ஐங்குறுநூறு
- ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு.
- ஐங்குறுநூறு மூன்றடிச் (3) சிற்றெல்லையும் ஆறடிப் (6)பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல்.
- ஐங்குறுநூறு திணை ஒன்றிற்கு நூறு (100)பாடல்களாக, ஐந்து (5)திணைகளுக்கு ஐந்நூறு (500)பாடல்கள் கொண்டது.
ஐந்து திணைகளைப் பாடிய புலவர்கள் *
- குறிஞ்சித் திணை – கபிலர்
- முல்லைத் திணை – பேயனார்
- மருதத் திணை – ஓரம் போகியார்
- நெய்தல் திணை – அம்மூவனார்.
- பாலைத் திணை – ஓதல் ஆந்தையார்
பேயனார்
- சங்ககாலப் புலவர் பேயனார் இயற்றி உள்ள 106 பாடல்கள் கிடைத்துள்ளன.
ஐங்குறுநூறு தொகுத்தவர் – தொகுப்பித்தவர்
- ஐங்குறுநூற்றினை தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்
- ஐங்குறுநூற்றினை தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை.
ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்துப் பாடல்
- ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
ஐங்குறுநூறு பேயனார்
முன் அறிமுகம்
- பொருளீட்டுவதற்காக வெளியூர் சென்றான் தலைவன்.
- அவன், தான் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்ற காலத்திற்கு முன்னரே வீட்டிற்குத் திரும்புகிறான்.
- வருவதாகக் கூறிச் சென்ற மழைக்காலம் முடியும் முன்னரே வந்துவிட்டதனை உணர்த்த நினைக்கிறான்.
திணை – முல்லை
துறை
கார் கால (மழைக்காலம்) பருவங் குறித்துப் பிரிந்த தலைமகன், அப்பருவத்திற்கு முன்னே வந்தமை தோன்ற தலைவிக்கு உரைத்தது.
பாடலின் சுருக்கம்
- சொன்ன காலத்துக்கும் முன்பே வந்தேன் சொல்லாமல் சொல்லும் மலர்களைக் கண்டேன் அகன்ற கடைவிழி உடையவளே காயா கொன்றை நெய்தல் முல்லை செம்முல்லை பிடவமாய்க் கொல்லைப் புறத்தில் கொட்டிக் கிடக்கும் பேரழகுப் பூக்களின் பாடலைக் கொண்டாடி மகிழ்வோம் விரைந்தோடி வா
ஆடுகம் விரைந்தே
கிழவன் பருவம் பாராட்டும் பத்து
பாடல் – 412
காயா கொன்றை நெய்தல் முல்லை போதவிழ் தளவமொடு பிடவலர்ந்து
கவினிப் பூவணி கொண்டன்ற கண்ணி ஆடுகம் விரைந்தே பேரமர்க் கண்ணி ஆடுகம் விரைந்தே
-பேயனார்
பாடலின் பொருள்
“பெரிய அழகிய கண்களை உடையவளே!
அழகிய மாலை நேரத்தில் முல்லை நிலத்தில் காயா, கொன்றை, நெய்தல், முல்லை, செம்முல்லை, பிடவம் ஆகிய மலர்கள் பூத்திருக்கின்றன. அப்பூக்களைப் பார்த்து மகிழ்ந்து அட, ‘விரைந்து வா” என்று தலைவன் தன் தலைவியை அழைக்கிறான்
மழைக்கால மலர்கள்
- காயா – கொன்றை பிடவம்
- நெய்தல் – முல்லை செம்முல்லை
சொல்லும் பொருளும்
- போது – மொட்டு
- அலர்ந்து – மலர்ந்து
- கவினி – அழகுற
முந்தைய ஆண்டு வினாக்கள்
“மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது? (2 முறை கேட்கப்பட்டுள்ளது)
(A) குறுந்தொகை
(B) ஐங்குறுநூறு
(C) அகநானூறு
(D) நற்றிணை
(E) விடை தெரியவில்லை
மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது? (2 முறை கேட்கப்பட்டுள்ளது)
(A) ஐங்குறுநூறு
(B) குறுந்தொகை
(C) கலித்தொகை
(D) புறநானூறு
நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும் எம்மனை வதுவை நல்மணம் கழிக – இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
(A) குறுந்தொகை
(B) ஐங்குறுநூறு
(C) நற்றிணை
(D) அகநானூறு
(E) விடை தெரியவில்லை
ஐங்குறுநூறு நூலைத் தொகுப்பித்தவர் யார்?
(A) புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
(B) பன்னாடு தந்த மாறன் வழுதி
(C) பாரதம் பாடிய பெருந்தேவனார்
(D) யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
ஐங்குறுநூற்றில் முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவரின் பெயரைத் தேர்ந்தெடு
(A) பேயனார்
(B) கபிலர்
(C) ஓதலாந்தையார்
(D) ஓரம்போகியார்
ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் யார்?
(A) உருத்திரசன்மர்
(B) உக்கிரப் பெருவழுதி
(C) பூரிக்கோ
(D) புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது என்று நம்புகிறோம்.இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது சேர்க்கவேண்டிய தகவல் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் தெரிவித்து இந்த பகுதியை மேலும் பயனுள்ள வகையில் மாற்ற எங்களுக்கு நீங்கள் உதவலாம்.
———————————————————————————
TNPSC தேர்வுகளுக்காக, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை SCERT பொதுத்தமிழ் பாடவாரியாக தேர்வு எழுத (மொத்தம் 70+ தேர்வுகள்) கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
Org Code : owvff
Desktop / Laptop
http://web.classplusapp.com
Android App
https://play.google.com/store/apps/details?id=co.stan.owvff
iOS
https://apps.apple.com/in/app/myinstitute/id1472483563
———————————————————————————