஞ்சொற்கவிஞர், நாவீறுடை நண்பர் பாரதியார். வந்தே மாரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்பேம் என்று பாட்டிசைத்து நாட்டிலே ஆர்வத்தைத் தட்டி எழுப்பினார் பாரதியார். ‘வந்தே மாதரம்’ என்றால் வந்தது தொல்லை. வந்தே மாதரம் வாசகத்தில் ஒரு வஞ்சகம் இருப்பதாக ஆங்கில அரசாங்கம் கருதியது. பொதுக்கூட்டங்களிலும் தொழிலாளர் கூட்டங்களிலும் பேசும் போது வந்தே மாதரம் சுதந்திர மந்திரத்தை அழுத்தமாக சொல்வது வழக்கம். சிறை தண்டனை வ.உ. சிதம்பரனாருக்கு (இரட்டை) 2 தீவாந்தர தண்டனை விதிக்கப்பட்டது. அப்பீல் கோர்ட்டிலே சிறைத் தண்டனையாக மாறிற்று அத்தீர்ப்பு. (ஆறு) 6 ஆண்டு கோவைச் சிறையிலும் கண்ணனூர்ச் சிறையிலும் கொடும்பணி செய்தேன். சிறைச்சாலையை தவச்சாலையாக நான் கருதினேன், கை வருந்த மெய் வருத்தச் செய்த பணிகள் எல்லாம் தாய் நாட்டின் விடுதலைக்காகப் புரிந்த அருந்தவம் என்று எண்ணி உள்ளம் மகிழ்ந்தேன். ஒரு ஜெயிலர், அதிகாரத் தோரணையில் எனக்குச் சில புத்திமதிகளைச் சொன்னான். சிறைச்சாலையில் செக்கிழுத்த துயரத்தை மாற்றியது என் செந்தமிழன்றோ? கைத்தோல் உரியக் கடும்பணி புரிந்தபோது என் கண்ணீரை மாற்றியது கன்னித் தமிழன்றோ? சிறைச்சாலையில் நூல்கள் தொல்காப்பியத்தைப் படித்துப் படித்து என் தொல்லையெல்லாம் மறந்தேன். இன்னிலையைக் கற்று என் இன்னல்களையெல்லாம் வென்றேன். ஆங்கில மொழியில் ஆலன் என்பவர் இயற்றிய அறிவு நூல்களில் ஒன்றை நான் மனம் போல் வாழ்வு என்று தமிழில் மொழிபெயரத்தேன். உயர்ந்த நூல்களில் கண்ட உண்மைகளை இளைஞரும் அறிந்து கொள்ள மெய் அறம், மெய் அறிவு என்ற சிறு நூல்களை இயற்றினேன். நீதிபதி பின்ஹே கூற்று சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்ப்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு (ஐந்து) 5 நிமிடங்களில் விடுதலை பெறும் சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி பின்ஹேவின் கூற்று. பாண்டித்துரையோடு உறவு இந்த நகரத்தில் வக்கீல் வேலை பார்த்து வளமுற வாழ்ந்த நாளில் வள்ளல் பாண்டித்துரையோடு உறவு கொண்டு தமிழ் நூல்களைக் கற்றேன். பாயக் காண்பது சுதந்திர வெள்ளம் பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம் என்று நாம் பாடும் நாள் எந்நாளோ? என்று பேசிக் கடற்கறையை விட்டு அகன்றார் வீர சிதம்பரனார். கொற்கைத் துறைமுகம் கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக்கொடி உயர்ந்து பறந்தது. கொற்கைக்கடல் முத்து வளம் கொழித்தது. பழங்குடிகளாகிய பரதவர் மரக்கல வணிகத்தால் வளம் பெற்று மாடமாளிகையில் வாழ்ந்தார்கள். இது, சென்ற காலத்தின் சிறப்பு. இன்று பரங்கியர் கப்பலன்றோ எங்கும் பறந்து திரிகின்றது? கொள்ளை இலாபம் அடைகின்ற வெள்ளையர் கப்பலில் கூலி வேலை செய்கின்றனர் நம் நாட்டு மக்கள்! சொந்த நாட்டிலே வந்தவருக்கு அடிமை செய்து வயிறு வளர்ப்பது ஒரு வாழ்வாகுமா? வசையொழிய வாழ்வாரே வாழ்வார் என்ற வள்ளுவர் வாய்மொழியை மறக்கலாமா? தூத்துக்குடி துறைமுகம் தென்னாட்டுத் துறைமுகமே! (தூத்துக்குடி) (முந்நூறு) 300 ஆண்டுகளாக நீயே இம்முத்துக் கரையில் முதன்மை பெற்று விளங்குகின்றாய்! முன்னாளில் வளமுற்றிருந்த கொற்கைப் பெருந்துறையின் வழித்தோன்றல் நீயே(தூத்துக்குடி துறைமுகம்) என்று உணர்ந்து உன்னை வணங்குகின்றேன். வாழ்த்துகின்றேன். தமிழ்ப் பெருந்துறையே! உன் தாழ்விலும் வாழ்விலும் எந்த நாளிலும் என் தமிழ்த் தாயை நான் மறந்தறியேன். Post Views: 1,602
Related error: Content is protected !!