ஐரோப்பியர்களின் வருகை – டச்சுக்காரர்கள்

டச்சுக்காரர்கள்

  • தென்கிழக்கு ஆசியாவிற்கு 1595-ல் பயணம் மேற்கொண்ட முதல் டச்சுக்காரர் ஜேன் ஹியூஜென் வான் லின்ஸ்சோட்டன் ஆவார்.
  • 1602-ல் நெதர்லாந்தின் ஒருங்கிணைந்த கிழக்கிந்திய கம்பெனி அல்லது டச்சு கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டது. டச்சுக்காரர்கள் மிளகு மற்றும் பிற நறுமணப்பொருட்களின் மீது ஏகோபத்திய உரிமை செலுத்தியதோடு அடிமை வர்த்தகத்தையும் மேற்கொண்டனர்.
  • 1605-ல் போர்ச்சுகீசியரிடமிருந்து அம்பாய்னா (இந்தோனேசியா) பகுதியை கைப்பற்றினர்.
  • 1605-ல் இந்தியாவில் மசூலிப்பட்டினத்தில் தங்களது முதல் வர்த்தக மையத்தை நிறுவினர்.
  • 1612-ல் பழவேற்காட்டில் ஜெல்ரியா எனும் கோட்டையைக்கட்டி தங்களது முதல் தலைமை அலுவலகத்தை நிறுவினர்.
  • 1623-ல் அம்பாய்னா படுகொலை எனும் நிகழ்வில் பிரிட்டிஸ்காரர்களை படுகொலை செய்தது இவர்களிடையே நிரந்தர பகையை ஏற்படுத்தியது.
  • 1641-ல் மலாக்காவை போர்ச்சுகீசியர்களிடமிருந்து கைப்பற்றினர்.
  • 1690-ல் நாகப்பட்டினத்தை போர்ச்சுகீசியர்களிடமிருந்து கைப்பற்றியபின் அவர்களின் தலைநகரமாக மாறியது.
  • 1759-ல் பெடேரா போரில் பிரிட்டிஷ் டச்சுக்காரர்களை வீழ்த்தினர், பின் 1795-ல் இந்தியாவிலிருந்து முழுவதுமாக வெளியேற்றப்பட்டனர்.
  • 1800-ல் டச்சு கிழக்கிந்திய நிறுவனம் எனும் புதிய நிறுவனத்தை தொடங்கி நறுமணத்தீவுகள் என அழைக்கப்பட்ட கிழக்கு ஆசிய பகுதிகளில் அவர்கள் கவனம் செலுத்த தொடங்கினர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!